உடனடிச்செய்திகள்

Wednesday, December 7, 2011


முல்லைப்பெரியாறு அணை உரிமையை மறுக்கும் மலையாளிகளை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்

 பரப்புரை போராட்டம் நடத்திய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைது...


7.12.2011 காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சித் தோழர்கள் ’’முல்லை பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளியே தமிழகத்தை விட்டு வெளியேறு” என்ற ஆவேச முழக்கத்துடன் பரப்புரை- போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களிடம் உண்மையை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி மலையாளிகளின் நிறுவனங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க தோழர்கள் கைது செயப்பட்டுள்ளனர்

சென்னை:

சென்னை தியாகராயர் நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு சென்ற கட்சியின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி மற்றும். தமிழ்ச்சமரன், தமிழ்க்கனல், பால் முருகன், ஆவடிகண்ணன், வெற்றித்தமிழன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டம் காரணமாக அந்நிறுவனத்தின் வெளிக்கதவு சாத்தப்பட்டது. காவல் துறையினர் பெறும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். தியாகராயர் நகர் எங்கும் பரபரப்பு. நடத்த வேண்டிய போராட்டம் தான் என்று அப்பகுதியிலிருந்த பொது மக்கள் ஆதரவு தெரிவித்தனர்

கோவை:

கோவையில் தமிழ்த் தேசப்பொது வுடைமைக்கட்சியின் கிளைச் செயலாளரும் தமிழக இளைஞர் முன்னணியின் மாநகரச் செயலாளருமான தோழர் பா.சங்கர் தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் காந்திபுரம் கிரசஸ்கட் சாலையில் மலையாளிகளை வெளியேற்றுவோம் என்ற முழகத்ததோடு ஆர்ப்பாட்டம் செய்து துண்டறிக்கைகள் வழங்கினர். மலையாளிகள் கடைகள் தாக்கப்பட்டதாக த.தே.பொ.க வினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்

இப்போராட்டத்தால் அச்ச மடைந்த ஜாய் ஆலுக்காஸ், பிரின்ஸ் ஆலுக்காஸ் ஜோசப் ஆலுக்காஸ், கஜானா, முத்துட், மணப்புரம் கோல்டு, உள்ளிட்ட மலையாளிகளின் நகை நிறுவனங்களும் காந்தி புரத்தைச் சுற்றியுள்ள பெருமளவிலான மலையாளிகளின் ரொட்டி கடைகளும், தேனிர் கடைகளும் மூடப்பட்டன.

ஒசூர்:

ஓசூர் விடியற்காலையிலிருந்தே ஓசூர் த.தே.பொ.க வினர் கட்சியின் தலைமை செயற்குழு உறுபினர் கோ.மாரிமுத்து தலைமையில் அசோக் லைலாண்ட், டைட்டான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாயில்களில் விளக்கவுரை நிகழ்த்தி துண்டறிக்கைகள் வழங்கி பரப்புரை செய்த பின் ஓசூர் நகர கடை வீதிகளில் பரப்புரை செய்து  மலையாள ஆலுக்காஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகை மாளிகையை தாக்கி சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி காவல் துறையினர் 12 தோழர்களை கைது செய்தனர்

தஞ்சை:

கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு முனியாண்டி தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

மலையாளிகளின் நிறுவனங்களான முத்தூட் பைனானாஸ், ராயல் காபி கடை உள்ளிட்டவை தாக்கப்பட்டதாக த.தே.பொ,க தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்றையினர் தேடி வருகின்றனர்.

தொலைக்காட்சி நேர்காணல் அளிக்க சென்ற த.தே.பொ.க தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் ஆகியோர் முன்னெச்சரிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

குடந்தை

த.தே.பொ.க குடந்தை நகரச்செயலாளர் விடுதலை சுடர் தலைமையில் ஆலுக்காஸ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலூக்காஸ் நகை நிறுவனம் தாக்கி சேதப்படுத்தப்பட்டதாக தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 1/2 லட்சம் சொத்துக்கள் சேதமடைந்தாக ஆலுக்காஸ் நிறுவனத்தினர் புகார் கொடுத்தன் அடிப்படையில் தனியார் சொத்துக்கள் சேத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் த.தே.போ.க வினர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேரில் சென்று கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு போராடிய த.தே.பொ.க தோழர்களுக்கு  வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளிகள் வெளியேறட்டும்- திவம்பர் 7 முதல் பரப்புரை இயக்கம் - பெ.மணியரசன் அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால்

தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்  அறிக்கை

 

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிட மூர்க்கமாக முயல்கிறார்கள் மலையாளிகள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலை யாளிகளிடம் இனவெறியைத் தூண்டி, அணையை உடைப்பதற்கான ஆயத்தங்கள் செய்து வருகின்றன.

 

எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளத்தைக் கட்டுப்படுத்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவிபோல் நயவஞ்சக நாடகமாடுகிறது. மலையாளிகளின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

 

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

ஆனால் கேரள அரசும், அரசியல் கட்சிகளும் கழிவறைத் தாளுக்குத் தரும் மதிப்பைக்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தரவில்லை. 142 அடிவரை தண்ணீர் தேக்கவிடாமல் தமிழகத்தைத் தடுத்துவிட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை. மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றைக் கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு, விசாரணையில் உள்ளது.

 

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதித்திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப்போவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள். இப்போது அந்த மூடு திரையை நீக்கிவிட்டு அணையை உடைப்போம் என்று அம்மணமாக அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள்.

 

அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதற்குமுன் 2001-ல் இடுக்கியில் 4.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள். 2011 சனவரி 20 ஆம் நாள் அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழு அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது.

 

மலையாளக் காங்கிரசுத் தலைவர்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுத் தலைவர்களும் பொய்யுரைக்கக் கூச்சப்படாதவர்கள்; புரளி கிளப்ப அச்சப்படாதவர்கள். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாகப் பரப்புரைக் குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தார் அப்போதைய மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். இப்போது மலையாளிகள் அதே புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து "அணை 999" என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு இந்திய அரசின் தணிக்கைத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

 

மலையாள இனவெறியர்களும் அவர்களின் ஊடகங்களும் பரப்பி வரும் வதந்திகளை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட, முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறிவரும்  பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அவ்வணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

 

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர் வரத்து இல்லை. இந்த அணையை முழுக்கொள்ளளவும்  நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும், என்பதே மலையாளிகளின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சித் திட்டமே முல்லைப் பெரியாறு அணை  வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்து விடும், எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

 

தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 700 டன் அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி , காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் முதலியவை அன்றாடம் அங்கு போகின்றன. இவை நின்று போனால் கேரளம் மூச்சுத் திணறி உயிருக்குப் போராட வேண்டி வரும். தமிழக மணலை அன்றாடம் கொள்ளையடித்துக் கடத்திச் செல்லாவிட்டல் கேரளாவில் புதிய கட்டடங்கள் எழ வாய்ப்பே இல்லை.

 

முப்பது இலட்சம் மலையாளிகள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

 

ஒருவர் ஓராண்டில் பயன்படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு 1700 கனமீட்டர். 30 இலட்சம் மலையாளிகள் ஓர் ஆண்டில் பயன்படுத்தும் தமிழகத் தண்ணீரின் அளவு 510 கோடி கனமீட்டர். முல்லைப் பெரியாறு அணைமூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர்  வெறும் 12.6 கோடி கனமீட்டர் மட்டுமே. (பழ.நெடுமாறன், தினமணி 30-11-2011).

 

தமிழக நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழ்நாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான  நன்றி உணர்ச்சி எதுவும் மளையாளிகளிடம் இல்லை.

 

தமிழர்களே, 1947 ஆகஸ்டு 15-க்குப் பிறகு நாம் இழந்துள்ள உரிமைகளை எண்ணிப்பாருங்கள். வெள்ளைக்காரன் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டி 1924-ல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். தில்லிக்காரன் ஆட்சியில் அது செல்லாது  என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 இலட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. 1895-இல் முல்லைப் பெரியாறு அணையைக்கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழகத்திற்கு உரியது என்று ஒப்பந்தம் செய்துவைத்தான் வெள்ளைக்காரன். இன்று  அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள், அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 இலட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

 

1950-க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது ஆந்திரப் பிரதேச அரசு. இப்போது கடைசி எல்லையான கணேசபுரத்திலும் அணை கட்டுகிறது ஆந்திரம்.இனி பாலாற்றிலிருந்து கசிவு நீரும் தமிழகத்திற்கு வராது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு மூன்றையும் இழந்து விட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் கிடையாது.

 

1950களில் மொழிவாரி மாநிலம் அமைத்த பொழுது பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஊர்களையும், நகரங்களையும் மற்றும் இயற்கை வளங்களையும் , ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம்  பறிகொடுத்தோம். 1974-ல் நமது கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது இந்தியா.

 

சிங்களப் படையாட்கள் சற்றொப்ப 550 தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல இந்தியா துணைநின்றது. இனியும் தமிழக மீனவர்களைக் கொல்லவும், தமிழகக் கடற்பரப்பில் தமிழர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவும் இலங்கைக்கு இந்தியா துணைநிற்கப் போகிறது. 2008-2009 ஆண்டுகளில் நம் உறவுகளான ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் ஈழ விடுதலைப்போரை வீழ்த்துவதற்கும் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்றது இந்தியா. 

 

இனியும் பொறுப்பது கூடாது தமிழர்களே..! எரிதழல் நெஞ்சில் ஏந்துங்கள்!

 

உலகின் மூத்த இனமான தமிழினம் நம் தலைமுறைக் காலத்தில் அழிந்து விட நமது செயலின்மை காரணமாக அமைந்து விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பதற்குரிய எல்லா வழிகளும் மூடப்பட்டு விட்டன. இந்திய அரசு, நீதித்துறை , இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகிய அனைத்தும் நம்மைக் கைவிட்டு விட்டன. பகைவனைப் பணிய வைத்து உரிமைகளைக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மலையாள இனவெறியர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் வாசல் கதவைத் தட்டுகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலையாளிகளையும் வெளியேறும்படிக் கோருவோம்.

 

நெய்வேலியிலிருந்து கேரளம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி,

அதைத் தமிழ் நாட்டிற்கு வழங்கச் செய்வோம்.

 

கேரளத்திற்குச் செல்லும் எல்லாப் பாதைகளையும் மூடி,

கேரளத்திற்கு எதிராகப் பொருளாதார முற்றுகையை உருவாக்குவோம்.

 

இதற்கான பரப்புரை இயக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 07.12.2011 அறிவன்(புதன்) அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடங்குகிறது. அதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

 

வரலாறு நமக்கு வேறு மாற்றுப்பாதை எதையும் விட்டுவைக்கவில்லை!

 

களத்திற்கு வாருங்கள் தமிழர்களே!

 

 

                                                                    தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : தஞ்சை

நாள்  : 05.11.2011

 

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில் பெ.மணியரசன் பேச்சு.

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில் பெ.மணியரசன் பேச்சு..

 

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் என்று தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கூறினார். துபாய் சிவாஸ்டார் அரங்கத்தில் 3-12-2011 மாலை தமிழர் பண்பட்டு நடுவம் நடத்திய கூட்டத்தில் பேசும்போதே இவ்வாறு கூறினார். இலண்டனில் ஈழத்தமிழர்கள் நடத்திய பண்பாட்டு கருத்தரங்கம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு விட்டு தமிழகம் திரும்பும் வழியில் துபாயில் இக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டதிற்குத் தோழர் சிவா தலைமையேற்றார். திருவாளர்கள் சங்கமம் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலையன்பன், கவிஞர் கவிமதி, யுஏ, தமிழர் அரங்கத்தின் பிரேம் ஆகியோர் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி பேசினர். இந்நிகழ்வில் முன்னதாக திரு. சிவகுமார் அவர்கள் வரவேற்று பேசினார். இறுதியாக தோழர் பட்டணம் மணி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

நிறைவில் பேசிய தோழர் மணியரசன் பின்வரும் கருத்துக்களை வலியுறுத்தினார்.
ஐந்து கண்டங்களிலும் பத்து கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நமக்கு இறையாண்மையுள்ள சொந்த அரசு எங்கும் இல்லாததால்தான் உலக அரசியலில் நம்மால் எந்தப் பாத்திரமும் வகிக்க முடியவில்லை. உலக நாடுகளும் நமது துன்ப துயரங்களைக் கண்டுகொள்வது இல்லை.

ஈழத்தில் 2008-2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்த எந்த நாடும் முன்வரவில்லை. அதே வேளை ஒன்றரைக்கோடி மக்கள்தொகை மட்டுமே கொண்ட சிஙகளர்களுக்கு ஓர் அரசு இருப்பதால் இந்தியா, சீனா, இரசியா போன்ற பெரும் பெரும் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு துணை செய்தன.

இந்த நிலையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நாம் ஒரு சர்வதேசியமாக செயல்பட வேண்டும். ஒரு நாட்டில் தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்தால் மற்ற அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும்இ போராட வேண்டும்.

இங்கு பேசிய நண்பர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்கள். அது நல்ல நோக்கம் கொண்ட கருத்துதான். ஆனால் அடைய வேண்டிய இலக்கில் ஒற்றுமை இல்லாமல் ஏற்படும் அமைப்புகளின் ஒற்றுமை நல்ல பலன்களைத் தருவதற்கு மாறாக குழப்பத்தையே உருவாக்கும். செல்லும் திசை வழி பற்றி ஒத்த கருத்து இல்லாமல் பெரும் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கூடிக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறான பெரும் கூட்டம் நமக்கு ஏற்பட்ட உரிமை இழப்புகள் குறித்தும் ஈழத்தமிழர் பேரழிவு குறித்தும் ஒப்பாரி வைத்துக்கொள்ள மட்டுமே பயன் படுகின்றன. இவற்றிற்கான தீர்வை நோக்கி திசை வழியை தீர்மானிக்க அது பயன்படவில்லை.

இணையத் தளங்கள் இன்றைக்கு பெரும் பெரும் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்களுக்கு மற்றாகஇ அதிகாரத்தில் இல்லதவர்களின் குரலை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகு ஊடகங்களாக செயல் படுகின்றன. துனீசியஇ எகிப்து சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டியதில் இணையத் தளங்கள் பெரும் பங்கு வகித்தன. நம்முடைய இளைஞர்களும் ஊடகங்களை நன்கு பயன் படுத்தி வருகின்றனர்.

இணையத்தளங்களில் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் சிலர் அதை பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வேறு சிலர் இணையதளங்களில் எழுதுவதை மட்டுமே தங்களின் ஒரே பணியாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் இணையத்தளங்களில் தாங்கள் எழுதுவதை வைத்துக்கொண்டு தன்னைத்தானே ஒரு நிறுவனமென்றும் தன்னைத்தானே ஒரு இயக்கமென்றும் கருதிக் கொள்கின்றனர். இப்போக்கு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒத்த கருத்துள்ளவர்களோடு சேர்ந்து செயல்படாமல்இ ஒதுங்கிக் கொண்டு விமர்சனம் மட்டும் கூறும் உதிரிப் போக்காகவே அமையும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நிறைவான கருத்துக்களோடு விடை பெற்றனர்.

Saturday, December 3, 2011

தமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வெங்கட்ராமன் பேச்ச!

முல்லைப் பெரியாறு அணையை

உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

 

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மதுரையில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

 

"முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்" என வலியுறுத்தி, இன்று(03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கட்டக்குளம் இராமசாமி, வாடிப்பட்டி தேவராசன், நடராசன், பெரியசாமி மற்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், கதிர்நிலவன்(த.தே.வி.இ.), மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், நாயகம் (இயற்கை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு மலையாளிகளின் உரிமை மறுப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "நேற்று கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.

 

ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.

 

கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித்  தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

 

 

இன்று மாலை குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை" என்று பேசினார்.

 

பெருந்திரள் உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் பா.இராசேந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார். 


Friday, December 2, 2011

முல்லைப் பெரியாறு அணை உரிமைக் காப்போம் - நாளை மதுரையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாப்போம்

நாளை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

தமிழினத்திற்கு எதிரான கலவரப் பகுதியாகக் கேரளத்தை மாற்றுவதற்குக்  கேரள அரசும், மலையாள அரசியல் கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும், பேரழிவை ஏற்படுத்திவிடும்  என மலையாளிகளிடையே பீதியைப் பரப்பிவருகிறார்கள்.  எப்படியும் முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிடுவது என்ற சதி நோக்கத்தோடு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

 

                இதற்கு வாய்ப்பாக அண்மையில் இடுக்கியில் நிகழ்ந்த 2.3ரிக்டர் அளவு நில அதிர்வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக 1963லிருந்தே கேரள அரசும் மலையாள அரசியல்வாதிகளும் தொடர் பொய்ப் பரப்புரை நடத்தி வருகின்றனர்.  2001ல் இதே இடுக்கியில் இப்போது நிகழ்ந்ததைவிட இரண்டு மடங்கு வலுவுள்ள அதாவது 4.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தபோது உடனடியாக ஆய்வு செய்த இந்திய அரசின் நீர்ப்பாசன ஆணையர், அணை வலுவாக இருப்பதாகச் சான்று வழங்கினார்.

 

                இந்திய உச்சநீதி மன்றம் சார்பற்ற வல்லுநர் குழுவை நியமித்து அணை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை பெற்று அதனடிப்படையில் 27.02.2006ல் அளித்த தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உறுதி செய்து 142அடி தண்ணீரை உடனடியாகத் தேக்குமாறு ஆணையிட்டது. இந்த ஆண்டு சனவரி 20ல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழுவும் அணை வலுவாக இருப்பதாகச் சான்று அளித்தது.

 

இத்தனைக்குப் பிறகும் தமிழினப் பகை வெறியோடு கேரள அரசும் அம்மாநில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பொய்ப் பரப்புரை செய்து வருகின்றன.  அணையை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கடையடைப்புகள், பேரணிகள் நடத்தி வருகின்றன.  தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். தமிழ்நாடு பதிவு எண் உள்ள வாகனங்கள் தாக்கப்படுகின்றன. இடுக்கியில் வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களும் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

                அதே நேரம் கேரளமோ அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தே உள்ளது.  கேரளத்தின் உணவுத் தேவைக்கு நாள்தோறும் 700 டன் தமிழக அரிசி செல்கிறது. கேரளத்தின் இறைச்சித் தேவை முழுவதையும் தமிழகமே நிறைவு செய்கிறது. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்குக் கேரளம் பெரிதும் தமிழகத்தையே சார்ந்துள்ளது. கேரளத்து மலையாளிகளின் வானுயர்ந்த கட்டிடங்களுக்குத் தமிழகத்து மணலே கொள்ளை கொள்ளையாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

 

 தமிழகத்தில் 30 இலட்சம் மலையாளிகள் செல்வச் செழிப்போடும் உயர் அதிகாரப் பதவியிலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளது போல் (தினமணி 30.11.2011) ஒரு நபருக்குச் சராசரியாக 1700 கனமீட்டர் வீதம் 30 இலட்சம் மலையாளிகள் ஒரு ஆண்டில் பயன்படுத்தும் தமிழ்நாட்டுத் தண்ணீர் 510 கோடி கனமீட்டர். ஆனால் முல்லைப் பெரியாற்றில் நாம் கேட்பது வெறும் 12.6 கோடி கனமீட்டர் தண்ணீர்தான். அரபிக் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரில் இது வெறும் 18.5 விழுக்காடு மட்டுமே. 

 

                முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 35 இலட்சம் மலையாளிகள் அழிந்து விடுவார்கள் என்று எந்த அடிப்படையுமற்ற பொய்யை மீண்டும் மீண்டும் மலையாளத் தலைவர்கள் பரப்பி வருகிறார்கள்.  முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என்பதைப் பலதரப்பு வல்லுநர்களும் மீண்டும் மீண்டும் கூறிவிட்டார்கள்.  ஒரு வேளை அவ்வணைக்குச் சேதம் ஏற்பட்டாலும் அந்த நீர் இடுக்கி அணையில் சேர்ந்து விடுமே அன்றி அழிவை ஏற்படுத்தாது.  முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 10 டிஎம்சி மட்டுமே. ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டிஎம்சி ஆகும்.

 

எந்த உண்மைச் சான்றும் இன்றி தமிழினப் பகையோடு மலையாள இனவெறியர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கிறார்கள்.  புதிய அணைகட்டப் போவதாகப் பாசாங்கு செய்கிறார்கள்.  மலையாள வெறியர்களின் தமிழினப் பகை நடவடிக்கைக்கு எதிராகப் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 

 

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் மலையாளிகளையும், மலையாளிகளின் நிறுவனங்களையும் தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்.  தமிழினப் பகை தேசமான கேரளத்திற்கு எதிராக எல்லைகளை மூடி பொருள் போக்குவரத்தை நிறுத்தி பொருளாதாரத் தடை விதிப்போம். நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து கேரளத்திற்கு நாள்தோறும் செல்லும் 9கோடி யூனிட் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம். 

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(03.12.2011) மாலை மதுரை காலவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கம்பம் கே.எம்.அப்பாஸ், தேவராசன், பார்த்தசாரதி உள்ளிட்ட தலைவர்களும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் திரு. பா.இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

 

நிறைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார். இவ்வார்ப்பாட்டத்திற்கு திரளான தமிழ் உணர்வாளர் ளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,

வெளியீட்டுப் பிரிவு

 

இடம் : சென்னை

நாள்  : 02.11.2011


Monday, November 28, 2011

முல்லைப் பெரியாறு: கேரள அரசின் தமிழினப்பகையை கண்டிக்கிறோம் - கி.வெங்கட்ராமன்

முல்லைப் பெரியாறு:

கேரள அரசின் தமிழினப்பகையை கண்டிக்கிறோம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

 

முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படையற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதற்கு கேரள அரசு முனைகிறது. தன்னுடைய தமிழர் பகை நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டிக் கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசின் ஆதரவோடு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கோரும் முழுஅடைப்பு போரட்டத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.

 

உச்சநீதிமன்றம் நியமித்த சார்பற்ற வல்லுநர் குழு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அணை வலுவுடன் உள்ளதாக அறிவித்து அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அணையில் 145அடி தண்ணீர் தேக்குமாறு ஒரு முறைக்கு இரு முறை தீர்ப்பளித்து விட்டது. இத்தீர்ப்பை மீறும் வகையிலும் தமிழர்களுக்கு எதிரான இனப்பகையை தீவிரப்படுத்தும் முறையிலும் இந்த கடை யடைப்புக்கு கேரள அரசு ஏற்பாடு செய்கிறது.

 

முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழிவழி மாநில சீரமைப்பு நடக்கும் போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது. இன்றும் கூட இடுக்கி மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.

 

எனவே இனப்பகையை வளர்க்கும் இடுக்கி மாவட்ட முழு அடைப்பு போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

கேரள அரசின் இந்த தமிழினப் பகைப்போக்குத் தொடருமேயானால் தமிழகத்தில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களும் பெருந்தொகையாக வாழும் மலையாளிகளும் தமிழகத்தி லிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழின உணர்வாளர்களும் மேற்கொள்ள வேண்டி வரும்.

 

இந்திய அரசு, பிழையாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளையும் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்துடன் இணைத்து எல்லை மறுசீரமைப்பு செய்யுமாறு வலியுறுத்துகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செய்யும் அடாவடிகளை நிறுத்த வலியுறுத்தி அரசமைப்பு சட்ட விதி 355ன் கீழ் அறிவுறுத்தல் ஆணை அனுப்புமாறு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 

கேரள அரசின் இந்த தமிழினப்பகை நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நின்று முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சிதம்பரம்

Tuesday, November 22, 2011

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம் - பெ.மணியரசன் அறிவிப்பு!

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு 
 

மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள்.

 

முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம்-999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

 

முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

 

ஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை-999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.

 

முல்;லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விpசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்;ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.

 

இந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

 

வருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை-999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்;கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
இடம்: தஞ்சை

Monday, November 21, 2011

விலைஉயர்வு: இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு - பெ.மணியரசன் கண்டனம்!

விலைஉயர்வு:

இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கண்டனம்!

 

ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு தாறுமாறாகப் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.  ஒரே அடியில் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தி இருக்கிறது.  மின்சாரக் கட்டணத்தையும் 100 விழுக்காடு உயர்த்த வலியுறுத்தி இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வை மக்கள் வாழ்க்கையின் மீது தமிழக அரசு தொடுத்த கடும் தாக்குதல் என்றே கூற வேண்டும்.

 

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள  இழப்பை ஈடுகட்ட, ஒரு  இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்குள்ள கடன் சுமையைச் சமாளிக்க உங்களை விட்டால் நான் வேறு யாரிடம் போய் கேட்க முடியும்" என்று முதல்வர் செயலலிதா,  "வேறு வழியே இல்லை" என்று கூறுகிறார்.

 

புதிய பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்தால் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் சுமையில் பாதியை நீக்கிவிடலாம்.  நடுவண் அரசு சிறப்பு நிதியும் தரவில்லை. சிறப்புக் கடனும் தரவில்லை என்று முதல்வர் கூறுகிறார். இந்த நிலையில் நடுவண் அரசுக்குப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தும் கம்பெனி வருமான வரியைச் செலுத்தாமல் நிறுத்தி அத்தொகையை அத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபற்றி மக்களிடம் கூறி அவர்களின் வலிமையை தமிழக முதல்வர் இம்முயற்சிக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ளலாம்.

 

தமிழகத்தில் நரிமணம், கோயில்களப்பால், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலை இந்திய அரசின் வரி விதிப்பு இன்றி பன்னாட்டுச் சந்தையின் அசல் விலைக்கு தமிழக அரசுக்குத் தருமாறு நடுவண் அரசை வலியுறுத்தி பெற வேண்டும்.

 

இவ்வாறான முயற்சி எதிலும் இறங்காமல் அகப்பட்டுக் கொண்டவர்கள் தமிழக மக்கள்தான் என்ற எண்ணத்தில்,  உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் உடனடியாக அவர்களால் என்ன செய்யமுடியும் என்ற நினைப்புடன் செயலலிதா பேருந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளார்.

 

பால் விலையை ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ6.25ஆக உயர்த்தி இருப்பது தனியார் பால் விநியோகத்திற்கு மறைமுகமாகத் துணை செய்ய அவர் விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.

 

மின்சாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு பெரிதும் மின்தட இழப்பு (Line Loss) , மின் திருட்டு மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவற்றைச் சரி செய்ய முதல்வர் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.

 

நெய்வேலியில் இருந்து ஒரு நாளைக்கு கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், கேரளத்திற்கு 9 கோடி யூனிட்டும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் மின்சாரம் செல்கிறது. இவை அனைத்தையும் உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற அடிப்படையில் அடக்கவிலைக்குத் தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிப் பெறவேண்டும்.  இதற்கான கோரிக்கையைத் தமிழக முதல்வர் முன்வைக்கவே இல்லை.

 

 

செய்ய வேண்டிய இவற்றையெல்லாம் செய்யாமல், பெருவாரியாகத் தனக்கு வாக்களித்து அதிகாரப் பீடங்களில் அமர்த்திய மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றுவது சிறிதும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல நன்றி கொன்ற செயலும் ஆகும்.  இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசுடன் இணக்கப் போக்கை உருவாக்கிப் புதிய உறவை வளர்த்துக் கொள்வதற்காக முதல்வர் செயலலிதா இந்திய அரசிடம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைக்காமல் இருக்கிறார் என்று கருத வேண்டியுள்ளது.

 

சாராய வணிகம், மணல் வணிகம் அகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு அமோக வருமானம் வந்து கொண்டுள்ளது.  சாராயத்தில் நிகர வருமானம் ஆண்டுக்கு 10ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.  தமிழக அரசு வழங்கும் அனைத்து இலவசங்களின் மொத்தச் செலவு ரூபாய் 7500 கோடி மட்டுமே. எனவே இலவசங்களுக்காக இக்கட்டண உயர்வு என்று கருத முடியாது.

 

கொழுத்த வருமானம் தரும் அனைத்து வரிகளையும் விதித்து வசூலித்துக் கொள்ளும் இந்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுப் போராடாமல் மக்கள் மீது கொடும் பணச்சுமைகளை ஏற்றுவது அறம் அன்று.

 

எனவே தமிழக அரசு புதிதாகச் சுமத்தியுள்ள கட்டண உயர்வுகளை கைவிட்டு நிதி நெருக்கடியைச் சமாளிக்க மேலே சொல்லப்பட்ட வழிகளைக் கையாளுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். 

.                                                                                                                               (பெ.மணியரசன்)

 

இடம் : தஞ்சை

நாள்  : 21.11.2011

Thursday, November 10, 2011

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை!


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு
விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை காணொளி!

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய நறுக்குகள், பொழிச்சல், பெபுல்ஸ்(pebbles) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு!



நாள்: நவம்பர் 10, 2011

Friday, November 4, 2011

அறிவு வளர்ச்சிக்கு எதிரான தமிழக முதல்வரின் மனநிலை - பெ.மணியரசன் கண்டனம்!

அண்ணா நூலகத்தை இடமாற்றுவது அறிவு வளர்ச்சிக்கு எதிரான

தமிழக முதல்வரின் மன நிலையைக் காட்டுகிறது

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன் கண்டன அறிக்கை

 

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.

 

கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.

 

இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.

 

தமிழகஅரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.

 

தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

 

இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ்மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.

 

அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.

 

தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
இடம்: தஞ்சை

Tuesday, November 1, 2011

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்! - பெ.மணியரசன் வேண்டுகோள்!

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

 

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு" கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

 

2008 - 2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறி அரசு, இனப்படுகொலை செய்தது. இனப்படுகொலைக் குற்றவாளிகளாகவும், போர்க்குற்றவாளிகளாகவும் உள்ள இராசபட்சே கும்பலை தளைப்படுத்தி, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; போர் அழிவுக்குப் பிந்தைய காலத்தில், நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் சிங்கள வெறி அரசால் நடத்தப்படவில்லை. ஐ.நா. மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பின் கீ்ழ் ஈழத்தில், துயர் துடைப்புப் பணிகளை செயல்படுத்தி எஞ்சியுள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு, சாவுத் தண்டனை வழங்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடத் துடிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகை முயற்சியை முறியடித்து, அம்மூவரையும் காப்பாற்ற வேண்டும்.

 

மேற்கண்ட மூன்று முகாமையான கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாநாடு நடைபெறுகிறது. கைக்கு எட்டியத் தொலைவில் இருந்தும் நம் இனம் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையோடு இலங்கை அரசால், அழிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும், ஆறாத காயமும் தமிழர்கள் நெஞ்சில் அப்படியே உள்ளன.

 

இப்பொழுது முழுவீச்சில் நாம் செயல்பட்டு, நம் இன மக்களை ஈழத்திலும், தூக்குக் கொட்டடியில் உள்ள தமிழர்களை இங்கும் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு உள்ளது. சாவுத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து முற்றாக நீக்க வேண்டும் என்ற மனித உரிமைக் கடமையும் நம் முன் உள்ளது.

 

எனவே, தமிழின உணர்வாளர்கள், மனித உரிமையில் அக்கறையுள்ளோர் அனைவரும் கோவையில் பெருந்திரளாகக் கூட வேண்டும். நமது கோரிக்கைகளில் உள்ள ஞாயம் அக் கோரிக்கையை ஏந்தி நிற்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மதிக்கப்படும். எனவே, மாநாட்டுக்கு வாருங்கள் தமிழர்களே!


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை

நாள்: 1.11.2011

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT