உடனடிச்செய்திகள்

Latest Post

Monday, September 21, 2020

"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்" - "ஆதன் தமிழ்" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்"


"ஆதன் தமிழ்" ஊடகத்திற்கு.

தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 20, 2020

"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்!” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு!

"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்!”தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த தொடர் மறியலின் இறுதி நாள் (18.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு!  
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, September 19, 2020

“வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! “வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! தோழர் பெ. மணியரசன் அவர்களின் பேச்சு!

வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த தொடர் மறியலின் இறுதி நாள் (18.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேச்சு! 
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, September 16, 2020

சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


சூரியா அறிக்கை:
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு
“இந்து” நாளேடு தக்க பதிலடி!


பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

அகரம் அறக்கட்டளைத் தலைவர் நடிகர் சூரியா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சீறிப் பாய்ந்ததை மறுத்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிட்டது இன்று(16.09.2020) இந்து ஆங்கில நாளேடு!

அவ்வேட்டின் முதன்மை ஆசிரியவுரை செய்துள்ள சாட்டையடித் திறனாய்வுகளில் சில:

“கொரோனோ அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வெழுத ஆணை இட்டது” சரியல்ல என்ற சூரியாவின் விமர்சனம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான சில மணி நேரங்களில் முந்திக் கொண்டு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கடிதக் கணை பாய்ச்சினார். இதற்கான அவசரக் காரணத்தை நீதிபதி கூற வேண்டும்!

விமர்சனங்களை சகித்துக் கொள்ளாத நீதிபதியின் (எஸ்.எம்.சுப்பிரமணியம்) வேகம் மன்னராட்சியின் எதேச்சாதிகாரம் போல் உள்ளது.

சமூகத்தில் சிறப்பு வாய்ப்பற்றவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிடத் தனி அறக்கட்டளை வைத்துப் பாராட்டத் தக்க பணிகள் செய்து வருகிறார் அந்த நடிகர். எனவே அவர், மாணவர்களின் நலன் கருதி செய்த விமர்சனம் நீதி மன்ற அவமதிப்பு அல்ல! மேலும் அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை - பொது நலன் சார்ந்த கருத்துரிமையைப் பறிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அத்துடன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சூரியா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய விடுத்த வேண்டுகோளை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அனுமதிக்கக் கூடாது.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி செய்த விமர்சனத்தின் மீது, அவமதிப்பு வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பில்லை! உச்சநீதிமன்றம், விதுசா ஓபிராய் வழக்கில் 2017-இல் அளித்த தீர்ப்பே இதற்குச் சான்று!

எனவே சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாகி அவர்கள், சூரியாவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்க அனுமதிக்கக் கூடாது.

சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் வாதத்தில் சட்டதின் சாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் இந்து ஆசிரியவுரை கூறியுள்ளது.

இந்து நாளேடு கொடுத்துள்ள பதிலடி போதுமா?

கடைசியாக ஒரே ஒரு வினா: இந்த ஆசிரியவுரைக்கு இந்து ஏடு “மதியற்ற முன்னெடுப்பு”(Ill-advised move) என்று தலைப்புக் கொடுத்துள்ளது. நீதிபதியின் மதியை மறைத்தது எது? இந்து ஏட்டுக்குப் பாராட்டுகள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, September 15, 2020

சூரியா அறிக்கை நீதிமன்ற அவமதிப்பல்ல சமூகநீதித் தவிப்பு! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!சூரியா அறிக்கை  நீதிமன்ற அவமதிப்பல்ல
சமூகநீதித் தவிப்பு!

பெ.மணியரசன், 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வான நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

நடப்பாண்டு நீட் தேர்வு 13.09.2020 அன்று நடைபெறவிருந்த நிலையில், அதன் மீதுள்ள அச்சத்தின் காரணமாக ஒரே நாளில் 11.09.2020 அன்று மட்டும் ஒரு மாணவி உட்பட மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்தார்கள். தமிழர்களிடையே இந்தத் தற்கொலைகள் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தின. 

இந்தப் பின்னணியில் நீட் தேர்வைக் கைவிட வலியுறுத்தி அகரம் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நடிகருமான சூரியா 13.09.2020 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். 

சூரியாவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவமதித்துள்ளதாகவும் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும் அதன் தலைமை நீதிபதி ஏ.பி. சாகி அவர்கட்கு, அதே உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 

சூரியா அறிக்கையிலிருந்து நீதிபதி சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ள குற்றச்சாட்டு, “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வு எழுத ஆணையிடுகிறது” என்ற பகுதியாகும். 

கொரோனாவில் நீதிபதிகளுக்குரிய பாதுகாப்பு மட்டுமின்றி, வழக்கறிஞர்கள், வழக்கிற்கு உரிய மக்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் முதலிய அனைவர்க்குமான பாதுகாப்புக் கருதித்தான், நீதிமன்றங்கள் காணொலி மூலம் இயங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை இட்டது. எனவே, சூரியா சுட்டிக்காட்டியுள்ள “உயிருக்குப் பயந்து” என்ற தொடர் நீதிபதிகளை மட்டுமே குறித்தது ஆகாது.

அடுத்து, இந்தக் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்களும், மக்களும் வைத்தனர். இது தொடர்பாக நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு நடத்த அனுமதி அளித்துத் தீர்ப்பளித்தது. 

இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கு மேல் மாணவ மாணவிகள் பங்கேற்கும் நீட் தேர்வை நடப்புக் கொடிய கொரோனா காலத்தில் நடத்தாமல் அம்மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கலாம். விடுதலை பெற்ற இந்தியாவில் 1947லிருந்து 2014 வரை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கடைபிடித்து வந்த நடைமுறை இதுதான்!

கொரோனாக் கொடிய முடக்கத்தில் விதிவிலக்காக இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கெனவே நீண்டகாலமாக இருந்து வந்த நடைமுறையைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் ஆணை இட்டிருக்கலாம் என்ற விமர்சனம்தான் சூரியாவின் அறிக்கையின் சாரம்! இந்த விமர்சனம் நீதிபதிகளின் தீர்ப்பிற்கு எந்தக் கெட்ட உள்நோக்கமும் கற்பிக்கவில்லை. 

உள்நோக்கம் கற்பிக்காமலும் நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தாமலும் தீர்ப்புகளை விமர்சிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. 

சூரியா அறிக்கை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் வராது என்றும், அவ்வாறு சூரியா மீது வழக்குத் தொடுக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சாகி அவர்கட்கு வேண்டுகோள் விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிகள் கே. சந்துரு, கே.என். பாஷா, டி. சுதந்திரம், து. அரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் கடிதம் எழுதியிருப்பது பாராட்டிற்குரிய முன்னெடுப்பாகும்! 

தமிழ்நாட்டு பா.ச.க.வினர் வழக்கம்போல் தமிழர்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்திய அளவில், “நீட்” என்ற நுழைவுத் தேர்வு நடத்துவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அரசுப் பள்ளி மாணவர்களை வடிகட்டி, கழித்துக் கட்டுவதற்கான வர்ணாசிரம உத்தி என்பதை தமிழ்நாட்டில் எல்லோரும் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த உணர்வைத்தான் “நீட்” போன்ற “மனுநீதி”த் தேர்வுகள், எங்கள் மாணவர்களின் வாய்ப்பை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது” என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளார் சூரியா! 

“அகரம்” அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களின் படிப்பிற்குரிய படிக்கட்டுகள் அமைத்துத் தரும் சூரியா, அம்மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்பையும் உயிரையும் பறிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன அறிக்கை விடுத்தது பாராட்டத்தக்க செயலாகும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


“தமிழ்நாட்டிற்குத் தேவை இறையாண்மை” - ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழ்நாட்டிற்குத் தேவை இறையாண்மை”தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 13, 2020

“தமிழ்தேசியம் பேசாத.! முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.!" பாயும் “ழகரம்” இணைய ஊடகத்துக்கு - ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழ்தேசியம் பேசாத.! முதல்வர் ஆகி என்ன பண்ணுவ.!" பாயும் பெ.மணியரசன்“ழகரம்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, September 11, 2020

“ செப்டம்பர் 11” தமிழ்நாடு தமிழர்க்கே முழக்க நாள்!“ - ஐயா,பெ.மணியரசன் உரை”

“ செப்டம்பர் 11” தமிழ்நாடு 

தமிழர்க்கே முழக்க நாள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா,பெ.மணியரசன் உரை”!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

“தமிழக மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்” - “ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழக மாணவர்கள்  திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்”


“ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, September 9, 2020

” தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா?” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


”தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில்
 சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், சமற்கிருதம் படிக்க இந்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவர் பட்டியலை எடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்ப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய படிவத்தில் (form 1, form 2) நிரப்பி 10.09.2020 மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மோடி அரசு இந்தியை மட்டுமின்றி சமற்கிருதத்தையும் சேர்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு மேற்கண்ட கடிதம் மற்றுமொறு சான்று. இந்தி மற்றும் சமற்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என்று போலியாக சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சமற்கிருதத்தைப் பணத்தாசை காட்டியும் திணிக்கிறது. இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

அத்துடன் இந்தி சமற்கிருதம் இரண்டையும் திணிபதன் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை ஆரியமயப் படுத்தும் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

தனது அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சமற்கிருதத் திணிப்பை ஆதரித்துத் தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சமற்கிருத திணிப்பு சுற்றறிக்கையை இரத்து செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Friday, September 4, 2020

“ தகவல் அறியும் சட்டப்படி கேட்ட கேள்விக்கு, இந்தியில் விடை!“ - ஐயா,பெ.மணியரசன் ஆவேசம்!”

“ தகவல் அறியும் சட்டப்படி கேட்ட கேள்விக்கு, இந்தியில் விடை!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா,பெ.மணியரசன் ஆவேசம்!”
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT