உடனடிச்செய்திகள்

Saturday, February 24, 2007

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்
23-02-2007
 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய முன்னணி இயக்கம் சார்பில் தமிழத் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினர் தமிழகமெங்கும்  தீர்ப்பின் நகல் எரித்தனர்.. தலைநகர் சென்னையில-13 , சிதம்பரத்தில்-40, தஞ்சையில்-33, மதுரையில்-17, தூத்துக்குடி-15 என சுமார் 200 பேர் தமிழகம் முழுதும் கைது செய்யப்பட்டனர்.

 http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070223115035&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு: மதுரையில் 17 பேர் கைது

மதுரை, பிப். 24: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நகல் எரிப்புப் போராட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 17 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய முன்னணி இயக்கம் சார்பில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன் தீர்ப்பின் நகல் எரிக்கப்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோரை பாதுகாப்புக்கு இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் தீர்ப்பின் நகல்களை எரித்தனர்.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட 17 பேரை திடீர்நகர் போலீஸôர் கைது செய்தனர்.
 
 

 தஞ்சையில்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்
33 பேர் கைது


தஞ்சாவூர்,பிப்.24-

தஞ்சையில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் நகலை கொளுத்திய 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊர்வலம்

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பு தமிழக மக்களை ஏமாற்றுவதாகவும், வஞ்சிப்பதாகவும் இருப்பதாகக் கூறி, தமிழ் தேசப்பொதுவுடைமை கட்சி, தமிழ் தேசிய முன்னணி ஆகியவை காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு நகலை கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து இருந்தன. அதன்படி நேற்றுகாலை தமிழ் தேசப்பொதுவுடைமை கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய முன்னணியினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு ஒன்று திரண்டனர்.

அங்கிருந்து மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமையில் சுமார் 33 பேர் ஊர்வலமாக புறப்பட்டனர். அண்ணாசிலையை கடந்து ஊர்வலம் வந்தபோது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், குமரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, சுதா மற்றும் போலீசார் ஊர்வலத்தை வழி மறித்தனர். இதற்கு மேல் செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர்.

ஆனால் ஊர்வலத்தில் கலந்து கொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். "ஓசூருக்குள் கர்நாடகக்காரர்கள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை உங்கள் போலீசார் தடுத்து நிறுத்தாமல் போராட்டம் நடத்த வழி விட்டார்கள். நாங்கள் தமிழக மக்களுக்காக போராட்டம் நடத்துகிறோம். எங்களை மட்டும் தடுத்து நிறுத்துகிறீர்கள்'' என்று போலீ சாரிடம் போராட்டக் காரர்கள் கூறினர்.

நகலை கொளுத்தினர்

அதன்பின்பு போலீசார் அவர்களை ஊர்வலமாக செல்வதற்கு அனுமதித்தனர். போராட்டக்காரர்கள் ஊர்வலமாக பழைய பஸ் நிலையம் முன்பு வந்தவுடன் மீண்டும் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்போது லேசான பதட்டம் ஏற்பட்டது. அதன்பின்பு ஒவ்வொருவரும் காவிரி இறுதித்தீர்ப்பு நகலை கையில் வைத்து கொளுத்தினார்கள்.

நகலை கொளுத்த விடாமல் தடுப்பதற்காக போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் வட்டமாக நின்று கொண்டு நடுவில் காவிரி இறுதித்தீர்ப்பை கொளுத்தினார்கள். பின்பு ஒவ்வொருவரும் தங்கள் கையில் தனித்தனியாக இறுதித்தீர்ப்பு நகலை எடுத்துச் சென்று கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

33 பேர் கைது

சுமார் ஷி மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. அதன்பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு கூறியதாவது:-

தமிழக அரசு காவிரி இறுதித்தீர்ப்பில் சில திருத்தங்கள் கோரி நடுவர் மன்ற மறு ஆய்வுக்கு அனுப்புவது அநீதியான தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும். எனவே அவ்வாறு மறு ஆய்வு மனு போடாமல் இந்த நடுவர் மன்றத்திற்கு மாற்றாக புதிதாக ஒரு நடுவர் மன்றம் அமைத்து, ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்குமாறு கால வரம்பிட்டு ஆணையிடக்கோரி உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

இந்த தீர்ப்பு வரும்வரை ஏற்கனவே இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தருவதை உறுதிப்படுத்த வேண்டும். காவிரி இறுதித்தீர்ப்பு நகலை கொளுத்தும் போராட்டம் தஞ்சை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நடந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 
 

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT