உடனடிச்செய்திகள்

Monday, February 23, 2009

காவல்துறை அட்டூழியங்களை மூடிமறைக்க கருணாநிதி நாடகம் - பெ.மணியரசன் அறிக்கை

காவல்துறை அட்டூழியங்களை மூடிமறைக்க
கலைஞர் கருணாநிதி உண்ணாநிலை நாடகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
 
தமிழக வழக்குரைஞர்கள் தமிழக காவல்துறையினரிடம் இணக்கமாகி நட்பு கொள்ளாவிட்டால் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது ஒருதலைச் சார்பான சமநீதியற்ற முடிவாகும். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கில் புகுந்து வழக்குரைஞர்களையும் நீதிபதிகளையும் வாகனங்களையும் பகைநாட்டு படை போல் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை வராமல் அவர்களைக் காப்பாற்றவே கருணாநிதி உத்தி வகுத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

உண்மையிலேயே வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இணக்கம் காண முதலமைச்சர் விரும்பியிருந்தால் உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து அராஜகம் புரிந்து நூற்றுக்கும் மேற்பட்டடோரை படுகாயப்படுத்திய சட்டவிரோத செயல்களுக்குக் காரணமான காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறைஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தும் தடியடியும் கல்லெறியும் நடத்திய காவல்துறையினரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியும் நடவடிக்கை எடுத்த பிறகு இருதரப்பாருக்கும் சமாதான வேண்டுகோளை அவர் விடுத்திருக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு மேலாக அன்றாடம் ஈழத்தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என அனைவரும் சிங்கள அரசு நடத்தும் போரில் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாடே ஒருங்கிணைந்து போர் நிறுத்தம் கோருகிறது. போர் நிறுத்தம் கோர மறுத்து இந்திய அரசும் சோனியா காந்தியும் ஈழத்தமிழர் இன அழிப்புப் போரை இயக்குகிறார்கள். இந்த நிலையில் தமிழினத்தை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க இந்திய அரசை நோக்கி போர் நிறுத்தம் கோரி காலவரம்பற்ற உண்ணாப்போர் அறிவித்திருந்தால் கருணாநிதியின் பின்னால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் திரண்டிருப்பார்கள். அதற்கு மாறாக தமது ஆட்சியில் அட்டூழியம் புரிந்த காவல்துறையினரைப் பாதுகாக்க காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம் அறிவித்திருப்பது அவரது தன்னல அரசியலையே மறுபடியும் அம்பலப்படுத்துகிறது.
 
நீதி கோரிப் போராடும் தமிழக வழக்குரைஞர்களை தமிழக மக்கள் அனைவரும் ஆதரிப்பது கடமை என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

நாள்    :  23-02-2009
இடம் :  சென்னை-17. 

Friday, February 20, 2009

தமிழகம் முழுவதும் வருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை


தமிழகம் முழுவதும்

வருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 600 பேர் கைது


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகங்கள் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டன. இப்போராட்டங்களில் பங்கு கொண்ட சுமார் 600 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.




ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்போராட்டம் இன்று(20-02-2009) நடந்தது.


சென்னை

இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரிதுறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பின்னர், "வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" உள்ளிட்ட முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்படப்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


தஞ்சை

தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். "சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை

கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். "ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்" என்பனப் போன்ற முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


மதுரை

காலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


ஈரோடு

ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண்களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


சேலம்

காலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி

புதுச்சேரி மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். "இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

புதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 150 பேர் கைதாகி விடுதலை

புதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம்
150 பேர் கைதாகி விடுதலை

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக்  கண்டித்து புதுச்சேரி மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 150 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.


    அதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் புதுச்சேரி  மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    "இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

ஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 120 பேர் கைது

ஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 120 பேர் கைது

    ஈரோட்டில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.30 மணியளவில் ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண்களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக  புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 100 பேர் கைது

சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 100 பேர் கைது

    சேலத்தில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர்.

    "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக  புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 100 க்கும் மேற்பட்டவர்கள் கைது

கோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்பினர்
100 க்கும் மேற்பட்டவர்கள் கைது

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து கோவை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன்,  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    "ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்" என்பனப் போன்ற   முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 50க்கும் மேற்பட்டவர்கள் கைது

தஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
50க்கும் மேற்பட்டவர்கள் கைது

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட  பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    "சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள்  50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 17 பேர் கைது

மதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
17 பேர் கைது
 
    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து மதுரை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 17 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  இராசு உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். 

    "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ  வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது.

    கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

FLASH : வருமானவரித் துறை முற்றகை : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் 50 பேர் கைது

சென்னையில் மத்திய வருமானவரித் துறை அலுவலகம்
முற்றகையிட்ட
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் 50 பேர் கைது

சென்னை, 20-2-2009.

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து சென்னையில் மத்திய வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரிதுறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
 
இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பின்னர்,
"வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" உள்ளிட்ட முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்படப்டவர்களை காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tuesday, February 10, 2009

இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு!

இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவிகளை புரிந்து வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் போராடிட "தமிழர் ஒருங்கிணைப்பு" என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த 31-01-09 அன்று இலங்கை பலாலி விமானதளத்திற்கு ஆயதங்கள் கொண்டு செல்லப்படும் தஞ்சை விமானப்படை தளத்தை தமிழர் ஒருங்கிணைப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

இதனையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தமிழர் வரிப்பணத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்தக்கோரி "தமிழர் ஒருங்கிணைப்பு" தமிழகத்தில் வருமான வரி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட இந்திய அரசு வரி நிறுவனங்களை முற்றுகையிடும் போரட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

"இந்திய அரசின் வரி வாங்கும் நிறுவனங்களை இழுத்து மூடுவோம்" என்ற முழக்கத்துடன் இந்த முற்றுகைப் போராட்டம் 20.02.2009 வெள்ளிக்கிழமை அன்று சென்னை,கோவை,சேலம்,ஈரோடு,மதுரை,தஞ்சை,ஆகிய ஊர்களில் நடக்கும் என தமிழர் ஒருங்கிணைப்பு அறிவித்துள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT