உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்த்தேசியப் பேரியக்கம். Show all posts
Showing posts with label தமிழ்த்தேசியப் பேரியக்கம். Show all posts

Wednesday, October 5, 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது!




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து
தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர்
நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, நேற்று (03.10.2016) தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்.
குடந்தை தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை சொந்த பிணையில் விடுதலை செய்தனர். இதனையடுத்து, இரண்டாம் நாளாக இன்றும் நரேந்திரமோடி உருவபொம்மையை எரித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மன்னார்குடி
---------------------
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், பேருந்து நிலையம் அருகில், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் திரு. கலைச்செல்வம் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது மன்னார்குடி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

புளியங்குடி
-------------------
நெல்லை மாவட்டம் - புளியங்குடியில், பேருந்து நிலையம் அருகில் இன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்க புளியங்குடி அமைப்பாளர் தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், இராயகரி செயலாளர் தோழர் சொக்கையாபாண்டியன், கடையநல்லூர் வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மு. துரைச்சி உள்ளிட்டோர் நரேந்திர மோடியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுரை - தென்காசி மையச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்து, அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி 
--------------------------------
திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியத் துணைச் செயலாளர் தோழர் சை. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக உழவர் முன்னணி கோட்டூர் ஒன்றியச் செயலாளர் திரு. இரா. தனபாலன், உழவர் முன்னணி பொதுக்குழு உறு்பபினர் திரு. சா. கோவிந்தசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி
----------------
புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழர் தேசிய இயக்கச் செயலாளர் திரு. இரா. அழகிரி, உலகத் தமிழ்க் கழகம் திரு. தமிழ் உலகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. செகன்னாதன், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், தமிழ் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் திரு. மகேசு, பெரியார் அறிவியல் மன்றத் தோழர் சடகோபன், நண்பர்கள் தோட்டம் திரு. திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒசூர்---------   ஒசூர் காந்தி சிலை முச்சந்தியில் இன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் முத்துவேல், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் கதிரவன், மகளிர் ஆயம் தோழர் அபிராமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் . . . இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு - ஆர்ப்பாட்டம்!



கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் . . .
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி
உருவபொம்மையை எரிப்பு - ஆர்ப்பாட்டம்! 


கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், இன்று (04.10.2016) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் வித்தியா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிமாறன், மனிதநேயப் பேரவை திரு. பஞ்சநாதன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

Tuesday, October 4, 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது!




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து
தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர்
நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது!



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை
----------------
சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில், இன்று (03.10.2016) மாலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்தனர். தமிழ்த் தேச மக்கள் கட்சித் தோழர் புரட்சி நம்பி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தகவல்தொழில்நுட்பத் தொழிலாளர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா, தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடந்தை
-------------
தஞ்சை மாவட்டம் - குடந்தை - உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தோழர்கள் முரளி, செழியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை
-------------
தஞ்சையில், தொடர்வண்டி நிலையம் முன்பு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. அலெக்சாண்டர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Saturday, September 24, 2016

பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!


பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும்

செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!

பாறையைப் பிளந்து கொண்டு விதைமுளைப்பது போல், தமிழினஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு“தமிழ் மக்கள் பேரவை” உருவாகியிருப்பது,உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம்குளிரும் செய்தியாகும்.

பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும்வெகு மக்களை ஒருங்கிணைத்துக்கொண்டு கூட்டுத் தலைமையின் கீழ்உருவாக்கியிருக்கும் “தமிழ் மக்கள்பேரவை”க்கு தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் மனம் நிறைந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர்விரோதப்போக்குகளை ஈழத்தில் வாழும்தமிழ் மக்கள் புரிந்து கொண்டு, “தமிழ்மக்கள் பேரவை”யால் முன்னெடுக்கப்படும்எழுக தமிழ் பேரணியில், தமிழ் சொந்தங்கள் பங்கெடுக்க வேண்டியது ஒவ்வொருதமிழரதும் வரலாற்றுக் கடமையாகும்.
தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்களப்படையாட்கள் போர் முடிந்த நிலையில்,கடந்த ஏழாண்டுகளாகத் தமிழர்களின்விளை நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், வீடுகளை வன்கவர்தல்செய்தும் புதிய வகையில் இன அழிப்புப்போரைத் தொடர்கின்றனர். இராசபட்சேஆட்சியில் நடந்த அதே சிங்களப்படையின்வன்கவர்தல்களும் ஆக்கிரமிப்புகளும்மைத்திரி – ரணில் ஆட்சியிலும்தொடர்கின்றன.
ஈழத்தின் அதிகரித்த ராணுவ பிரசன்னம்காரணமாக மக்களின் சுதந்திரமானநடமாட்டம் பாதிக்கப்பட்டிருப்பதோடுகுடியியல் (சிவில்) நிகழ்வுகளில்இராணுவத்தின் தலைகீடும் நெருக்கடியும்தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்கண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள்அனைத்தும் விலக்கப்பட்டு தமிழர்களின்பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள்திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் பேரவையின் கோரிக்கை உலகஅரங்கில் ஏற்கப்பட வேண்டிய மனிதஉரிமை நீதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைஇராணுவமயமாக்கிக் கொண்டுள்ளஅதேவேளை அவற்றில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத் திணித்துதமிழர் தாயக அழிப்பு வேலையை சிங்களஅரசு இன்றும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர்தாயகம் என்ற அடிப்படை உரிமையைப்பறிக்கும் வகையில் சிங்களர்களைமைத்திரி – ரணில் அரசு குடியேற்றிக்கொண்டுள்ளது.
இந்து மற்றும் கிருஸ்தவ, இசுலாம்மதங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின்தாயகத்தில் சிங்கள பௌத்தகோயில்களைப் புதிது புதிதாக எழுப்பிக்கொண்டுள்ளார்கள். இந்துக் கோயில்களில்புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்.இவ்வாறான தமிழர் ஆன்மிக அழிப்புநடவடிக்கைகளை மைத்திரி – ரணில் அரசுஉடனடியாகக் கைவிட வேண்டும்.
போர்க்காலத்தில் நடந்த தமிழினப்படுகொலைக் குற்றங்கள், காணாமல்போன தமிழர்கள் என்ற தலைப்பில்அழிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்கள் –அதற்கான பொறுப்பாளிகள் ஆகியவற்றைவிசாரித்து, நடந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர - குற்றவாளிகளைத்தண்டிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம்உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
“தமிழ் மக்கள் பேரவை” – நாளை (24.09.2016)காரி(சனி)க்கிழமை யாழ்ப்பாணத்தில்நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும்“எழுக தமிழ்” பேரணி, தமிழர் அரசியல்செயல்பாட்டில் புதுக்குருதி பாய்ச்சும் என்றுஉறுதியாக நம்புகிறோம்.
இப்படிப்பட்ட வடிவிலான மக்கள் அமைப்பும்,மக்கள் திரள் போராட்டங்களும்தான்தமிழர்களுக்கான உண்மையான –உறுதியான அரசியல் தலைமையைஉருவாக்கும். தற்சமயம் தமிழீழத்தில்சிங்கள ஆட்சியாளர்களின் அரவணைப்பில்வலம் வந்து கொண்டிருக்கும் கங்காணித்தலைமைகளைப் புறந்தள்ளும்.
கூட்டுத் தலைமையில் சனநாயகஉள்ளடக்கத்தோடும் சமூகப் பன்மைகளைஏற்கும் உளவியலோடும்உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மக்கள்பேரவை”யின் பேரணியில், பல இலட்சம்தமிழ் மக்கள் கலந்து கொண்டு உலகத்தின்கவனத்தை ஈர்க்க வேண்டும். உலகம்வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியல் திறன் காட்டிசாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கைஎமக்கிருக்கிறது.


Thursday, September 15, 2016

காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு நிறுவனகள் முற்றுகை தோழர் பெ. மணியரசன் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு.


காவிரி பாசன மாவட்டங்களில்

இந்திய அரசு நிறுவனகள் முற்றுகை

தோழர் பெ. மணியரசன் தலைமையில் 
தமிழ்த்தேசியப் பேரியக்கம், 
தமிழக உழவர் முன்னணி 
தோழர்கள் பங்கேற்பு.

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்!

  1. கர்நாடகத் தமிழர்கள் மீது அரசின் ஆதரவோடு
    நடக்கும் இன வெறி தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்!
    இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் உடைமை
    இழந்த தமிழ் வணிகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும்
    முழு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி
    காவிரி பாசன மாவட்டங்களில்
    அணைத்து உழவர் அமைப்புகள் மற்று அணைத்துக்கட்சிகள் சார்பில்
    இந்திய அரசு நிறுவனகள் முற்றுகை.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT