உடனடிச்செய்திகள்

Friday, March 25, 2016

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !
உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும்உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும்தஞ்சையில்,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்நேற்று (24.03.2016) காலைஉழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

·         டிராக்ட்ர் எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில்பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களை மீது குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,

·         உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,

·         அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு - இழப்பீடு வழங்க வேண்டும்,

·         குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

·         இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி - உற்பத்திச் செலவில் 50% கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும்சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,

·         பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் இணையதள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,

·         தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,

·         சர்க்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை ரூ. 2,750-இல் ரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துகாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெமணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திருகாவிரிதனபாலன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திருஅயனாபுரம் சிமுருகேசன்திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசுதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன்மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி ள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள்கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப்அரியானாகர்நாடகாஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடுதமிழ்நாட்டு உழவர்களுக்குதமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லைவெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவேதமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால்வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்துவெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவேஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================

Wednesday, March 9, 2016

கண்ணையா குமாருக்கு பல வாழ்த்துகளும் ஒரு வினாவும்! - தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!கண்ணையா குமாருக்கு 
பல வாழ்த்துகளும் ஒரு வினாவும்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!


சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில்வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்கொடுத்துள்ளனர். நாமும் அவர்க்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அப்போது கண்ணையகுமார் நெஞ்சுரத்தோடு தமது சமூக - அரசியல் நிலைபாட்டை விளக்கியுள்ளார். இந்தியத் தலைமை அமைச்சரையும் நையாண்டியுடன், அதேவேளை கறாராக விமர்சித்துள்ளார். அவை அனைத்தும்பாராட்டிற்குரியவை.

5.3.2016 அன்று சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சி நேர்காணலிலும் நல்ல கருத்துகளைப் பேசினார்.

ஆனால் இந்தியத் தேசியத்தை வலியுறுத்துவதில் பா.ச.க.வுடன் போட்டி போடுவது போல் அவரது பேச்சுகள்உள்ளன.

காசுமீர் விடுதலை கோரி கண்ணையா முழக்கமிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று.அதற்குத் தமது 3.3.2016 உரையில் விடையிறுத்த கண்ணையா “நாங்கள் விடுதலை கேட்கிறோம். இந்தியாவுக்குவெளியே போக அல்ல, இந்தியாவுக் குள்ளேயே! பட்டினி, வறுமை, சுரண்டல், துயரங்கள் ஆகியவற் றிலிருந்துவிடுதலை கேட்கிறோம்.

தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் பெண்கள் அடங்கியோர் உரிமைக்கான விடுதலை கேட்கிறோம்.இவ்விடுதலை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழியாக, நாடாளுமன்றத்தின் வழியாக, நீதித்துறையின்வழியாக உறுதி செய்யவேண்டும் என்கிறோம். இது பாபா சாகேப் (அம்பேத்கர்) அவர்களின் கனவு, தோழர்ரோகித் (வெமுலா) கனவு!

நான் சிறையில் இருந்தபோது எனக்கு இரண்டு கிண்ணங்கள் கொடுக்கப்பட்டன. ஒன்று நீலநிறம். இன்னொன்றுசிவப்பு. அவற்றைப் பார்த்தேன். எனக்கு விதியின் மீதோ கடவுள் மீதோ நம்பிக்கை இல்லை. ஒரே தட்டில்நீலக்கிண்ணமும், சிவப்புக் கிண்ணமும் வந்தது என்றால் நாட்டில் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்றுபொருள்! நீலக்கிண்ணம் அம்பேத்கர் இயக்கம், சிவப்புக்கிண்ணம் இடதுசாரி இயக்கம். இரண்டு இயக்கங்களும்இணைந்தால் நாம் அரசாங்கம் அமைக்க முடியும். இது எல்லார்க்கும் நீதியை நிலை நாட்டும்!”

கண்ணையா குமார் இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள்ஆகியோரைக்  கவனத்தில் கொண்டு அவர்களின் விடுதலை கோரியது நூற்றுக்கு நூறு சரி! ஆனால் இந்தியத்தேசிய ஆதிக்க வாதத்தில் ஒடுக்குமுறையின் கீழ் ஒடுக்குண்டு கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களின் உரிமை பற்றியோ, இந்தி மற்றும் சமற்கிருதத்தால் ஒடுக்கப்பட்டு உழலும் பல்வேறு மொழிகளின் உரிமை பற்றியோ அவர் கருத்து கூறவில்லை. தொலைக்காட்சி நேர்காணலிலும் இந்தியாவின் பன்மைத் தன்மையைப் பற்றி பொதுவாகக் குறிப்பிட்டார். இனம், மொழி சார்ந்து எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்?

தேசிய இனங்களின் சமத்துவமும் இறையாண்மையும் இல்லாமல் இந்தியத் தேசிய ஆதிக்கவாதமும்இந்துத்துவா இனவாதமும் – ஆரிய – பார்ப்பனிய சமூக ஆதிக்கமும் நிலவுவதால்தானே, இந்தியாவில் பலதேசிய இனங்கள் விடுதலையை கோருகின்றன. விடுதலை தேவைப்படாத அளவிற்குத் தேசிய இனங்களின்சமத்துவமும் இறையாண்மையும் நிலைநாட்டப்படும் என்று கண்ணையாகுமார் கூறவேண்டுமல்லவா?

அவ்வாறு அவர் கூறாததற்குக் காரணம்  அவர் இந்தியத்தேசிய இடதுசாரி! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்! பா.ச.க.வும், காங்கிரசும் இந்தியத் தேசிய ஆதிக்கவாதத்தின் வலதுசாரி பிரிவுகள்; சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் இந்திய தேசிய ஆதிக்கவாதத்தின் இடதுசாரிபிரிவுகள்!

கண்ணையா குமார் அடிக்கடி குறிப்பிடும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் என்றுகூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது.  கண்ணையாகுமார் தன்னை பிசிறில்லாத இந்தியத் தேசியவாதியாக கூறிக் கொள்வது  பா.ச.க.வின் இந்தியத் தேசிய ஆதிக்கவாதத்துடன் போட்டிப் போடத்தான் பயன் படுமே தவிர ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களுக்கும், தேசிய மொழிகளுக்கும் நீதி வழங்க பயன்படாது.

Monday, March 7, 2016

பெண்ணுரிமை வெல்க பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க! - பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


பெண்ணுரிமை வெல்க
பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் 
மார்ச்சு - 8 - அனைத்துலக மகளிர் நாள்
சிறப்புக் கட்டுரை!

பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறென்பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க!

தமிழர் அறம்அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறதுமனிதர்கள் அனைவரும் சமம்தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம்சாதிமதம்இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம்மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம்தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறதுநம்முடைய சங்க இலக்கியங்கள் தலைவன் தலைவி என்று கணவனையும் மனைவியையும் சமமாகத்தான் அழைத்தனபிற்காலத்தில் தமிழ்ச் சமூகத்திலும் ஆணாதிக்கம் கொடியேற்றியது.

மனித உளவியலில் ஆதிக்க உணர்வு இயல்பாக இணைந்துள்ளதுதனக்குக் கட்டுப்பட்டவர்கள்தான் சொல்வதைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள் இருக்க வேண்டும் என்று மனித மனம் விரும்புகிறதுஇதற்கு சாதியைப் பயன்படுத்துவர்மதத்தைப் பயன்படுத்துவர்இனத்தைப் பயன்படுத்துவர்செய்யும் தொழிலைப் பயன்படுத்துவர்குடும்பத்திற்குள்ளே பாசத்தைப் பயன்படுத்துவர்வயதைப் பயன்படுத்துவர்அந்த வரிசையில் பெண்ணாகப் பிறந்ததை ஆண் உளவியல் பயன்படுத்திக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

பெண்ணைத் தனக்குக் கட்டுப்பட்டவளாகதனது விருப்பத்தை நிறைவேற்றுபவளாக ஆணாதிக்க உளவியல் மாற்றிக் கொள்கிறதுமேல்சாதிப் பெண்ணாக இருந்தாலும்பணக்காரப் பெண்ணாக – சொத்துமிகவுள்ள பெண்ணாக இருந்தாலும் – படித்த பெண்ணாக இருந்தாலும்அதிகாரம் உள்ள பதவியில் இருக்கின்ற பெண்ணாக இருந்தாலும் அப்பெண்ணும் ஏதோ ஒருவகையில் சமூகத்திலும் தனது குடும்பத்திலும் ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்பவராகவே இருக்கிறார்.

எந்த ஆதிக்கமானாலும் அது எப்படித் தொடர்கிறதுஆதிக்கம் என்பது ஆதிக்கம் என்று உணரப்படாதவாறுசமூகத்தின் இயற்கையாக – காலம் காலமாக சமூகம் ஏற்றுக் கொண்ட செயல்முறையாக – உளவியல் மாற்றம் செய்யப்படுகிறதுஅதுவே சமூக நன்மையாக சித்தரிக்கப்படுகிறதுசூரியன் கிழக்கே தோன்றுவது போல்தென்றல் தெற்கிலிருந்து வீசுவது போல் இயற்கையானதாக - இயல்பானதாக ஆதிக்கம் என்பதை அனைவரும் உணரும்படி செய்துவிடுவார்கள் ஆதிக்கவாதிகள்!

ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் தாங்களே அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்அதற்கான கதைகள்புராணங்கள்கலைகள் எல்லாவற்றையும் உருவாக்கிவிடுவார்கள்வண்டி இழுத்துப் பழக்கப்பட்ட மாடு தானே முன்வந்து நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பதைப் போல்பெண்கள் தாமே முன்வந்து தங்களது அடிமை நிலையை ஏற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார்கள்அதுதான் பண்புஅதுதான் ஒழுக்கம் என்பதாகப் பெண்கள் கருதும்படிச் செய்துவிட்டார்கள்.

ஆணாதிக்கம் மட்டுமல்லஇன ஆதிக்கம்மொழி ஆதிக்கம்சாதி ஆதிக்கம்மத ஆதிக்கம்முதலாளிய ஆதிக்கம்ஏகாதிபத்திய ஆதிக்கம்இந்தியத் தேசிய ஆதிக்கம் உட்பட எல்லா ஆதிக்கங்களும்பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து அந்த ஆதிக்கங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகக் கட்டுக்கோப்பையும் மனநிலையையும் உருவாக்கி வைத்துள்ளன.

பெண்களுக்கெதிரான ஆணாதிக்கத்தை முதலில் எதிர்க்கும் பொறுப்பும்கடமையும் விழிப்புணர்வு பெற்றசனநாயக உணர்வுள்ள ஆண்களுக்குத்தான் இருக்கிறதுஇந்த ஆண்கள் முதலில் தங்கள் மனத்தில் உள்ள ஆணாதிக்க அழுக்கைத் துடைத்து மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்தன் தாயைஉடன் பிறந்தாளைதன் காதலியைதன் மனைவியை சமமாகக் கருதும் மனநிலையைஅவர்களோடு சமத்துவ நிலையில் உறவு கொள்ளும் உளவியலைஆண்கள் பெற வேண்டும்.

வீட்டு வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப் பக்குவம் ஆண்களுக்கு வர வேண்டும்சமைத்தல்துவைத்தல்கூட்டிப் பெருக்குதல்பாத்திரங் கழுவுதல் போன்ற பல வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்வது இழிவல்ல பெருமைக்குரிய செயல் என்ற மனமலர்ச்சி உருவாக வேண்டும்.

பெண்கள் பெற வேண்டிய உரிமைக்கான இலக்கு இப்போது ஆண்கள் பெற்றிருக்கும் ஆதிக்கங்கள் அல்லஆண்களும் பெண்களும் சம உரிமைகள் – பொது உரிமைகள் பெறுவதே பெண்ணுரிமையின் இலக்காக இருக்க வேண்டும்.

ஆணைப் போல் முடிவெட்டிக் கொள்ளுதல்ஆடை அணிந்து கொள்ளுதல்பொட்டு – பூ போன்றவற்றைத் துறத்தல் போன்றவற்றைப் பெண்ணுரிமைச் செயல்பாட்டின் அடையாளங்களாகக் கொள்ள வேண்டியதில்லைபெண்ணுரிமையின் இலக்கு ஆண் அடையாளங்களை – ஆணின் ஒப்பனைகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதல்லஅவ்வாறு செய்வதுமறைமுகமாக ஆணாதிக்கத்தைத் தனது முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வதாகும்.

அழகியல் உணர்வுகள் – அது சார்ந்த ஒப்பனைகள் ஆணுக்கொரு வகையாக இருக்கும்பெண்ணுக்கொரு வகையாக இருக்கும்அது தவறல்லபெண் விரும்பினால் ஆண்களைப் போல் ஆடை அணிந்து கொள்ளட்டும்பொட்டு வைத்தல்பூ வைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிடட்டும்ஆனால்புடவை கட்டிக் கொண்டுபொட்டும் பூவும் வைத்துக் கொண்டு வாழும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும்பெண் ஒரு பெண்ணாக ஒப்பனைகள் செய்து கொண்டாலும் அவருக்கும் அனைத்து உரிமைகளும் வேண்டும்இதுவே முன்மாதிரியான பெண்ணுரிமைப் போராட்டமாகும்.

பாலியல் உறவில் உருவாகும் ஆண் – பெண் சமத்துவம்தான் நிலையான பெண்ணுரிமையாக அமையும்அதில் நிலவும் ஆணாதிக்கம் சமூக அமைதியை மட்டுமின்றி குடும்ப அமைதியையும் கெடுக்கிறதுபாலியல் உறவில் பெண்ணுக்குப் புனிதங்கள் கற்பிப்பதைக் கைவிட வேண்டும்ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் ஒருவர்க்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்அதில் உள்ள குறைபாடுகளை ஆணும் பெண்ணும் மனம் திறந்து விவாதிக்கும் பண்பு பெற வேண்டும்வீணான ஐயங்களும்புனிதங்களும் பேசி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்ளக் கூடாதுபாலுறவில் பிறழ்ச்சிகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள வேண்டும்உடனே உறவை முறித்துக் கொள்ள முனையக்கூடாது.

சேர்ந்து வாழவே முடியாத அளவிற்கு மனமுறிவு ஏற்பட்டுவிட்டால்மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை எப்போதும் வேண்டும்அதேவேளை பாலுறவில் வெறும் நுகர்வு வெறி மட்டுமே தலைதூக்கி நின்றால்அது ஆண் – பெண் இணக்கத்தைநல்லுறவைக் கெடுத்துவிடும்வரம்பில்லா பாலுறவு ஆண் – பெண் இணக்கத்தையும்வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மட்டுமல்ல வாழ்க்கையையும் அழித்து விடும்.

எந்தப் பொருளை நுகர்வதற்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவைஅதைப் போல் ஆண் – பெண் பாலுறவு நுகர்வுக்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவைவரம்பற்ற நுகர்வு எதிலும் கூடாதுமிகை நுகர்வு வேட்கையும் வெறியும் கூடாதுஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்!

ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்த்து நடத்தும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் பெண்ணுரிமையில் சிறுசிறு முன்னேற்றங்களை அடைய உதவும். ஆனால்முழுமையான பெண் விடுதலைக்கு இட்டுச் செல்லாது.

எந்த வகை ஆதிக்கமும் செலுத்தாத – எந்த வகை ஆதிக்கத்தையும் ஏற்காத சமூகம் அமைவதே ஆணாதிக்கத்தை முற்றமுழுதாக நீக்கும்ஐரோப்பாவில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடந்து வருகின்றனநம் நாட்டுப் பெண்களைவிடக் கூடுதலான உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளார்கள்ஆனால் அங்கு இன்னும் ஆணாதிக்கம் நிலவுகிறதுபெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றனஏன்?

அந்நாடுகளில் இன ஆதிக்கம்முதலாளிய ஆதிக்கம்ஏகாதிபத்திய ஆதிக்கம் போன்ற ஆதிக்கங்கள் நிலவுகின்றனஎனவேஆணாதிக்கம் தொடர்வதற்கான உளவியல் களமாகவே ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

எந்தவகை ஆதிக்கமும் இல்லாத சமூகத்தைத் தொலைநோக்கு இலக்காக வைத்துக் கொண்டு – ஆதிக்க அழுக்குகளிலிருந்து விடுபட்டதாக நம் மனத்தை அன்றாடம் தூய்மைப்படுத்திக் கொண்டேநிலவுகின்ற ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட வேண்டும்அவ்வாறான போராட்டமாகப் பெண்ணுரிமைப் போராட்டம் நடக்க வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம்மற்றவகை உரிமைப் போராட்டங்களிலிருந்து ஒருவகையில் மாறுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறதுஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பதன் செயற்களம் எதுசமூகம் மட்டுமல்ல தன் வீடும்தான்!

ஆணாதிக்கத்தை எதிர்த்துத்தன் தந்தையோடு – தம்பியோடு – அண்ணனோடு – காதலனோடு – கணவனோடு போராட வேண்டியுள்ளதுஆண்டானை எதிர்த்துஆதிக்க சாதிக்காரரை எதிர்த்துஆதிக்க மதவாதியை எதிர்த்துஆதிக்க இனத்தை எதிர்த்துமுதலாளியை எதிர்த்துஇந்தியத் தேசியத்தை எதிர்த்துப் போராடுவது போல் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராட முடியாது!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஒரு பகை முரண்பாடல்லஉறவைத் துண்டித்துக் கொள்வதற்கான போராட்டமல்லஉறவை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம்அந்தப் புரிதலோடு, அந்தப் பக்குவத்தோடு ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பெண்கள் நடத்த வேண்டும்விழிப்புணர்வு பெற்ற ஆண்கள்சனநாயக உணர்வுள்ள ஆண்கள் அதே புரிதலோடு – பக்குவத்தோடு பெண்ணுரிமைப் போரட்டத்தை ஏற்க வேண்டும் என்பது மட்டுமல்லஆண்களும் அப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!

பெண்ணுரிமைப் போராட்டம் வெல்கபெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

===================================== 
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 
பேச76670770759047162164 
=====================================
முகநூல்www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்www.kannotam.com 
===================================== 
இணையம்tamizhdesiyam.com 
=====================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT