Thursday, April 19, 2018
இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!
Saturday, February 3, 2018
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!
மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறத்து வைத்து உரையாற்றினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றினார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்றினார்.
“தொழில் வணிகத்தில் அயலார்” - கருத்தரங்கம்
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றினர்.
Saturday, January 6, 2018
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை
காலை 9.30 மணிக்கு பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் - எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறந்து வைக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றுகிறார்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார்.
மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும், பிற்பகல் 2 மணியளவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பிற்பகல் 3 மணியளவில், “மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிடுகிறார். புலவர் இரத்தினவேலவன், திருவாளர்கள் ச. யோகநாதன், வெ. சேனாபதி, பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், சோயல் பாண்டியன், அர. மகேசுகுமார், நா. நெடுஞ்செழியன், இரா. இரஜினிகாந்த், ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் எந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
பிற்பகல் 4 மணிக்கு, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிக்கின்றனர்.
நிறைவாக நடைபெறும் வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Saturday, December 30, 2017
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Sunday, April 18, 2010
இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் மாநாடு!
இந்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவர இருக்கும் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாடு நேற்று(18.04.2010) நடைபெற்றது. இதில் பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
விதைச் சட்டம், உயிரித்தொழில் நுட்ப ஆணையச் சட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் வேளாண் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கும் சட்டம் ஆகியவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளன. மான்சான்டோ, சின்ஜென்டா, டுஃபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பண்ணைகள் அமைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
உழவர்களின் வேளாண் தொழிலையும், தமிழர்களின் தாயகத்தையும் பறிக்கிற சூதான இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் 25.03.2010 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ.நம்மாழ்வார் தலைமை தாங்கினார். “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த அறிவாளர்களும், உழவர்களும் திரள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மனித நேய மக்கள் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு ஜெ.கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞசை மாவட்டச் செயலாளர் திரு பழ.இராசேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாளாண்மை உழவர் இயக்கத்தி்ன் செயலாளர் திரு பாமயன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தம் கண்டன உரையை நிகழ்த்தினர்.
கிரீன் பீஸ் அமைப்பின் வெளியீடான் ஆங்கில நூல், தமிழில் “மரபீனீ சூதாட்டம்” என்ற பெயரில் மொழிப் பெயர்க்கப்பட்டு மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இயற்கை வேளாண் தொடர்பான நூல்களும், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கும் நூல்களும் பெருமளவில் விற்பனையாயின.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பெ.மணியரசன் தம் கண்டன உரையின் போது, “இந்த சட்டங்கள் அமெரிக்க காலனியாக இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றுகிற முயற்சி” என்றும் “பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் இந்திய வைசிராயாக செயல்படுகிறார்” என்றும் பேசினார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் முனைவர் வீ.சுரேஷ், “கம்பெனிகளுக்கு எதிராக பேசுவதையே தடுக்கும் வாய்ப்புட்டுச் சட்டங்களாக விதைச்சட்டமும் உயிரித் தொழில்நுட்பச் சட்டமும் இருப்பதால் இதனை கருப்புச் சட்டம் எனக் கண்டிக்கிறோம்“ என்றார்.
தொடர்ந்து, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு மு.தமிமுன் அன்சாரி, தாளாண்மை உழவர் இயக்க மையக்குழு உறுப்பினர் திரு ச.ரா.சுந்தரராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு க.சம்பந்தம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு சோம.இராஜமாணிக்கம், பெட்காட் தலைவர் திரு. ஜெயராமன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு அரங்க. குணசேகரன், கா.சா. கள அலுவலர் திரு கல்யாணராமன், கேரளாவின் தணல் அமைப்பைச் சேர்ந்த உஷா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநாட்டுப் பேச்சாளர்கள் இந்திய அரசின் கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிறைவில், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கிப் பேசினார்.“பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கமும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்கு பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்ற போதிலும் “வேளாண்மை இழிவானது - தமிழரின் மரபு அறிவுத் தொழில்நுட்பம் கீழானது - கிராமம் என்பது பிற்போக்கின் மையம்” என்று கருத்துகள் பரவச் செய்தார்கள். இன்னொரு பக்கம் வேளாண்மை நெருக்கடிளில் இருக்கின்றது. இவை இரண்டின் விளைவாக நிலத்தை இழப்பதற்கு உழவர்களே முன்வரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தம் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் இந்தக் கருப்புச் சட்டங்கள் வரைவு நிலையிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும், உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கக்கூடிய வருவாய் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உயிரிப் பட்டய வாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். திரு கோ.திருநாவுக்கரசு, திரு கு.பழனிவேல் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.