உடனடிச்செய்திகள்

Saturday, July 23, 2011

PRESS RELEASE[23.07.2011]:: “தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?” - கி.வெங்கட்ராமன் கேள்வி!

"தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?"கி.வெங்கட்ராமன் கேள்வி

23.07.2011, சென்னை-17.

"தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்?" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், "தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்களம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

இப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.Wednesday, July 20, 2011

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை- த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை, 20.07.2011.

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.

பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கத் தமிழக அரசுக்கு அனுமதியும் வெளிநாட்டுப் பணமும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கைகளை இந்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். பெட்ரோலியம் உற்பத்தியாகும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அரபு நாடுகளில் இருப்பதைப் போல மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 23.07.2011 காரிக்(சனி)கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு த.தே..பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் த.அன்புவாணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Sunday, July 17, 2011

தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார்.

 கவிவீச்சு

சிதம்பரத்தில் நேற்று(16.07.2010)  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர்.

மலர் அரங்கம்

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொழில், வணிகத்தை ஆக்கிரமித்துள்ள அயல் இனத்தார் குறித்த தகவல்கள் அடங்கிய மாநாட்டு மலரை குடந்தைத் தமிழ்க் கழகத்தின் செயலர் திரு. சா.பேகன் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பு.நடராசன், பொருளியல் துறை பேராசிரியர் ஜி.இரவி, சிதம்பரம் சிறுதொழில் முனைவர் அமைப்பின் திரு. செல்வ.கதிரவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலர் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.

 பாராட்டு அரங்கம்

கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் சிறை சென்ற 120 த.தே.பொ.க. தோழர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவையின் அமைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கோ.சேகர் பாராட்டுரை நிகழ்த்தினார்.

 தீர்மானங்கள்

மாநாட்டுத் தீர்மானங்களை குடந்தை த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.விடுதலைச்சுடர் முன்மொழிந்தார். காசுமீர், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள் வீடு, நிலம், மனை வாங்கத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கப்படக் கூடாது, 51 விழுக்காட்டுப் பங்குதாரராக தமிழர்களை சேர்த்துக் கொள்ளாத வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்க்க் கூடாது, தமிழக கல்வி நிறுவனங்களில் 85 விழுக்காட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 85 விழுக்காட்டுப் பணி வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து வெளிமாநில அரிசி மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பரங்கம்

      மாநாட்டின் சிறப்பரங்கத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தே.அரவிந்தன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. வெ.சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

 திரைப்பட இயக்குநர் திரு வெ.சேகர் பேசும் போது, தமிழ்த் திரைப்பட உலகில்  இன்று ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தாரின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். "ஈழத்தில் நம் இனம் செத்துக் கொண்டிருந்த போது திரை உலகின் சார்பில் இராமேசுவரத்தில் நாங்கள் கண்டனக் கூட்டம் நடத்த்த் திட்டமிட்டோம். அதற்கு, இயக்குநர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நடிகர் சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும், அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, அயல் இனத்தைச் சேர்ந்த நடிகர்கள் நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேராட வேண்டும் என்று சொல்லிவிட்டு வர மறுத்தனர். இந்தளவிற்கு நடிகர்கள் சங்கத்தில் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பு உள்ளது" என்று அவர் பேசினார்.

 மாநாட்டை நிறைவு செய்து பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், "தமிழ் இனம் அறிவுச் சமூகமாக திகழ்ந்து வந்த ஓர் இனம். அலெக்சாண்டருக்கு சேலத்திலிருந்து செய்யப்பட்ட வாள் தான் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஓர் அறிவுச் சமூகத்தில் பிறந்த தமிழ் பொற்கொல்லர்கள் இன்று அயல் இனத்தாரின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நீடித்து வருகின்றது. இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று பேசினார்.

 கடலூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன் நன்றி நவின்றார்.

 கடலூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன் நன்றி நவின்றார்.போராட்டங்கள்

செய்திகள்

Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT