உடனடிச்செய்திகள்

Friday, October 25, 2013

பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!


பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!

இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் இரவி, உயிரிதுளிகள் இயக்கம் முகிலன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சிபி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்று 300 தோழர்கள் கைதாகி கிரீம்சு சாலை அருகில் மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி சார்பாக பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், சென்னை நகரச் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் நகரச் செயலாளர் இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் நகரச் செயலாலர் தோழர் வெற்றித் தமிழன், சென்னை நகரச் செயலாளர் தோழர் கோவேந்தன், மகளிர் ஆயம் தோழர் ம.லெட்சுமி, தோழர் புதுமொழி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கைதாயினர்.

இந்திய அரசே ! இந்திய அரசே !
ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே !

காமன் வெல்த் மாநாடா!
சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!
பொதுநல மாநாடா?
கொலைக் காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?

கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது
ஏனடா இந்திய இலங்கையே
அந்த நாள் ஆரியப் பாசமா?
சிங்களன் உணக்கு பங்காளி?
தமிழர் உனக்குப் பகையாளியா?

வெளியேற்று வெளியேற்று
காமன் வெல்த் அமைப்பிலிருந்து
சிங்கள நாட்டை வெளியேற்று

மனித உரிமைகள் மாண்புகள் என்று
மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!
மகிந்த இராசபட்சே செய்த
மனிதப் படுகொலைத் தெரியலையா ?

நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை
கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே

போன்ற முழக்கங்கள் எழுப் பட்டது.


















Tuesday, October 22, 2013

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர்களை தோழர் பெ.மணியரசன் சந்தித்தார்!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பெல்காம் சிறையிலுள்ள
நான்கு தமிழர்களை தோழர் பெ.மணியரசன் சந்தித்தார்!

கர்நாடக மாநிலம் பெல்காம் நடுவண் சிறையில் மரண தண்டனை சிறைவாசிகளாக உள்ள நான்கு தமிழர்களான சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோரை இன்று(22.10.2013) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான 10 பேர் கொண்ட தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இக்குழுவில், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், மற்றும் தோழர்கள் பார்த்திபராசன், மு.வேலாயுதம், குழந்தைராஜ் ஆகியோர் இருந்தனர்.

கர்நாடகத்தில், வெவ்வேறு தனிப்பட்ட வழக்குகளில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளான சிவா, ஜடேசுவர சாமி, சாய் பன்னா நடேகர் ஆகியோரையும் தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இவர்கள் அனைவருடைய கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
இவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்குகளில் எள்ளளவும் தொடர்பில்லை என்று மனம் நொந்துப் பேசினார்கள்.

குறிப்பாக, ஞானப்பிரகாசம் கூறிய செய்தி, அனைவர் மனதையும் உருக்கியது. காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேறொரு ஞானப்பிரகாசத்தின் கொலையை மறைப்பதற்காக காவல்துறையினர், அப்பாவியான ஞானப்பிரகாசத்தை பாலாறு வெடிகுண்டு வழக்கில் இணைத்துள்ளதை ஞானப்பிரகாசம் மனமுருக எடுத்துச் சொன்னார்.

அதே போல், பிலவேந்திரன் ஈரோடு பகுதியில் வேளாண் பண்ணை ஒன்றில் அவரும், அவரது மனைவியும் வேலை செய்திருந்த போது, காவல்துறையால் பிடித்து வரப்பட்டு பாலாறு வெடிகுண்டு வழக்கில் சேர்த்துள்ளனர். அதிரடிப்படை அவரை விசாரிக்கும் போது, அவரை அம்மணப்படுத்தி, அவரது ஆண் குறி உட்பட அனைத்து உறுப்புகளிலும் மின்சார அதிர்வு கொடுத்து சி்த்திரவதை செய்யப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மீசை மாதையன் நீண்டகாலத் தனிமைச் சிறை வாழ்க்கையாலும், அதிரடிப்படை சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருக்கிறார்.

பாலாறு வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பளித்த தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 133 பேரில், 7 பேருக்கு வாழ்நாள் தண்டனை விதித்தது. மீதமிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீ்டு செய்தனர்.
உச்சநீதிமன்றமோ, ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்பது போல், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, மற்றவர்களை விடுதலை செய்தது.

ஒரு மேல் முறையீட்டு வழக்கில், தண்டனையை உறுதி செய்து அல்லது தண்டனையைக் குறைத்து தான் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், மேல் முறையீடு செய்தவர்களைத் தூக்கிலிடும் தீர்ப்பை முதன் முறையாக இந்நான்கு தமிழர்களுக்கும் உச்சநீதிமன்றம் விதித்ததாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சைமன் மற்றும் கர்நாடகச் சிறைவாசிகள் மூவரும், அவரவர் வழக்குகளில் காவல்துறையினரால் எப்படி பொய்யாக சேர்க்கப்பட்டோம் என்பதை விவரித்துச் சொன்னார்கள். 61 அகவையான சாய் பன்னா நடேகர் என்ற முதியவர், கடந்த 22 ஆண்டுகளாக மரண தண்டனை பெற்று அவர் சிறையிலிருப்பதைக் கூறி கண்ணீர் வடித்தார்.

அனைவரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தங்களுக்கு ஞாயம் வழங்கும் என எதிர்பார்ப்போடு உள்ளனர்.

தோழர் பெ.மணியரசன் அவர்களும், கி.வெங்கட்ராமன் அவர்களும், “தமிழ்நாட்டில் இராசீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட மூன்று தமிழர் உயிரைக் காக்கவும், பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர் உயிரைக் காக்கவும், இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படவும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் போராடி வருகிறது. கர்நாடகத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கன்னட இலக்கியவாதிகள் போன்றோருடன் தொடர்பு கொண்டு மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவாக கருத்தரங்குகள், பரப்புரைகள் நடத்த முயற்சிகள் எடுப்போம். நம்பிக்கையோடு இருங்கள். தெம்பாக இருங்கள். உங்களுக்காக கவலைப்படுவோர் வௌயில் ஏராளமானோர் உள்ளனர்” என்று தெரிவித்து அவர்களிடமிருந்து விடை பெற்றனர்.







(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு) 

Saturday, October 12, 2013

”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக
ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்!
மான்சாண்டோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

இன்று(12.10.2013) உலகம் முழுவதும் மான்சாண்டோ குழும எதிர்ப்பு நாள் கடைபிடிப்பதையொட்டி, திருவாரூரில் உழவர் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தன. மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு மாறான தென்னகம்என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு உழவர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன.

திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு. வெ.துரைராசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் தலைவர்களான திரு. மு.சேரன், திரு. சி.பாலகிருஷ்ணன், திரு. பா.மணிமொழியன், திரு. ஆர்.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன் இப்பேரணிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திரு. கே.சுரேஷ் கண்ணா, திரு. காவிரி தனபாலன் ஆகியோர் பேசினர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அஞ்சலகத்தின் எதிரே நிறைவுற்ற பேரணியின் முடிவில், மான்சாண்டோ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் முனைவர் கோ.நம்மாழ்வார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.

முனைவர் கோ.நம்மாழ்வார் அவர்கள் உரையாற்றும் போது, மரபீணி மாற்று விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அந்தப் பயிர்களைப் பிடுங்கி அழிப்போம்  என்றும் மான்சாண்டோ உருவ பொம்மையை கொளுத்துவோம் என்றும் எச்சரித்தார்.

தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

”நகரங்களிலே உள்ள பழமுதிர்சோலைகளில் பூசணிக்காய் அளவிற்கு கத்தரிக்காய் பெரிதாக இருக்கிறது. இந்த வகை கத்திரிக்காய் மான்சாண்டோவின் மரபீணி மாற்று விதையாகும். மரபீணி மாற்று பி.ட்டி. பருத்து சாகுபடி தான் நூற்றுக்கு என்பது விழுக்காடு நடைபெறுகிறது.

மரபீனி மாற்றுப் பயிர் ஒழுங்காற்றுச் சட்டம் மசோதா நிலையிலேயே இருக்கிறது. அதை சட்டமாக நிறைவேற்ற இந்தியாவெங்கும் உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமையில் ஒரு தேர்வுக் குழு(Select Commitee)வை அமைத்து அதனுடைய ஆய்வுக்கு விட்டார்கள்.

அக்குழு இந்தியாவெங்கும் சென்று களஆய்வு நடத்தி கருத்துகள் கேட்டு, இறுதி அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில் ”மரபீணி மாற்று விதைகளைப் பயன்படுத்தினால் விளைச்சல் பாதிக்கப்படும், அதனால் உருவாகும் காய்கறிகளையும் தானியங்களையும் உண்பவர்களுக்கு நோய்கள் ஏற்படும். அதன் தாவரங்களை உண்ணும் பிராணிகள் நோய் வாய்ப்படும். மனிதர்களும் விலங்குகளும் மலட்டுத்தன்மை அடைவர். அப்பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை” என்று கூறி மரபீணி மாற்றுப் பயிர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வகை பயிர்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பளித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறியது.

அவ்வறிக்கை அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் மேற்படி மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது சட்டமாகவில்லை.

ஆனால், கொல்லைப்புற வழிகளில் இந்திய அரசு மாண்சாண்டோ, சின்ஜென்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மரபீணி மாற்று விதைகளை இந்தியாவிற்குள் அனுமதித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்குள்ளும் அனுமதித்திருக்கிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், ஆளுங்கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மான்சாண்டோ நிறுவனத்தின் கங்காணிகளாக வேலை செய்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அளித்த அறிக்கையை நடைமுறையில் செல்லாக்காசாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போதும் சரி, இப்பொழுது அண்ணா தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் சரி மான்சாண்டோவின் மரபீணி மாற்று விதைகளை அனுமதிக்கிறார்கள். இன்றும் மான்சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோயம்புத்துர் வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மரபீணி மாற்று விதைக்கான ஆய்வுத்துறைகள் செயல்படுகின்றன. அப்பல்கலைக்கழகங்கள் மரபீணி மாற்றுப் பயிர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கின்றன.

இப்பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோ கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களுக்கு எதிரான ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கி கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் அ.இ.அ.தி.மு.க.வின் தம்பித்துரையும் உறுப்பினராக இருந்தா. அவரும் மரபீணி மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அத்தேர்வுக் குழுவில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அண்ணா தி.மு.க.வின் தமிழக அரசு, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோவின் நிதியில் ஆராய்ச்சிகள் நடப்பதை அனுமதிப்பது ஏன்? தமிழக முதலமைச்சர் மவுனம் காக்காமல் இதிலொரு முடிவெடுக்க வேண்டும்! அந்த மான்சாண்டோ ஆராய்ச்சி அமைப்புகளை மூடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மரபீணி மாற்று விதைகளோ, காய்கறிகளோ, தானியங்களோ வராமல் தடுக்க வேண்டும்.

இது உழவர்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. இது அனைத்து மக்களுக்குமான சிக்கல். இனிமேல் கடைகளில் மரபீணி மாற்றுக் காய்கறிகள் இருந்தால், அவற்றை வெளியே சாலையில் வீசி அழிக்க வேண்டும். பி.ட்டி. பருத்தியை சாகுபடி செய்யாமல் விவசாயிகளை தடுக்க வேண்டும். இது போன்ற போராட்டங்களை நடத்துவதற்கும், உழவர்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கு கொள்வதற்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவிலுள்ள உழவர்கள் அணியமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்து இப்போராட்டத்தை திருவாரூரில் முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருத்துறைப்பூண்டி மூத்த த.தே.பொ.க. தோழர் இரா.கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் மு.தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.

(செய்தி: த.தே.பொ.க. செய்திப்பிரிவு, படங்கள்: குடந்தை செந்தமிழன்)

Friday, October 11, 2013

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்


தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அக்டோபர் 11 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, "இலங்கையில் காமன்வெல்த்எதிர்ப்பியக்கம்" சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார். இலங்கையில் காமன்வெல்த்எதிர்ப்பியக்க அமைப்பாளர் தோழர் மதியவன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், .திமு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் திரு. கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .அருணபாரதி உரையாற்றினார்.

.தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன், ..மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் தலைமையேற்றார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தோழஎ ஜெ. கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் பாரி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் திரு. மதுபூர் .மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சிதம்பரம்

சிதம்பரம், வடக்கு வீதி தலைமை அஞ்சலகம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் மூத்த நகர்மன்ற உறுப்பினர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் திரு. .இரமேஷ் தலைமைத் தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணை பொதுச் செயலாளர் திரு. .கண்ணன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. ..செல்லப்பன், .தி.மு. குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.ராசாராமன், நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. செ.புகழேந்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. பழமலை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் .குபேரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.  

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிறைவுறையாற்றினார். .தே.பொ.. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்து பேசினார்.

தமிழக உழவர் முன்னணி, சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு, மனித உரிமைகள் கழகம், தமிழக மாணவர் முன்னணி உளளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில்  திரளாகக் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் .முருகன் தலைமையேற்றார். மனித நேயப் பேரவை அமைப்பாளர் திரு.பஞ்சநாதன், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் திரு. விடுதலைகாசி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. ஜோதிவேல், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், .தே.பொ.. முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை, தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. இராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ..மு தோழர் மணிமாறன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர் ஆரோக்கியமேரி தமையேற்றார். புரட்சி கவிஞர் பேரவை திரு. மறவர்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு. முதல்வன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் விடுதலைச்செல்வன், ஆதித்தமிழர்ப் பேரவை தோழர் செல்வம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தோழர் திவ்யா, தமிழ் தமிழர் இயக்கம் தோழர் பரிதி, தமிழ்நீதி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் இராசேந்திரன், வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்ப்புலிகள் அமைப்புத் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உரையாற்றினார். .தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .ஆனந்தன் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். மேநாள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவாளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் ராஜா, மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. குமரேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ...பே. அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செம்பருதி உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி காதிகிராப்ட் சந்திப்பு அருகில் மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் .பானுமதி தலைமையேற்றார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தோழர் .ஐயப்பன், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஆரோக்கியசாமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் சினி விடுதலைஅரசு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. கலியப்பெருமாள், பெரியார் பாசறை தோழர் அன்பழகன், தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்கறிஞர் கென்னடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்புக் குழு உறுப்பினர் கவிஞர் இராசாரகுநாதன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் பிரபு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்புத் தோழர் வெங்கடேசன், தோழர் வெட்டுபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் .கவித்துவன் , தோழர் வெ..லட்சுமணன் ஆகியோர் உரையாற்றினர்.

( செய்தி : த,தே.பொ.க.செய்திப் பிரிவு)



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT