உடனடிச்செய்திகள்
Showing posts with label அணுஉலை எதிர்ப்பு. Show all posts
Showing posts with label அணுஉலை எதிர்ப்பு. Show all posts

Monday, February 10, 2014

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!" தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!


மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு:
"தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுக்குழுவில் தீர்மானம்!



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீ விதைகளை ஆய்வு செய்ய, காங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின் ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும், பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். அப்பகுதி மக்களும், தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டங்களை கைவிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

இடம் : சென்னை-78.
நாள்  : 09.02.2014

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Friday, March 29, 2013

கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம்!


கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம்!


கல்பாக்கத்தில்தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசுக் காவல்துறைகொடும் அடக்கு முறைகளை ஏவியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கல்பாக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டு செயலில் உள்ள அணுஉலைகளிலிருந்து தடையில்லா மின்சாரம் வேண்டும்இலவசமான சுகாதாரமான குடிநீர் வேண்டும்,கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பிலும்கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்இந்திய அரசால் எங்கிருந்தோ கொண்டு வரப்படுகின்றகதிரியக்கம் கொண்ட அணுக்கழிவுகளை கல்பாக்கத்தில் சேமிக்கக் கூடாதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அணுக்கதிரியக்கத்தின் தாக்கத்தைக் கண்டறியும் வசதிகள் கொண்டபன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்புதிய அணுஉலைகளை கல்பாக்கத்தில் நிறுவக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம்அணுஉலையைச் சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம்பட்ராஸ்புதுப்பட்டினம்ஒய்யாரி குப்பம்கொக்கிளமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களி்ல் ஈடுபட்டு வந்தனர்.

26.03.2013 அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரெழுச்சியுடன் திரண்ட 3000க்கும் மேற்பட்ட மக்கள் முதல் அணுமின் நகரியம் வாயிலை அமைதியான வழியில் முற்றுகையிட்டனர்காலையில் தொடங்கிய மறியல் போராட்டம் மாலை வரை நீடித்ததுகிராம மக்கள் சார்பில் ஊர் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள்மீனவர்கள் மற்றும் தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுமாவட்ட வருவாய் அதிகாரி(ஆர்.டி..), தாசில்தார் முன்னிலையில் அன்று மாலை அணுமின் நிர்வாகத்துடன்பேச்சுவார்த்தை நடத்தியதுகோரிக்கைகளை பரிசீலிப்பதாக வாய்மொழியில் அணுமின் நிர்வாகம் கூறியதைபோராட்டக் குழுப் பிரதிநிதிகள் ஏற்கவில்லைஎழுத்து மூலம்உத்தரவாதம் அளிக்கக் கோரியதையும் அணுமின் நிர்வாகம் ஏற்கவில்லைஎழுத்து உத்தரவாதம் கொடுக்கப் படவில்லையெனில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம்என போராட்டக் குழுவினர் எச்சரித்துவிட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்துமறுநாளான 27.03.2013 அன்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் வழிமறுத்துத் தடுத்தனர்.அங்கு அறவழியில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை கொடுமையான முறையில் தடியடி நடத்தியதுஅதில், 22 பேர்வரை காயமுற்றனர். 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்தடியடியைக் கண்டித்து, காவல்துறையிடமும் அணுமின் நிர்வாகத்திடமும் முறையிட்ட 30 பேர்கொண்ட போராட்டக்குழுவினரில், 18 பேர் தடியடியை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானே முன்வந்து கைதாயினர்அதில்நால்வர் தடியடியில் கடுமையாகக்காயமுற்றிருந்தனர்.

இந்நிலையில்கைதான 18 பேரை விடுவிக்கக் கோரி கல்பாக்கம் பகுதியைத் துண்டிக்கும் வகையில் அனைத்து வழிகளிலும் மக்கள் அமைதியான வழியில் சாலை மறியலில்அமர்ந்தனர்இந்நிலையில்போராட்டக் குழுவினரிடம் கடிதம் ஒன்றை அளித்த அணுமின் நிர்வாக இயக்குநர் கோட்டீசுவரன்மக்கள் கோரிக்கைகள் சிலவற்றைப்பரிசீலிப்பதாகவும்புதிய அணுஉலைகள் அமைக்கும் முடிவு இந்திய அரசிடம் தான் உள்ளதெனவும் தெரிவித்தார்எனினும்கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவிக்கக் கோரிநள்ளிரவு 12 மணி வரை சாலை மறியல் தொடர்ந்தது.

இந்நிலையில்கைதான 18 பேர் மீது கொலை முயற்சி (..பிரிவு 307) உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. காவல்துறையினரின் இந்தஅடக்குமுறையைக் கண்டித்தும், 18 பேரை விடுவிக்கக் கோரியும் 28.03.2013 அன்று கல்பாக்கத்தில் மக்கள் நடத்தவிருந்த உண்ணாப் போராட்டத்திற்கும் அனுமதிமறுக்கப்பட்டதுதடையை மீறி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில், 130 பெண்கள் மற்றும் 440 ஆண்கள் என மொத்தம் 670 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களில் ஆண்கள் 440 பேரைத் தவிர்த்துபெண்களை இரவு 9 மணிக்கு விடுவித்தனர்.

ஆண்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் காவல்துறை திட்டமிட்ட நிலையில்அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பினஇதனையடுத்து, ஒவ்வொருகிராமத்திற்கும் 2 பேர் என போராட்டத்தில் முன்னிலை வகித்த 27 பேரையும்அதன் பின் 102 பேரையும் சேர்த்த மொத்தமாக 129 பேரை நீதிமன்றக்காவலில் சிறைக்குஅனுப்பியுள்ளது காவல்துறை. 27 பேரை சென்னை - புழல் நடுவண் சிறைக்கும்எஞ்சிய 102 பேரை வேலூர் நடுவண் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும்அப்பகுதியைச் சேர்ந்த எளிய கிராம மக்கள் ஆவார்கள்இவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுஅரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததுகலவரத்திற்கு வித்திட்டது என பிணையில் வர முடியாத பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் எங்குமே நிறுவப்படாத வி.வி..ஆர்.(VVER) எனப்படும் புதிய அணுத் தொழில்நுட்பத்தில் தான் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகின்றதுஅப்பகுதி மக்கள்,செயல்பட்டு வரும் அணுஉலையை மூட வேண்டுமெனக் கோரவில்லைஅதிலிருந்துமின்சாரம் வேண்டுமென்றும்புதிய அணு உலைகளை நிறுவ வேண்டாம் என்றும், ஆபத்தான அணுக்கழிவுகளை எங்கிருந்தோ கொண்டு வந்து கல்பாக்கத்தில் வைக்க வேண்டாம் என்றும் தான் அறிவுறுத்துகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்குசிலசலுகைகள் வேண்டுமென்று தான் போராடுகின்றனர்.

ஆனால்அவர்கள் மீது இவ்வளவுக் கொடிய அடக்குமுறைகளை ஏவ வேண்டிய அவசியமென்ன? அணுஉலைகளால் மின்சாரச் சிக்கல் தீர்ந்துவிடும் என்று அரசும்ஊடகங்களும்பரப்புகின்ற பொய்ச் செய்திகளை கல்பாக்கம் மக்களின் போராட்டம் தகர்த்தெறிந்துள்ளது தான் இதற்கக் காரணமா?

இந்திய அரசின் கல்பாக்கம் அணுமின் நிலையம்அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லையெனில்அதை தமிழக அரசு தான் தட்டிக்கேட்டுநிறைவேற்றிவைக்க வேண்டும்ஆனால்மக்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி ஒடுக்குவது எவ்வகையிலும் நியாமல்ல.

எனவேதமிழக அரசுகைதுசெய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்மக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறைஅதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மக்கள் கோரிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லையெனில்கல்பாக்கம் அணுமின்நிலையத்தை செயல்பட அனுமதிக்க முடியாதென இந்திய அரசுக்குதமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT