உடனடிச்செய்திகள்

Thursday, December 31, 2020

"மறுபிறவி எடுத்துள்ளார் ஐயா நம்மாழ்வார்! பகுதி-1 ” - ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!


"மறுபிறவி எடுத்துள்ளார் 

ஐயா நம்மாழ்வார்! பகுதி-1 ” 


0.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஐயா பெ.மணியரசன் அவர்களின் சிறப்புரையில் இருந்து முதல் பகுதி.






கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"விவசாயிகள் கொத்தடிமைகளா?" 'திண்ணை' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் நேர்காணல்!

"விவசாயிகள்  கொத்தடிமைகளா?" 


'திண்ணை' ஊடகத்துக்கு..

உழவர் பகை சட்டங்கள் குறித்து,

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
 ஐயா கி. வெங்கட்ராமன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"பெரியாரிஸ்டுகளும் தமிழ்த்தேசியமும்" பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு.... - ஐயா பெ. மணியரசன் நேர்காணல் !


"பெரியாரிஸ்டுகளும்  தமிழ்த்தேசியமும்"


பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு....

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல் !





கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, December 30, 2020

வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க! - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


வன்முறையில் ஈடுபட்ட
சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தமிழர் தேசிய முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. வை.இரா. பால சுப்பிரமணியம் அவர்கள், நேற்று (29.12.2020) இரவு - சிதம்பரம் நடராசர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவில் வழிபட முயன்றபோது, நடராசர் கோயில் தீட்சிதர்கள் அவரைக் கீழே தள்ளிவிட்டு, தாக்குதல் நடத்தி, அவர் கையிலிருந்த தீபாரதனைத் தட்டை பிடுங்கி வீசியெறிந்து இழிசொற்கள் பேசி அராஜகத்தில் ஈடுபட்டனர். 

தேவாரம், திருவாசகம் பாடி தமிழ்வழியில் நடராசர் ஆலயத்தில் வழிபாடு நடக்க வேண்டுமென்றும், நடராசர் ஆலயத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும், கூட்டங்களிலும் திரு. பாலசுப்பிரமணியம் முக்கியப் பங்காற்றினார் என்பதால், தீட்சிதர்கள் அவர் மீது தொடர்ந்து வன்மம் காட்டி வருகிறார்கள். 

சென்ற ஆண்டு (2019), ஆருத்ரா தரிசனத்தின்போது இதேபோல் அவர் மீது தாக்குதல் நடத்தியதைக் கருத்தில் கொண்டு, அவர் கோரியபடி அவருக்கு சிதம்பரம் நகரச் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க அவரை சூழ்ந்து நின்று கொண்டிருந்தபோதும், காவலர்களையும் தாக்கி, திரு. பாலசுப்பிரமணியத்தையும் கடுமையாகத் தாக்கி இழிவுபடுத்தி இருக்கிறார்கள். 

நடராசர் கோயில் தீட்சிதர்களின் இந்த வன்முறை கடும் கண்டனத்திற்குரியது! 

திரு. பாலசுப்பிரமணியம் அவர்களைத் தாக்கிய தீட்சிதர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் காவல்துறையில் புகார் மனு அளித்திருக்கிறார். அதன்மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பாலசுப்பிரமணியத்தைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்தேன். 

இந்நிலையில், தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. வழக்குப்பதிவோடு நின்றுவிடாமல், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோல் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் தீட்சிதர்களைக் காவல்துறையினர் கண்காணித்து எச்சரிக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.    
                              

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Monday, December 28, 2020

"தமிழ் ஆட்சிமொழி வாரம் கைவிடப்படுகிறதா?" - ஐயா பெ. மணியரசன் உரை..

"தமிழ் ஆட்சிமொழி வாரம் 

கைவிடப்படுகிறதா?"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் உரை..



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனவெறியர்களா?" - "பேசு தமிழா பேசு" இணைய ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


"தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனவெறியர்களா?"


"பேசு தமிழா பேசு" இணைய ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, December 25, 2020

"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார் !" - ஐயா பெ. மணியரசன்.



"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் 
சந்தித்து நலம் விசாரித்தார் !"

தமிழ்த் தேசியப் பேரியக்கத் 
தலைவர் ஐயா பெ. மணியரசன்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவரும், பெரியாரியச் சிந்தனையாளரும், சமுகநீதிப் போராளியுமான மூதறிஞர் ஆனைமுத்து ஐயா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் ஐயா அவர்களின் மூத்த மகன் தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்தில் இன்று (25.12.2020)  பகல் 1.30 அளவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், மகளிர் ஆயம் தலைவர் ம. இலட்சுமி அம்மா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தென் சென்னை கிளைச் செயலாளர் தோழர் மு.வெ. இரமேசு ஆகியோர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நலம் கேட்டறிந்தனர்.

ஐயா அவர்கள் பெம அவர்களையும், புலவர் இரத்தினவேலவன் அவர்களையும் அடையாளம் கண்டு கொண்டு எப்படி வந்தீர்கள் நலமா என்று கேட்டார்கள்.

தம் தந்தையாரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து குணமாகி வீட்டிற்கு அழைத்து வந்த செய்திகளைத் தோழர் பன்னீர்செல்வம் உரையாடலில்  பகிர்ந்துகொண்டார்.

ஐயா ஆனைமுத்து அவர்கள் முழுமையாக நலம் பெற்று மீண்டும் சிந்தனையாளன் இதழ் வழி தமிழர்களுக்குரிய வழி காட்டல்  சிந்தனைகளை வழங்க வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தோழர் பன்னீர்ச்செல்வம் அவர்களிடம்  தோழர் பெ.ம கூறினார். பின்னர் விடைபெற்றனர்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்! - ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!


தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் 24.12.2020 அன்று பிற்பகல் திருநெல்வேலி மருத்துவமனையில் காலமான செய்தி மிகவும் துயரம் அளிக்கிறது. சமகாலத் தமிழ்ச் சமூக ஆய்வில் தமிழர் பண்பாட்டில் நிலவும் பல்வேறு கூறுகளைத் துல்லியப்படுத்தி அவற்றின் சிறப்புகளையும் தேவைகளையும் விளக்கியவர் ஐயா தொ.ப. அவர்கள். வட்டாரத் தெய்வ வழிபாடுகளில் உள்ள தனித்தன்மை, அவற்றின் ஆரிய ஆன்மிக எதிர்ப்பு, தமிழர் வீரம், தமிழர் பெருமிதம் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். 

தமிழ்த்தேசியச் சிந்தனைகளைத் பல்வேறு நூல்களில் எடுத்துரைத்தார். தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத வெறியர்கள் நடத்திய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து கண்டித்து வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தார். அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்த சனநாயக இயக்கங்களில் பங்கு கொண்டார்.

மிகச் சிறந்த ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய தொ.ப. அவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்களோடும், இளைஞர்களிடமும் அன்புடனும் சமத்துவ மனநிலையுடனும் பழகி வந்த பண்பாளர். தொ.ப அவர்கள் கடந்த சில நாட்களாகவே நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் திடீரென இயற்கை எய்தியது பேரதிர்ச்சியைத் தருகிறது. 

அவர் மறைந்துவிட்டாலும் அவர் தந்திருக்கும் ஆய்வு நூல்கள் தமிழர்களுக்குத் தொடர்ந்து வெளிச்சம் தரும், ஊக்கம் தரும்.  தொ.ப. அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, December 23, 2020

"வெளியாரை வெளியேற்று என்பது மக்களின் கோரிக்கை!” - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

"வெளியாரை வெளியேற்று 

என்பது மக்களின் கோரிக்கை!”



18.12.2020 அன்று சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாட்டு தொழில் வணிகம் வேலை வாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை என்ற கருத்தரங்கில்  தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்    ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!  




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, December 22, 2020

"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !" - ஐயா பெ. மணியரசன் சாட்டை!

"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !"


“தமிழ்நாட்டில் நிலவும் தற்கால அரசியல்
 சூழல் பற்றிய வினாக்களுக்கு விடை!”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் சாட்டை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, December 20, 2020

"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!" ஐயா பெ.மணியரசன் உரை!

"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம்  செய்த  வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, December 16, 2020

"தஞ்சை போராட்ட களம்" அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

"தஞ்சை போராட்ட களம்"


அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. 

இன்று காலை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, December 15, 2020

"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!" “Newsglitz ஊடகத்துக்கு” ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!

"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!"


“Newsglitz ஊடகத்துக்கு”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"இந்திய உழவர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் !" பல்வேறு நாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இணையவழிக் கருத்தரங்கில்... ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

"இந்திய உழவர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் !"



அனைத்துலக மனித உரிமை நாளை முன்னிட்டு, “ஒருங்கிணைந்த சீக்கியர்கள்” (UNITED SIKHS) அமைப்பு சார்பில், “இந்திய உழவர் சட்டங்கள் மற்றும் உரிமைகள்” குறித்த பல்வேறு நாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இணையவழிக் கருத்தரங்கில்...

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

வர்ணாசிரமப் புது வடிவமைப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!



வர்ணாசிரமப் புது வடிவமைப்பில்
புதிய வேளாண் சட்டங்கள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

மோகன் பகவத் – மோடி குழுவினர் கூறும் இந்து ராஷ்டிரம் (இந்துத் தேசியம்) என்பது, வர்ணாசிரமத் தேசியம்தான்!
இந்த உண்மையை இப்போது இவர்கள் கொண்டு வந்துள்ள பெருங்குழும வேளாண் வேட்டைச் சட்டங்கள் மூன்றும் தெளிவாகத் தெரிவித்துவிட்டன.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆரியர் வகுத்த நான்கு வர்ணங்கள், பஞ்சமர்கள் என்ற பிரிவும் சூத்திரர்களுக்குள் அடக்கம். இந்த நால் வருணத்தைத் தற்காலத்திற்கேற்ப மூன்று வர்ணங்களாகச் சுருக்கிக் கொண்டனர் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பண்டிதர்கள்! பிராமணர் – வைசியர் – சூத்திரர் என்று வரையறுத்துக் கொண்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தற்காலப் பிராமணர்கள் தங்களைச் சத்திரியர்களாகவும் புத்துருவாக்கம் செய்து கொண்டனர். மதம் – வழிபாடு – பழக்கவழக்கப் பண்பாடு முதலிய ஆன்மிகத் தலைமை – ஆட்சித் தலைமை இரண்டையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; தொழில், வணிகம் முதலியவற்றை ஆரிய வைசியர்களின் முற்றுரிமை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
சத்திரியர்கள் – சூத்திரர்கள் – பஞ்சமர்கள் ஆகியோர் தற்காலத்திற்பே மூளை உழைப்பாளிகளாகவும், உடல் உழைப்பாளிகளாகவும் ஆரிய பிராமண – ஆரிய வைசிய வகுப்பாரின் தலைமைக்குக் கீழ் செயல்பட வேண்டும்.
முசுலிம்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையாய் உள்ள மதத்தினர் ஆரிய பிராமண – ஆரிய வைசிய – ஆரிய இந்துராஷ்டிரத் தலைமைக்குக் கீழ்ப்பட்ட ஒட்டுக் குடிகளாக வாழ வேண்டும் என்பவையே இந்துத்துவா எனப்படும் ஆரியத்துவாவின் வேலைத் திட்டம்!
தமிழ்நாட்டில், பிராமணரல்லாத அனைவரும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்பதே ஆரியத்தின் வரையறுப்பு! பேரரசன் இராசராசன், இராசேந்திரசோழன் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரையறுப்பில் சூத்திர அரசர்களே! தமிழ்நாட்டு வணிகர்கள், நிலவுடைமையாளர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்றே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் குறிப்பிட்டார்கள்! இந்த சூத்திரர்களுக்கு எதிராகத் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள்.
மனுதர்மத்தில், மனு வரையறுத்த நால் வருணம் நான்கும் ஆரிய வர்ணங்களே! பிராமண – சத்திரிய – வைசியர்களுக்கிடையே கலப்பு மணம் செய்து கொண்டு, ஆரிய ஆச்சார அனுட்டானங்களைக் கடைபிடிக்காமல் சீரழிந்தவர்கள் சூத்திரர்கள் என்றார் மனு. இந்த நால் வருண ஆரியர்கள் விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரிய வர்த்தம் என்ற தேசத்தில் வாழ்பவர்கள் என்றார் மனு. விந்திய மலைக்குத் தெற்கே உள்ளவை மிலேச்ச தேசங்கள் என்றார். இந்த மனுதர்ம நூல் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு இன்றும் புனித நூல்!
பிராமணர்களைச் சத்திரியர்களாகவும், சத்திரியர்களை சூத்திரர்களாகவும் மறுகட்டமைப்புச் செய்யும் தற்கால வர்ணாசிரம தருமத்தை முழுமைப்படுத்துவதில் தடங்கல்கள் இருக்கின்றன. அனைவர்க்கும் வாக்குரிமை, அனைவர்க்கும் சொத்துரிமை போன்றவை ஆரிய பிராமண – வைசிய மேலாதிக்கத்திற்குத் தடங்கல்களாக இருக்கின்றன.
இவ்விரு தடங்கல்களைக் களைய – இந்துத்துவா – இந்தியத்தேசியம் என்ற இரு புனைவுகளை ஆரியம் உருவாக்கியது. இந்துத்துவா அடிப்படையிலான இந்தியத்தேசியம் செல்வாக்குப் பெற்றால், இயல்பாக ஆரிய பிராமண – ஆரிய வைசிய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் உளவியலை அனைத்திந்திய அளவில் மக்களிடம் வரவழைத்துவிடலாம் என்பது ஆரியத்தின் தந்திரம்!
பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டக் காலத்திலேயே – காங்கிரசுக் கட்சி – என்ற அரசியல் இயக்கம் தொடங்கிய காலத்திலேயே ஆரியம் தனது ஆதிக்கத்திற்கேற்ப விடுதலை இயக்கத்தை வடிவமைத்தது.
பிரித்தானியப் பீரங்கிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு “இந்தியா” என்று ஆங்கிலேயர் பெயர் கொடுத்தனர். அதே கட்டமைப்பிற்கு ஆரியர்கள் “பாரதம்” என்று புதிய பெயரை சூட்டிக் கொண்டனர். பிராமண ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வேத – உபநிடதப் பழம்பெருமைகளைப் பேசிக் கொண்டு, சமற்கிருத மேன்மை – இந்தியாவின் “பொதுமொழி” இந்தி என்ற திட்டங்களை முன்வைத்து இந்திய விடுதலை இயக்கத்தைப் புனைந்து கொண்டனர்.
“பாரதமாதா பசனை” இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முழக்கமானது. இளம்பருவத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரனாகச் செயல்பட்டு, சிறைப்பட்டபின் வெள்ளை ஏகாதிபத்திய தாசனாகி, மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையான சாவர்க்கர் 1923-இல் வீட்டில் இருந்து கொண்டு, “இந்துத்துவா” கோட்பாட்டை உருவாக்கினார். மராட்டிய சித்பவன பிராமணரான சாவர்க்கர் ஆரிய அரசியல் தலைமைக்கு – கருத்து வடிவம் கொடுத்தார்.
மக்கள் தொகையில் மிகமிகச் சிறுபான்மையாய் உள்ள பிராமணர்கள் மிகமிகப் பெரும்பான்மையாய் உள்ள பிராமணர் அல்லாத வெகுமக்களைத் தங்கள் தலைமையின் கீழ், தங்களுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகத் திரட்டிக் கொள்ள, கடவுள் பக்தியையும் – இந்து மதத்தையும் சூழ்ச்சியாகப் பயன்படுத்திக் கொண்டனர்; இன்றும் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் இருபதாம் நூற்றாண்டில், புதிதாகப் பக்தியைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த வந்துள்ளார்கள் என்று கருதக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர்கள் கடவுளைப் பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிட்டார்கள்; அவர்களுக்கு அன்றும் இன்றும் கடவுள் அச்சம் இல்லை. அவர்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருளாகவே கடவுளைக் கருதுகிறார்கள். வர்ணாசிரம தர்மம், சனாதன தர்மம் என்றெல்லாம் – அதற்கு சூதாகப் பெயர் சூட்டினார்கள்.
அனைவர்க்கும் வாக்குரிமை இருந்தாலும் பெரும்பான்மையாக உள்ள இந்துமத மக்களிடம் இசுலாமிய கிறித்துவ மதங்களின் மீது வெறுப்புணர்வையும் – பகையுணர்வையும் விதைத்து, இந்துமத பக்தியில் தீவிரவாதத்தை விதைத்து, தற்கால சனநாயகத்திலும் அரசியல் – அரசு ஆதிக்கத்தைத் தாங்கள் பெற முடியும் என்பது அவர்களது எண்ணம்!
காங்கிரசுக் கட்சி, இந்துத்துவாத் தலைமை கொண்ட கட்சிதான் என்றாலும், அது மிதவாதக் கட்சி; அதைவிடத் தீவிர இந்துத்துவாக் கட்சி தேவை என்று கருதினார்கள். சனசங்கம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள் (1951). அதுவே இப்போதுள்ள பாரதிய சனதாக் கட்சி!
தீவிரவாத இந்துத்துவாக் கட்சியான பாரதிய சனதாக் கட்சி, தேர்தல் வழியில், இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியபோது (2019), பா.ச.க.விற்கு மக்களவையில் தனிப்பெரும்பான்மை கிடைத்தது.
ஆனாலும் தொடர்ந்து இந்துத்துவா தீவிரவாதம் பா.ச.க.வுக்கு வெற்றி தரும் என்பது உறுதி இல்லை. இந்துமதம் பன்முகத்தன்மை கொண்டது; பல்வேறு தெய்வங்கள்; பல்வேறு வழிபாட்டு முறைகள் கொண்டது.
இவற்றை ஒருமைப்படுத்துவதற்காக “ஜெய் ஸ்ரீராம்; ஜெய் ஸ்ரீஹனுமான்” முழக்கத்தை ஆரியம் அணியப்படுத்தியது. அம்முழக்கம் வடநாட்டில் எடுபட்டதுபோல் தென்னாட்டில் எடுபடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் எடுபடவில்லை. இந்து மதத்தின் பன்மைத்தன்மை பா.ச.க.வின் பக்தி வழிப் பாசிசத்திற்கு இடையூறாக இருக்கின்றது.
படையைக் கொண்டு பாசிசத்தை நிறுவிவிடலாம் என்றால், இந்தியாவில் வரலாற்றுப் பெருமையுடன் பல்வேறு இனங்கள் – மொழிகள் இருப்பது அடுத்த பெரும் தடையாக உள்ளது. எவ்வளவுதான் திணித்தாலும், இந்தியையும் சமற்கிருதத்தையும் ஏற்றுக் கொண்டு, தங்கள் தாய்மொழிகளைக் கைவிடும் நிலை இந்தியாவில் இல்லை. தங்கள் தங்கள் இனப்பெருமிதங்களைக் கைவிடும் நிலையும் இல்லை.
ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே மதம், பாரதீயன் என்ற ஒரே இனம், ஒரே தலைமை – என்ற ஆரிய பிராமணர்கள் மற்றும் வைசியர்களின் இலட்சியம் நிறைவேறுவதில் பெருந்தடங்கலாக இருப்பவை பல்வேறு இனங்கள் – பல்வேறு மொழிகள்!
இந்த இனங்களும் மொழிகளும் தங்களின் ஆணிவேரைக் கொண்டுள்ள இடங்கள் கிராமங்கள்! கிராமங்களின் அடித்தளம் உழவர்கள் – உழவுத் தொழிலாளர்கள். இவர்களின் தாய்மடி வேளாண் நிலங்கள்!
இவர்களுக்கு மண்ணோடு பிணைக்கப்பட்ட வாழ்வு! மரபுப் பெருமை, வரலாற்றுக் பெருமை, தாய்மொழிப் பிணைப்பு, சமூகப் பாசம் அனைத்தும் இவர்களுக்கு அதிகம். இவற்றை முன்வைத்தும், இவற்றிற்கு இடையே எழும் சமூகச் சிக்கல்களை முன்வைத்தும் மாநில அளவில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இவை பா.ச.க. பாசிசத்திற்கு அறைகூவலாக (சவாலாக) உள்ளன. இந்த மாநிலக் கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி ஆரியத்துவ பா.ச.க.வுக்கு இருக்கிறது.
தொழில் மற்றும் வணிகத்துறையை எடுத்துக் கொண்டால், மாநிலங்களில் சிறு, நடுத்தர முதலாளிகளும் வணிகர்களும் ஏராளம்! வடநாட்டு ஆரிய வைசியப் பெரு வணிகர்கள் மற்றும் பெரு முதலாளிகளுடன் போட்டி போடும் அளவிற்கு சிலர் வளர்ந்திருக்கிறார்கள்.
மாநிலங்களைச் சேர்ந்த இந்த முதலாளிகளும், வணிகர்களும் அனைத்திந்திய அளவிலும் ஏகபோகம் செலுத்தும் ஆரிய வைசியப் பெருமுதலாளிகளுககு இடையூறாக உள்ளனர். இந்த மாநில முதலாளிகளையும் வணிகர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்!
மாநில அரசியல் கட்சிகள், மாநில முதலாளிகள், மாநில வணிகர்கள் ஆகியோரை அப்புறப்படுத்த வேண்டுமானால் அதற்கான முதல் தேவை கிராமப்புறங்களின் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும்.
கிராமப்புறங்களின் கட்டமைப்பை அடியோடு மாற்ற வேண்டுமானால், உழவர்களையும் உழவுத் தொழிலாளர்களையும் வேளாண் நிலங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதை நேரடியாக, உடனடியாகச் செய்தால் பெரும்புரட்சி வெடிக்கும்!
இந்த வெளியேற்றத்திற்கான முதல்கட்ட ஏற்பாடுதான் பெரும்பெரும் ஏகபோகக் குழுமங்கள் உருவாக்கும் ஒப்பந்தப் பண்ணைகள்; அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவை மனித குலத்திற்கு இன்றியமையாப் பொருட்கள் இல்லை என்ற பட்டியல் நீக்கம்! இவற்றை ஏகபோக நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திரட்டி பெரும் பெரும் கிடங்குகளில் பதுக்கிக் கொள்ளலாம். அது பதுக்கல் அல்ல; சேமிப்பு என்ற சட்ட ஏற்பாடுகள்!
நெல், கோதுமை, கரும்பு போன்ற விளைபொருட்களுக்கு இனிமேல் அரசின் குறைந்த அளவு ஆதரவு விலை இல்லை; இப்போதைக்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆதரவு விலையை அறிவித்துவிட்டுப் பின்னர் நிறுத்திக் கொள்வார்கள்.
அதேபோல் நெல், கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் நேரடிக் கொள்முதலும் நிறுத்தப்படும். அதானி, அம்பானி போன்ற பெரும்பெரும் ஆரிய வைசிய முதலாளிகள் வேளாண் ஒப்பந்தப் பண்ணை நடத்துவார்கள்; வேளாண் விளைபொருள் வணிகமும் நடத்துவார்கள்.
உணவுப் பொருட்களை சேமிப்பதற்கும், இடப்பெயர்வு செய்வதற்கும் கௌதம் அதானி “அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்” (அதானி வேளாண் சரக்குச் சேமிப்பு நிறுவனம்) வைத்துள்ளார்.
இந்த அதானியின் நிறுவனங்கள் இந்தியாவில் இப்போது 22 இடங்களில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பானி பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்ட விற்பனையில் இறங்கியுள்ளார்.
அதானி, அம்பானி, மார்வாரி மற்றும் குசராத்தி சேட்டுகள் ஆரிய வைசியர்கள்! ஏற்கெனவே இவர்கள் இந்தியா முழுவதும் தொழிலிலும் வணிகத்திலும் பேராதிக்கம் செலுத்துகிறார்கள். தலைமை அமைச்சர் மோடியும் அவர்களைச் சேர்ந்தவரே!
ஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் ஆரியத்தின் வர்ணாசிரமக் கொள்கைக்கேற்ற பொருளியல் கொள்கையைக் கடைபிடிக்கின்றன. வேளாண்மை, தொழிற்சாலைகள், வணிகம் முதலியவற்றில் அங்கெல்லாம் ஏகபோகப் பெருங்குழுமங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறு ஆதிக்கம் செலுத்துவோரின் மக்கள் தொகை விகிதம் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைவு! சொந்த நிலமற்றோர், மிகமிக அதிகம்!
அந்நாடுகளில் பண்ணை முதலாளிகள் குடும்பத்தினர், அப்பண்ணைகளில் வேலை செய்வோர் குடும்பத்தினர் ஆகியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டிற்குள்தான் இருக்கும் என்கின்றனர். எல்லாம் எந்திரமயம்!
அவை போன்ற பெருங்குழுமங்கள் இந்தியாவில் 5,000 ஏக்கர் – 10,000 ஏக்கர் பண்ணைகள், 50 – 100 கிராமங்களை ஒரு மண்டலமாக்கி அமைப்பார்கள். அவை ஒப்பந்தப் பண்ணைகளாக முதலில் வரும். தனியார் ஏகபோகப் பண்ணையிடம் ஒப்பந்தம் செய்து, சாகுபடி செய்த உழவர்கள் காலப்போக்கில் நொடித்துப் போவர். பண்ணையிடம் தங்கள் நிலத்தை விற்று விடுவார்கள். நிலத்தைவிட்டும், சொந்த ஊரை விட்டும் வெளியேறுவார்கள். இவ்வாறு வெளியேறுவோர் உளவியலில் தற்சார்பும், தன் இனப் பெருமிதமும், தன் மொழிப் பற்றும் சிதைந்து போகும்.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகள், உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு வழிகாட்டும் நாடுகள் என்ற படிமம் இந்தியாவில் ஏற்கெனவே “நன்கு” கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, வட அமெரிக்கா பாணியில், ஐரோப்பிய பாணியில் வேளாண் பண்ணைகள் வந்தால் நல்லதுதானே என்று வரவேற்க ஆரியப் பிராமண – வைசியரல்லாத படிப்பாளிகள் இங்கு பலர் இருக்கிறார்கள்.
கிராமங்கள் வடநாட்டு வைசிய முதலாளிகளின் பண்ணைகளின் காலனிகளாக மாறும்! பண்ணைகளில் தானியங்கி எந்திரங்கள் மூலம் வேளாண்மை நடைபெறும். தொழிலாளிகள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். தேவைப்படும் தொழிலாளிகளையும் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்வார்கள். பண்ணை அதிகாரிகள் – ஊழியர்கள் தமிழ் தெரியாத வடநாட்டினராக இருப்பர். ஒப்பந்தப் பண்ணையில் சேர்ந்து வேளாண்மை செய்யும் உழவர்கள், தங்கள் நிலங்களில் வேலை செய்வதற்குரிய தொழிலாளிகளை பண்ணை நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. அந்தத் தொழிலாளிகள் “தொழில் திறன்மிக்கவர்கள்” என்று அந்த விதி கூறுகிறது.
வடநாட்டிலோ நிலத்தையும் உழவுத் தொழிலையும் இழந்த மக்கள் பிழைப்புத் தேடி அயல் மாநிலங்களுக்கு அதிகமாகப் புலம் பெயர்வார்கள்.
வடமாநிலங்களிலிருந்து புலம் பெயர்வோர் தங்கள் தாயகத்தை – இனமரபை இழப்பர். அவர்கள் தமிழ்நாட்டில் குவிவதால், தமிழ்நாடு தனது இனக்கட்டுக்கோப்பையும், தமிழ் மொழி ஆளுமையையும் இழக்கும்.
அடுத்த இனத்தை வேட்டையாடுவது, அடிமைகளை வைத்துக் கொள்வது, தன்னல நுகர்வு வெறிக்கு மற்ற இனத்தாரைப் பலியிடுவது, மிகை நுகர்வு போன்ற “பண்புகள்” ஐரோப்பியர்களுக்கும் இந்திய ஆரியர்களுக்கும் பொதுவானவை! எனவே, இருதரப்பாரின் பொருளியல் கொள்கை பொருந்திப் போவதில் வியப்பில்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வினரின் புதிய வர்ணாசிரம – ஆரிய பிராமண – ஆரிய வைசிய வேட்டைக்கு எதிராக பஞ்சாப் தொடங்கி வடநாட்டிலேயே மாபெரும் மக்கள் எழுச்சி கிளம்பியதுதான் மோகன் பகவத் – மோடி குழுவினர்க்குப் பேரிடி விழுந்ததுபோல் இருக்கிறது.
பஞ்சாப் உழவர்களை உசுப்பிவிட்டது – அவர்களது வீரமரபுமிக்க – சீக்கிய இனம் குறித்த பெருமித உளவியலே! தன்மான உணர்வே! உலகம் முழுவதும் சீக்கியர்கள் போராடுகிறார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களும் தமிழினத்தை அழிக்க, தமிழ் மொழியை சிதைக்க – தமிழர்களை அடிமைகள் ஆக்க வந்தவை.
உண்மையை உள்ளது உள்ளபடி உணர்ந்து போராடுவோம்! பேரரசுகள் கொண்டு ஆண்ட இனம் தமிழினம்! வீர வரலாறு படைத்தவர்கள் தமிழர்கள்! மூன்று சட்டங்களையும் முறியடிப்போம்; நம் வேளாண்மை காப்போம்; இனம் காப்போம்; மொழி காப்போம்; தாயகம் காப்போம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Monday, December 14, 2020

"வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என்கிறாரே எடப்பாடியார்?" "சன் செய்திகள் தொலைக்காட்சி"க்கு ஐயா பெ. மணியரசன் அவர்களின் பதிலடி பேட்டி!

"வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என்கிறாரே எடப்பாடியார்?"


"சன் செய்திகள் தொலைக்காட்சி"க்கு

காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன்
அவர்களின் பதிலடி பேட்டி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, December 9, 2020

"தமிழின உணர்வு விவசாயிகளிடம் தான் இருக்கு!" 'ழகரம்' ஊடகத்துக்கு... ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்!

"தமிழின உணர்வு விவசாயிகளிடம் தான் இருக்கு!" 



'ழகரம்' ஊடகத்துக்கு...

வேளாண் சட்டங்கள் குறித்து, 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்!





கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, December 8, 2020

"வேளாண் சட்டங்கள் பற்றி பொய் கூறுகிறார் மோடி!" ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேட்டி!

"வேளாண் சட்டங்கள் பற்றி 

பொய் கூறுகிறார் மோடி!" 



இன்று (08.12.2020) தில்லியில் 12வது நாளாக முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்கள் இந்திய பந்திற்கு அழைப்புவிடுத்தார்கள்.  காவிரி உரிமைமீட்புக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் தஞ்சை புதாற்று பாலத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களையும் , உணர்வாளர்களையும் ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் தில்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது.  அனைவரும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். கைதுக்கு முன் ஐயா பெ.மணியரசன் அவர்களின் பேட்டி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை காவல் சார்பு ஆய்வாளர் பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன்? தோழர் கி. வெங்கட்ராமன் வினா!



தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை
காவல் சார்பு ஆய்வாளர்
பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வினா!

தமிழ்வழியில் பயின்றோருக்கான 20% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசே முறையாக கடைபிடிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு, தமிழ்வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அப்போதைய தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. எனினும், அச்சட்டம் இப்போதுவரை முறையாக பின்பற்றப்படுவதில்லை. தொடக்கத்திலிருந்து தமிழ்வழிக் கல்வி கற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், கல்லூரியில் மட்டும் தமிழ்வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருப்போர் மற்றும், 10 – 12ஆம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருப்போருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வாய்ப்பு அளிக்க வேண்டுமென கடந்த 2020 மார்ச்சு 16 அன்று – தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை திருத்தச் சட்டம் (The Tamil Nadu Appointment on preferential basis in the Services under the State of Persons studied in Tamil Medium Act) –தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.
அண்மையில் (05.12.2020) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வில் நடைபெற்று வரும் இச்சட்டச் செயலாக்கம் குறித்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஏழு மாதங்கள் கடந்த பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடுச் சட்டம் மட்டுமின்றி, ஏழு தமிழர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு என தொடர்ந்து பல சிக்கல்களில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவ்வாறு செயல்படுவது, இந்திய அரசின் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு விரோதப் போக்கின் நீட்சியே ஆகும்.
தமிழ்நாடு ஆளுநர் இப்போக்கைக் கைவிட்டு, தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, கடந்த 2020 சனவரி 13-இல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவல்துறை சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு 969 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் திறன், நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. இத்தேர்வின் இம்மூன்று நிலைகளிலும் சாதிவாரி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு பின்பற்றப் படவில்லை! இந்த மூன்று தகுதித் தேர்வுகளும் முடிந்த பிறகு வெளியிடப்படும் இறுதிப் பட்டியலின் போது மட்டும் தமிழ்வழியில் 20 விழுக்காட்டினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
தமிழ்வழியில் படித்தோருக்கு இத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் திருத்தச் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதே முறையானது. இப்படி பின்பற்றாததற்கும், ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்கபடவில்லை என்பதற்கும் நேரடித் தொடர்பேதுமில்லை! இறுதியில், இட ஒதுக்கீடு திருத்தச் சட்டப்படி வேலை வாய்ப்பு ஆணை வழங்க முடியாத நிலைக்குதான், ஆளுநரின் அடாவடி காலதாமதம் காரணமாக இருக்க முடியும். 2010 சட்டத்தையே கூட தமிழ்நாடு அரசு முறையாக பின்பற்றவில்லை.
இத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், தமிழ்வழியில் படித்தவர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்போது – இந்த இட ஒதுக்கீட்டுப்படியான 180 இடங்களுக்குப் தமிழ்வழித் தேர்வர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, மிகக் குறைவான இடங்களை மட்டும் தமிழ்வழியில் படித்தோருக்கு ஒதுக்கிவிட்டு, இந்த இட ஒதுக்கீட்டினருக்கான இடங்களை ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு (Non PSTM) பகிர்ந்து அளிக்கின்றனர்.
சார்பு ஆய்வாளர் தேர்வு போன்றே மூன்று நிலைகளான எழுத்துத் தேர்வு, உடற் தகுதிறன், நேர்முகத் தேர்வு போன்றவைகளை கொண்ட “வனவர்” பணியிடங்களுக்கானத் தேர்வில் முறையாக ஒவ்வொரு நிலையில் இருந்தே தமிழ்வழி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு பின்பற்றப்படுவ தில்லை! இது அநீதியாகும்!
தமிழ்நாடு அரசு இச்சட்டத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் வாங்குவதுடன், தனது சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ்வழிக் கல்வி கற்றோர் மீதான பாரபட்சமான தேர்வு முறையைக் கைவிட்டு, தமிழ்வழியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு தாங்களே இயற்றிய சட்டத்திருத்தத்தின் படியான வாய்ப்பை வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT