உடனடிச்செய்திகள்

Wednesday, November 26, 2008

வீரவணக்கம்! வீரவணக்கம்!

மாவீரர் நாள் - நவம்பர் - 27 - 2008


Wednesday, November 12, 2008

ராஜபட்சே திரும்பிப் போ :: தமிழகமெங்கும் த.தே.பொ.க. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

ராஜபட்சே திரும்பிப் போ
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
 
சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது.

 

மதுரை
 

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12-11-2008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந்திய அரசே கைகுலுக்காதே" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அ.ஆனந்தன்(த.தே.பொ.க.), கதிர்நிலவன்(த.தே.வி.இ.), வையவன்(தமிழக மாணவர் முன்னணி) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

 

தஞ்சை

 
தஞ்சையில் 12-11-2008 மாலை 5.00 மணிக்கு பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான இளைஞர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

செங்கிப்பட்டி

 
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆண்களும் பெண்களுமாக பலநூறு பேர் திரண்டுவிட்டதால் தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
 

திருவாரூர்

 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12-11-2008 அன்று மாலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் க.அரசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மூத்த உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, வழக்குரைஞர் தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சட்டமன்றம் நோக்கி பேரணி:: பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது

சட்டமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற
தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது
சென்னை, 12-11-௨00௮
ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முன்பு இந்திய அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி இவ்வார்ப்பட்டம் நடைபெறும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

இன்று(12-11-2008) காலை சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே காவல்துறையின் தடையை மீறி சட்டமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினர் 130 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இப்பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகத்தின் தலைவர் துரையரசன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் இவ்வார்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில், "இந்திய அரசே! போரை நிறுத்து", "ராசபட்சே திரும்பிப் போ", "இந்திய அரசு சிங்களவனுக்கு அள்ளிக் கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெறு" போன்ற முழக்கங்கள் எழுப்பட்டன. கைதானவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tuesday, November 11, 2008

ராசபக்சே வருகை :: த.தே.பொ.க. கருப்புப் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் இரத்தத்தைக் குடிக்கும்
இனக்கொலை வெறியன் ராசபக்சேயே திரும்பிப் பொ
த.தே.பொ.க. கருப்புப் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
 
ஈழத்தில் தமிழர்கள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இனக்கொலை வெறியன் ராசபக்சே இந்தியா வருகிறார்.
 
அதனைக் கண்டித்து இனக்கொலை வெறியன் இராசபக்சேயே திரும்பிப்ப போ என்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 12-11-2008 அன்று மாலை நடக்கவுள்ளது.
 
தஞ்சை, மதுரை, செங்கிப்பட்டி, திருத்துறைப்புண்டி, ஈரோடு ஆகிய இடங்களில் இவ்வார்ப்பட்டம் நடத்தப்படவுள்ளது. திராளான தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு பெற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
நாள்  :11-11-2008
இடம் : சென்னை
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT