உடனடிச்செய்திகள்
Showing posts with label சமற்கிருதம் எதிர்ப்பு. Show all posts
Showing posts with label சமற்கிருதம் எதிர்ப்பு. Show all posts

Wednesday, August 13, 2014

செங்கிப்பட்டியில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், 12.08.2014 அன்று மாலை நடைபெற்ற ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்றார்.

த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் ச.காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி, தோழர் க.அருள்தாசு, தோழர் ஆ.இராசசேகர், தோழர் பொன்.இரவிச்சந்திரன், தோழர் த.செபஸ்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ப.மலைத்தேவன் நன்றியுரையாற்றினார்.

Tuesday, August 12, 2014

பெண்ணாடத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக பெண்ணாடத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில், நேற்று(11.08.2014) மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ‘சமற்கிருத எதிர்ப்பு’த் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முருகன்குடி த.தே.பொ.க. செயலாளர் தோழர் அர.கனகசபை தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், பெண்ணாடம் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவில், தோழர் இரா.அறிவுச்செல்வன் நன்றி கூறினார். 

Monday, August 11, 2014

ஓசூரில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஓசூர் இராம் நகரில், இன்று(10.08.2014) மாலை நடைபெற்ற கண்டனத் தெமுனைக் கூட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.செம்பரிதி தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி தோழர் கு.சக்திவேல், பாதிரியார் திரு. செநாதன், சிவனடியார் திரு. இரவிச்சந்திரன், தோழர் தமிழ்மாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.

Sunday, August 10, 2014

சென்னையில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் முதன்மைச் சாலையில், இன்று (10.08.2014) மாலை, ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலைமையேற்றார். த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். 

தமிழ் வழிபாட்டுரிமைக் குழு அமைப்பாளரும், தெய்வத்தமிழ் இதழ் ஆசிரியருமான ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பே.சத்தியவேல் முருகனார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை நல்கினர். புலவர் இரத்தினவேலவர் திரு. சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். 

நிறைவில், சென்னை த.இ.மு. தலைவர் தோழர் செந்தில் நன்றி நவின்றார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், திரளான தோழர்கள் பங்கேற்றனர். 

Saturday, August 9, 2014

சாமிமலையில்‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் – குடந்தை வட்டம் – சாமிமலை, தேரடி அருகில், 08.08.2014 அன்று மாலை நடைபெற்ற ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் ம.திருவரசன் தலைமையேற்றார். 

தோழர் த.சிவக்குமார் (த.தே.பொ.க) வரவேற்புரையாற்றினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

தமிழக மாணவர் முன்னணித் தோழர் கு.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.

Friday, August 8, 2014

பட்டீசுவரத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று(07.08.2014) மாலை 6 மணியளவில், தஞ்சை மாவட்டம் - குடந்தை வட்டம் - பட்டீசுவரம் கடைவீதியில், ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் ம.தமிழ்த் தேசியன் தலைமையேற்றார். தோழர் இரா.சுரேசு (த.தே.பொ.க.) வரவேற்புரையாற்றினார். 

திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. பெ.பூங்குன்றன், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

தமிழக மாணவர் முன்னணித் தோழர் ம.புரட்சி நன்றியுரையாற்றினார்.

போராட்டங்கள்

செய்திகள்

Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT