தமிழ்வழிக் கல்விக்காக
ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28.05.2013) சென்னையில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தைச் சேர்ந்தபல்வேறு கட்சி, அமைப்புகளின் தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை எதிரொலித்தனர்.
இந்நிகழ்வில், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தலைநகர்த் தமிழ்ச் சங்கக் காப்பாளர் புலவர் த.சுந்தரராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் திரு சைதை சிவா, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிகைணப்பாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், சேவ் தமிழ்ஸ் இயக்கத் தோழர் செந்தில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி, தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், தமிழ் மீட்புக் கூட்டமைப்புத் தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றத் தலைவர் கவிஞர் செவ்வியன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், அ.ஆனந்தன், க.முருகன், உதயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் கு.சிவப்பிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், மு.தமிழ்மணி, கவித்துவன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ம.இலட்சுமி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.
கைதான தோழர்கள் தற்போது, ஆயிரம்விளக்கு பள்ளிக்கூடத்தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றித் தமிழன்)