உடனடிச்செய்திகள்
Showing posts with label முற்றுகைப் போராட்டம். Show all posts
Showing posts with label முற்றுகைப் போராட்டம். Show all posts

Tuesday, September 29, 2015

நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகையில் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசே!காவிரிப்படுகைப் பெட்ரோலியத்தை எடுக்காதே!

நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை
முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!


காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே காவிரிப் படுகையிலிருந்து பெட்ரோலியத்தை எடுக்காதே“  என்ற முழுக்கத்தை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் நேற்று (28.09.2015)காலைநாகை மாவட்டம் – நாகூர் பனங்குடி இந்திய அரசு பெட்ரொலிய ஆலை முற்றுகையிடப்பட்டதில் ஆயிரக்கணக்கான உழவர்களும் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

காவிரி உரிமையைக் காக்காத இந்திய அரசே – காவிரி பெட்ரொலை எடுக்காதே – காவிரி எங்கள் செவிலித்தாய்! காவிரி எங்கள் குருதி ஒட்டம்“ என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு காலை 10மணியளவில்நாகூர் – வாஞ்சூர் ரவுண்டானாவில பல்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும்,தோழர்களும் திரளத் தொடங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்த தோழர்களால் அச்சாலை முழுவதுமாக மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. திட்டச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அங்கிருந்து தொடங்கிய முற்றுகைப் பேரணிக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.

பேரணியின் போதுகர்நாடக முதல்வர் சித்தராமையாநடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு வந்த தோழர்களை ஆலையின் வாயிலில் காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறை தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறிய தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர்தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்துசாலை மறியல் செய்தனர். காவல்துறை அனைவரையும் கைது செய்வதாக அறிவித்துஅனைவரையும் தங்கள் வாகனங்களில் ஏற்றினர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன்தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன்திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரைதமிழ்த் தேசியப் பேரிக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன்இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் – முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன்விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணிஇந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ்மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன்,மீத்தேன் கூட்டமைப்பு மன்னார்குடி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன்கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன்தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. தூருவாசன்துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க. கென்னடிதுணைத் தலைவர் திரு. மு. கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சிவப்பிரகாசம் பிள்ளைகா.வி.பா.ச. நாகை மாவட்டச் செயலாளர் திரு. ஆர். இராசேந்திரன்கீழையூர் ஒன்றியச் செயலாளர் திரு. வீ. இராமசாமி,வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஒளிச்சந்திரன்ஒசூர் – தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயல் தலைவர் திரு. முரளிமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும்தோழர்களும் இதில் கலந்து கொண்டு கைதாகினர்.













கைதான தோழர்கள் நாகூரிலுள்ள பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் இப்போராட்டம்காவிரி உரிமை மீட்பில் உழவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.




Wednesday, February 11, 2015

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு, தஞ்சையில் தொடங்கிய பரப்புரை இயக்கம்!








காவிரியின் குறுக்கே கர்நாடகம் சட்டவிரோத அணைகள் கட்டுவதைத் தடுக்க, மார்ச் 7 அன்று, தேன்கனிக்கோட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான உழவர்களுடன் மேக்கேத்தாட்டுவுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பரப்புரை இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா, நேற்று (10.02.2015) மாலை தஞ்சையில் நடைபெற்றது. 

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இத்தொடக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், பரப்புரை இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, எழுச்சி முழக்கங்களை எழுப்பினார். 

கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் திரு. சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், திரு. இறைநெறி இமையவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் திரு. ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர். 

காவிரிச் சிக்கல் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களின் சிக்கல் மட்டுமல்ல, அது தமிழகம் தழுவிய சிக்கல். ஏனெனில், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு, காவிரி நீர் தான் குடிநீராகப் பயன்படுகிறது. எனவே,காவிரியைக் காக்கும் மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

Wednesday, May 28, 2014

ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை – 200க்கும் மேற்பட்டோர் கைது!


ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை – 200க்கும் மேற்பட்டோர் கைது!

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும்ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதனைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், தமிழக அரசின் தொடர்ச்சியான ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரின் வீடு முற்றுகையிடப்படும் என கடந்த 02.05.2014 அன்று நடைபெற்ற தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவெடுத்தது.

அதன்படி, இன்று(28.05.2014) காலை சென்னை ராசா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையிலிருந்து அமைச்சர் வீட்டை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

”அழிக்காதே அழிக்காதே தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே!”, ”திணிக்காதே திணிக்காதே ஆங்கிலவழியைத் திணிக்காதே!”, ”தமிழக முதல்வர் செயலலிதாவே அரசியலுக்கு மட்டும் அம்மாவா? ஆட்சிக்கு மம்மியா?” என்பன உள்ளிட்ட பல ஆவேச முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத் தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தை, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான திருபெ.மணியரசன் ஒருங்கிணைத்தார். உலகத் தமிழர்பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன்.தி.மு. துணைப் பொதுச் செயலாளர் திருமல்லை சத்தியா,தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் பொழிலன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், திரு. தேனி லிங்கா லிங்கம், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், எழுகதிர் இதழாசிரியர் திரு. அருகோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், க.முருகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்சி த.கவித்துவன், மதுரை ரெ.இராசு, திருச்செந்தூர் மு.தமிழ்மணி, சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், புளியங்குடி க.பாண்டியன், ஈரோடு வெ.இளங்கோவன், ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, செரபினா, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் பாபநாசம் பிரபாகரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள், தற்போது மயிலை நாகேசுவரராவ் பூங்கா பின்புறமுள்ள சமூகநலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





Monday, March 4, 2013

சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகை - ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கைது!







சென்னையில் இன்று(04.03.2013) காலை நுங்கம்பாக்கத்திலுள்ள சிங்களத் துணைத் தூதரகம் தமிழ் உணர்வாளர்களால் முற்றுகையிடப்பட்டது. 


இராபசபக்சே கும்பல் மீது அனைத்துலக விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தை மக்கள் நல்வாழ்வு இயக்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி, நுங்கம்பாக்கம் இலயோலா கல்லுரி வாயிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு, பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. சிங்களக் கொடியும், இனவெறியன் இராசபக்சே உருவபொம்மைகளும் தீயிட்டு கொளுத்தபட, பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினருக்கும், போராட்டத் தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்கு கைதாயினர். மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி நிகழ்வை ஒருங்கிணைத்தார். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தி.நகர் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை மாநகரத் தலைவர் தோழர் வினோத், செயலாளர் தோழர் கோபிநாத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர். 



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT