உடனடிச்செய்திகள்
Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Monday, June 17, 2019

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் 'தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் "தமிழக அரசே தமிழக அரசே, இரத்து செய் இரத்து செய் வேதகால பிராமண முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பது இரத்து செய்!", "தமிழன்னை சிலையா சமற்கிருத மாதா சிலையா?" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மருது மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு இராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் திரு. சி. பேரறிவாளன், தமிழ் உரிமை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழில் வழக்காட உரிமை கோரும் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், ஏழு தமிழர் விடுதலை கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி, வீரகுல அமரன் இயக்கம் நிறுவனர் திரு. இரா. முருகன், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் திரு. அண்ணாதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசிர்வாதம், மதுரை ஸ்டார் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பழ. இராஜேந்திரன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி தோழர்கள் பாண்டியம்மாள், ரேவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் என 200 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் ஆண்களும் தங்கள் கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மதுரை காவல் படை மைதானத்தில் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சிலை அமைக்கக் கோரும் ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்றும், இது போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்றும் ஐயா பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு நிற்காமல் தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டு வல்லுனர்களையும் கொண்ட புதிய குழு அமைத்து கல்லிலோ அல்லது வெங்கலத்திலோ, தமிழர் மரபுப்படி தமிழன்னை சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வலியுறுத்தினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, February 11, 2019

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”
தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - “வள்ளலார் பெருவிழா” தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (10.02.2019) மாலை மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முன்னிலை வகித்தார். தோழர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார்.

அலங்காநல்லூர் அபிநயா கலைக்குழுவினரின் பறையாட்டத்தோடு தொடங்கிய “வள்ளலார் பெருவிழா”வில், பள்ளிச்சிறுவன் இலக்கியன் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்பாகப் பேசியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இதனையடுத்து நடைபெற்ற உரையரங்கில், "தமிழர் உரிமை ஆன்மீகப் போராளி" - தவத்திரு. இரா. கருடசித்தர் (அழகர் கோயில்), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வள்ளலாரின் ஆன்மிக நெறி குறித்து உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா பேருரை நிகழ்த்தினார். தோழர் மேரி (மகளிர் ஆயம்) நன்றி கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு தோழர்கள் கதிர்நிலவன், “விடியல்” சிவா ஆகியோர் பெருவிழா நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வில் இறைநெறி அன்பர்களும், தோழமை அமைப்பினரும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 


காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, April 17, 2018

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

அனைவரும் வருக.!

மகளிர் ஆயம்
தொடர்புக்கு 9486686845, 9486958282, 9486107087

Saturday, December 2, 2017

மதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!

மதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!
 
தமிழ்த்தேசியத்தின் போர் வாளாக வெளி வந்து கொண்டுள்ள மாதமிருமுறை இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - இதழின் படிப்பு வட்டம் சார்பில், மதுரையில் நாளை (03.12.2017) திறனாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது. 
 


மதுரை - மகபூப்பாளையம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரிலுள்ள விவசாய - தொழிலாளர் மையத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழர் கண்ணோட்டத்தின் நீண்டநாள் வாசகரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞருமான சு. அருணாசலம் தலைமை தாங்குகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் தோழர் பெ. மேரி வரவேற்கிறார். 


இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. பாமயன், ஊடகவியலாளர் சிவக்குமார், பொருளியல் உரிமை இதழாசிரியர் திரு. பொன்மாறன் ஆகியோர் திறனாய்வுரை நிகழ்த்துகின்றனர். 


தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் பெ. மணியரசன், ஆசிரியர் குழு உறுப்பினர்கள் தோழர் க. அருணபாரதி, தோழர் கதிர்நிலவன் ஆகியோர் வாசகர்களுடன் கலந்துரையாடுகின்றன. நிறைவில், தோழர் சிவா நன்றி கூறுகிறார். 


நிகழ்வல், தமிழர் கண்ணோட்டம் வாசகர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்! 


=====================================
முகநூல் : fb.com/tkannottam
=====================================
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்
=====================================
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இணையத்தில் படிக்க - www.kannotam.com
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப் படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !
 
 


கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-

ஆண்டு கட்டணம் - ரூ. 350 /-
மாதம் இருமுறை என 24 இதழ்கள் 
ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும்.

மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /-
மாதம் இருமுறை என 72இதழ்கள்
மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.

ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-
மாதம் இருமுறை என 120 இதழ்கள்
ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.

பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-
மாதம் இருமுறை என 240 இதழ்கள்
பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கண்ணோட்டம் இணைய இதழானwww.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!


தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!


நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்! பார்க்க:www.KANNOTAM.com

=====================================
கண்ணோட்டம் இணைய இதழ்
=====================================
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam

பேச: 7667077075, 98408 48594
 
 

Sunday, November 26, 2017

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!
 
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் செலுத்தும் - மாவீரர் நாளான நாளை ( 27.11.2017 ) மாலை, மதுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஒன்றுகூடல் நடைபெறுகிறது.

மதுரை சிம்மக்கல் அருகிலுள்ள ஆறுமுச்சந்தியில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்குகிறார்.

தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்று தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்!


Tuesday, November 4, 2014

தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!




அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!


தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - காரி (சனி) அன்று மாலை, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் வெ.ந.கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தோழர் பிலால்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் ரபிக் (இளந்தமிழகம்), தோழர் பேரறிவாளன் (தமிழ்ப்புலிகள்), தோழர் மணிபாவா (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, திரு. ஐ.ஜெயராமன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அகவன், புனித தேவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT