உடனடிச்செய்திகள்
Showing posts with label வெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு. Show all posts
Showing posts with label வெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு. Show all posts

Thursday, November 5, 2015

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் தமிழர்களுக்கு வேலை மறுப்பைக் கண்டித்து பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!






சேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644 பேரில், 401 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 60 பேர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் – 38, பீகார் – 16 மற்றும் சில வடமாநிலங்கள் என்று வேலை வழங்கிட அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், விருத்தாச்சலம், தருமபுரி இடையே உள்ள இருப்புப் பாதைப் பகுதிகள் வருகின்றன. ஆனால், கேரளாவுக்கு மட்டும் 63 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உருவாகும் பணியிடங்களுக்கு, மிக அதிக எண்ணிக்கையில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தொடர்வண்டித் துறையில் இன ஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையிலும், மற்றும் தென்னகத் தொடர்வண்டி மண்டலத்திலும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத்தவருக்கும், மலையாளிகளுக்கு மட்டுமே கூடுதலாக வேலை வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள் மற்றம் அலுவலகங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதுதான், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நீதியாகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களைப் புறக்கணிக்கும் இந்திய அரசு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தமிழர்களைப் புறக்கணிப்பர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தொடர்வண்டித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் பயன் அடையாமல் வெளி மாநிலத்தவருக்குக் கொடுப்பது, சமூக அநீதியாகும்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் வேலை வழங்கும் நேர்காணல்களுக்கு இப்பொழுது அழைத்துள்ள பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் வகையில, புதிய பட்டியல் தயாரித்து நேர்காணல் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், தொடர்வண்டித்துறை கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்தும், இன்று (05.11.2015) காலை, சேலம் சந்திப்பு முன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

“வழங்காதே வழங்காதே! தமிழ் மண்ணில் அயலாருக்கு வேலை வழங்காதே!”, “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கு” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களுடன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், நாம் தமிழர் கட்சி சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் திரு. பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் சிவப்பிரியன், உழைக்கும் மக்கள் முன்னணி தலைவர் திரு. முரளி, கலப்புத் திருமண சங்கத் தலைவர் திரு. அழகேசன், தந்தை பெரியார் தி.க. சேலம் மாவட்ட செயலாளர் தோழர் தங்கராசு, தமிழ்நாடு எல்லைப் போராட்ட சங்கத் தலைவர் திரு. மா. சுப்பிரமணியம், ம.தி.மு.க. பொறுப்பாளர் திரு. தைரிய சீலன், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு திரு. அப்துல், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெண்ணாடம் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச. பிந்துசாரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றினார். கண்டன உரையாற்றினர். தோழர் க. சேகர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஈரோடு இளங்கோவன், பெண்ணாடம் கனகசபை, தர்மபுரி செயலாளர் தோழர் விஜயன், கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, த.இ.மு. நடுவண் குழு தோழர் மாவீரன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசே - தென்னக தொடர்வண்டித்துறையே!!! அயலாருக்கு வேலை வழங்கும் பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்! தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் புதிய பட்டியலை வெளியிடு!

Monday, November 24, 2014

சென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்!


சென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்!

சென்னையில் விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டுள்ளக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ.வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி முதல் 14,600 கட்டடங்களில் சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 98 சதவீத கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன எனக் கண்டறிந்தனர். இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. 

சென்னையின் இதரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அளவுகளிலிருந்து சிறிது விலகி கட்டிடம் கட்டப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கின்ற அரசு நிர்வாகம், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள 98% கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கு விடையில்லை. இது போதாதென்று, தற்போது அப்பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை வடநாட்டு மார்வாடிகளுக்கு சொந்தமானதாகும். 

ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ள லிங்கச் செட்டி தெரு, தம்பு செடி தெரு போன்ற தெருக்கள் ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதை முறை கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும் சென்னையின் இதரபகுதிகளில் பகல் நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ள கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மட்டும் தாராளமாக வந்து செல்கின்றன. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த இந்தப் பகுதியில் இவர்கள் சரக்குகளை கையாள்வது சாலைகளில் நடந்துச் செல்வோரின் உயிருக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சவால் விடும் வகையில் பல வட இந்தியர்களும், வணிக நிறுவனங்களும் அவர்களின் கட்டிடத்திற்கு முன்பு உள்ள சாலையின் பெரும்பகுதியை தங்களின் வாகனம் நிறுத்துமிடமாக அறிவித்து (Parking Area) பொது மக்களின் நடமாட்டத்தையே பெருமளவில் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சட்ட விரோதமான செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் குறிப்பாக போக்குவரத்து காவல்துறையினர் மெளனமாக இருப்பதற்கு அவர்களுக்கு கிடைத்து வருகின்ற மாதாந்திர கையூட்டு தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும்.

இவ்வாறு அதிகாரிகள் கையூட்டு பெறுவதினாலும், அவர்களுடைய கையாளாகாத்தனத்தினாலும் பாதிக்கப்படுவது பொது மக்களும், வழக்கறிஞர்களும் தான். இனிமேலும் இத்தகைய இழிவான காரியங்களை அனுமதிப்போமேயானால் நாமும் குற்றவாளிகளாக கருதப்படுவோம் என்ற வகையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த அநீதிகளுக்கு எதிராக, இன்று வீதியில் களமிறங்கினர். 

ஜார்ஜ் டவுன் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க, அரசு அதிகாரிகளை, போக்குவரத்து காவல்துறையை வலியுறுத்தும் வகையில் இன்று (24.11.2014) திங்கள் கிழமை காலை 11 மணி அளவில், வீதி வீதியாகச் சென்று அத்துமீறல்களை நேரடியாகத் தட்டிக் கேட்டனர். இதன் இறுதியில், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

இதன் போது, உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர் சேசுபாலன் தலைமையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பேரணியாக, ஆர்மேனியன் தெரு, லிங்குச் செட்டி தெரு, தம்புச்செட்டி தெரு ஆகிய தெருக்களின் வழியாக சென்று அங்கு போக்குவரத்துக்கு இடையூராக இருந்த மார்வாடிகளின் வாகனங்களை முழக்கங்கள் எழுப்பி அப்புறப்படுத்தினர். 

இதன் இறுதியில், உயர்நீதிமன்ற முதன்மைச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. உடனடியாக அங்கு வந்த, காவல்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குலள் இச்சிக்கல்களில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. 

இப்போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பாவேந்தன், ரசினி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தோழர் நல்லன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.






Sunday, November 2, 2014

தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா? பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி!


தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய 
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு
மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா?


பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி

தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி!














தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தை சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அறநிலைய சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் பாதகமானது.

பாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மாராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாக கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துக்களை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டு செலவுகளுக்கு பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனையாகும்.

எனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்தாத மாராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோதமாகும். தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும்.

இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, பல்வேறு அமைப்புகளையும் உள்ளடக்கி கடந்த 2005ஆம் ஆண்டு 'தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு' என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்ப் பேரரசன் இராசராசன் சதய விழா நடைபெறும் இன்று (02.11.2014), “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” சார்பில், எழுச்சிமிகுப் பேரணி நடைபெற்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” தலைவர் திரு. அயனாவரம் சி. முருகேசன் தலைமையேற்றார். செயலாளர் திரு. வெண். வீரமுருகு. வீரசிங்கம் முன்னிலை வகித்தார். பேரணியின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் இராசராசன் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவுரையாற்றினார்.

பேரணியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்கழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் விடுதலைச்சுடர், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழின், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, மாவட்டச் செயற்குழு தோழா ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் தோழர் ம.இலட்சுமி, தோழர் அமுதா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


Saturday, October 18, 2014

வெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்டது போல் தொடராமல் தடுக்க மாற்றுத் திட்டங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது!


“வெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்டது போல் தொடராமல் தடுக்க மாற்றுத் திட்டங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

அரியானா மாநிலம் சிக்கந்தப்பூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை, அரியானாவைச் சேர்ந்த 10 – 15 பேர், நேற்றைக்கு முதல் நாள் நள்ளிரவு 1 மணி அளவில், கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். இனிமேல் அரியானாவுக்கு வேலைக்கு வரக்கூடாது, உடனடியாக அரியானாவைவிட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று சொல்லி, அந்த இருவரையும் ஒரு வீட்டுக்குள் அடைத்து கடுமையாக அடித்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த, மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை சிலர் சூழ்ந்து கொண்டு, கன்னடம் பேசத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். பேசத் தெரியாது என்று அவர்கள் சொன்னவுடன் அவர்களைத் தாக்கி, கன்னட மொழித் தெரியாதவர்களுக்கு கர்நாடகத்தில் வேலையில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த நிகழ்வுகளும் வழக்குகளாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த இரு வன்முறை நிகழ்வுகளும் கண்டிக்கத்தக்கவை. ஆனால், இவ்வாறான நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்பதை சமூக அறிவியல் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பல தேசங்களாக விளங்க வேண்டிய தேசிய இனங்கள், “இந்தியா“ என்ற ஒரே நாடாக வெள்ளை ஏகாதிபத்தியத்தால் பிணைக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பிறகும் அது அப்படியே நீடிக்கிறது. இந்தியாவின் இந்தத் தனித்தன்மையை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் கிட்டத்தட்ட அவை தனியாக இருந்தால் என்ன உரிமைகளை அனுபவிக்குமோ, அதற்குச் சமமாக இந்தியாவுக்குள் அவற்றுக்கு உரிமை வழங்க வேண்டியது அவசியம்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், மொழிவழித் தாயகங்களாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மிகையாக பிற மொழி பேசுவோர், இன்னொரு மொழி பேசும் மக்களின் தாயகத்தில் குடியேறுவதும் தொழில் வணிகம் செய்வதும் அந்த மண்ணுக்குரிய தேசிய இன மக்களின் உரிமைகளை பறிப்பதாக அமைகிறது. அந்த மண்ணுக்குரிய மக்களின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அயல் இனத்து மக்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக இது அமைகிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளன. மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவை பிற மாநிலத்தவருக்கு உள் எல்லை அனுமதிச் சீட்டு (Inner line permit) என்ற முறையை வைத்து, வெளி மாநிலத்தவரின் மிகை நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாத வகையில் தடைச் சட்டம் உள்ளது. கர்நாடகத்தில், சரோஜினி மகிசி குழு பரிந்துரையை ஏற்று, ஊழியர் நிலையில் 100க்கு 90 விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை வழங்க வேண்டுமென்றும், அதிகாரிகள் மட்டத்தில் 100க்கு 60 விழுக்காடு கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றும் ஆணைகள் போட்டுள்ளார்கள். அதைச் செயல்படுத்த உறுதியளிப்பதாக அண்மையில்தான் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
நடந்து முடிந்த அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா வெளியிட்டத் தேர்தல் அறிக்கையில், எமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரியானாவின் தனியார் துறையில் அரியானாவின் மண்ணின் மக்களுக்கு 50 விழுக்காடு வேலை ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி கூறியிருந்தார்.
ஏற்கெனவே, வெளியாரை வெளியேற்றும் போராட்டம் அசாமில் நடந்த போது அப்போதைய பிரதமர் இராசீவ் காந்தி, வெளிநாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர் உள்ளிட்ட வெளியாரை ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கு வைத்து, அதன்பிறகு வந்தவர்களை வெளியேற்றுவது என்று போராட்டக்காரர்களுடன் உடன்படிக்கை செய்தார்.
இப்பொழுதும் கர்நாடகத்தில் வெளி மாநிலத்தவர் விளைநிலங்களை வாங்குவதற்கு தடைச் சட்டம் உள்ளது. மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே காங்கிரசு முதலமைச்சரும், பா.ச.க. முதலமைச்சரும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, தங்கள் மாநிலத்திற்கு உ.பி. மற்றும் பீகாரிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறெல்லாம், பல்வேறு வடிவங்களில் பல்வேறு மாநிலங்களில் வெளியார் நுழைவுக்கு எதிராக சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கின்றன.
எனவே தான், தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர் வரைமுறையின்றி குடியேறுவதையும், வேலையில் சேருவதையும் சொத்து வாங்குவதையும் கட்டுப்படுத்த 6 வகையானத் தீர்வுகளை முன்வைத்துப் போராடி வருகிறது.
• அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 20 விழுக்காட்டிற்கு மேல் வேலை பார்க்கும் நிறுவனங்களில் மிகையாக உள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்.
• தமிழ்நாட்டின் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை, தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
• வரைமுறையின்றி வந்து அன்றாடம் வெள்ளம் போல் வந்து குவிகின்ற வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது.
• வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
• வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல், உள் அனுமதிச் சீட்டு (Inner line permit) வழங்கும் உரிமை தமிழக அரசுக்கு வேண்டும்.
• மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குவதைப் போல, ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் தமிழக சிறு - நடுத்தரத் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு, ‘உழைப்பாளர் மானியம்’ வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்ற வேண்டும். இவ்வாறான சட்ட வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டால், ஒரு மாநில மக்களின் தாயக வாழ்வுரிமையை தகர்க்கும் வகையில், பிற மாநிலத்தவர் மிகையாக நுழைவது தடுக்கப்பட்டு, ஒரு மாநில மக்களுக்கு எதிராக இன்னொரு மாநில மக்கள் வன்முறையைக் கையாள்வது தவிர்க்கப்படும். இதைப் பற்றிதான் அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சரியான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தை தமிழ்நாட்டின் சிவசேனா என்றும், அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களை தமிழ்நாட்டின் பால் தாக்கரேக்கள் என்றும் கொச்சைப்படுத்தவதன் மூலம் இந்த சிக்கலுகளுக்குத் தீர்வு காண முடியாது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் ஆக்கவழிப்பட்ட மேற்கண்டத் தீர்வுகளை, சட்ட விதிகளாக உருவாக்கிட தமிழக அரசு, இந்திய அரசு ஆகியவை முன் வர வேண்டும். தமிழ் மக்கள், இக்கோரிக்கைகளை அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Saturday, October 11, 2014

இந்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று! திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில், தொடர்வண்டி மறியல் போராட்டம் - தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!


தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று!
தமிழர்களுக்கு 80 விழுக்காடு வேலை வழங்கு!

2014 திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில்,
தொடர்வண்டி மறியல் போராட்டம்!


தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் முதல் கூட்டம், சென்னை க.க. நகரிலுள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில், இன்று (11.10.2014) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, இயக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த அமைப்பின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்த அரசியல் அறிக்கையை, பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்வைத்தார். அமைப்புப் பணிகள் குறித்த வேலை அறிக்கையை தலைவர் தோழர் பெ.மணியரசன் முன்வைத்துப் பேசினார். விவாதங்களுக்குப் பின், அவை நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், “தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் திசம்பர் 12ஆம் நாள், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல்) தொடர்வண்டிகள் மறியல் போராட்டம் நடத்துவதென ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், பெருந்திரளான தமிழின உணர்வாளர்களையும், பொது மக்களையும் பங்கேற்கச் செய்வதற்கானப் பணிகளில் உடனடியாக ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Wednesday, March 6, 2013

“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்
புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடிவளம்பக்குடிதிருமலைசத்திரம் உள்ளிட்டகிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தராத ஆந்திர மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்தும்அதற்கு துணை போகும் இந்திய அரசுதேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று (05.03.2013) புதுக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .காமராசுபுதுக்குடி பேருந்துநிறுத்தத்தில் மதுக்கான் நிறுவனத்தால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் கூட அவை கடந்த ஓராண்டிற்கும் மேலாக எரியாத நிலையில்,இருட்டில் சாலையை கடந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதையும்பலர் உடல் அங்கங்களை இழந்தது குறித்தும்ஆதாரங்களுடன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் .தேவதாசு பேசும் போதுஇங்கே போடப்பட்டுள்ள விளக்குகள் ஓராண்டாகஎரியவில்லையென்றால் எதற்காக மின்கம்பங்களை நட்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேசும் போதுமதுக்கான் நிறுவனத்திடம் கையூட்டுப் பெறுகின்ற காவல்துறை அதிகாரிகளுக்குகடுமையான எச்சரிக்கை விடுத்தார்

தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் பேசும் போதுஇவ்வார்ப்பாட்டம் ஓர் எச்சரிக்கை தான் என்றும்,அடுத்துமதுக்கான் நிறுவன அலுவலகத்தை மக்களைத் திரட்டிச் சென்று முற்றுகையிடுவோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையேஅறிவித்தார்.

.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை பேசும் போதுஇந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களையும்,மதுக்கடைகளை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழிக்கும் தமிழக அரசையும்இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றவிபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதிமகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மீனா,மேலத்திருவிழாப்பட்டி ..முசெயலாளர் தோழர்  .கணேசன் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துபேசிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதிஇந்திய அரசு நெடுஞ்சாலைகளை தனியாரிடம்விற்றுவிட்டதையும்அத்தனியார் நிறுவனங்கள் கிராம மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தரமறுப்பதையும் எடுத்துரைத்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில்புதுக்குடிவளம்பக்குடிநரிகுறவன்பட்டிசெங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.









(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT