உடனடிச்செய்திகள்

Tuesday, December 18, 2007

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்

இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும்
ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15-12-2007 அன்று தஞ்சையில் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலதை திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்

இந்திய அரசு அன்றாடம் புதிது புதிதாக இந்தித் திணிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்திட திட்டமிட்டு செயல்படுகிறது. 

இந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2) - இன் கீழ் தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக செயல்படுத்திட உரிமை இருக்கிறது.

இந்த விதிக்கேற்ப தமிழக அரசு சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் வழியாக இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்திய அரசு அதைச் செயல்படுத்த முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டது. அரசமைப்புச் சட்டத்தின் உயர்வு பற்றி தனக்குச் சாதகமான முறையில் உபதேசம் செய்து வரும் இந்திய அரசின் ஆட்சியாளர்கள், அச்சட்டப்படி தமிழ் மொழி உயர்நீதி மன்ற அரங்கில் ஏற முனைந்த போது, தமிழைக் கீழே தள்ளி இழிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்ட விதியையும் அவமதித்து காலில் போட்டு மிதித்தார்கள்.

ஆனால், அதே இந்திய அரசின் ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் இந்தி மொழியில் வெளியிடும் முயற்சியில் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையைப் பெற்றுள்ளார்கள்.

தமிழில் தந்தி கொண்டு வந்தார்கள். முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அது செயல்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் திட்டத்தைக் கை கழுவி விட்டார்கள். தமிழில் தந்தி கொடுக்க யாரும் முன் வரவில்லை என்று பொய்க்காரணம் சொன்னார்கள். நடந்ததோ வேறு. தமிழில் தந்தி கொடுக்க மக்கள் முன் வந்த போதெல்லாம் இயந்திரம் பழுது என்றார்கள். தமிழில் தந்தி கொடுத்தால் தாமதமாகத்தான் போகுமென்றார்கள். இப்படியாக தொலைபேசித் துறை அதிகாரிகள் தமி;ழ் வழித் தந்தியை ஒழித்தார்கள்.

இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.

 தமிழ் நாட்டில் இயங்கும் அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் புயல் வேகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. அதே வேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழில் எழுதி வந்த அலுவலகப் பெயர்களைக் கூட இப்பொழுது கைவிட்டு, இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகளை எழுதுகிறார்கள்.

இந்தித் திணிப்பின் முன்மாதிரி மையமாக அஞ்சலகத் துறை விளங்குகிறது

தில்லி அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக ஆட்சி மொழியாகிய தமிழை அலுவல் மொழியாகச் செயல்படுத்தவும் இந்திய அரசை வலியுறுத்தி வரும் மொழிப்போர் நாளான 25-01-2008 அன்று தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் போராட்டம் நடத்துவதென்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு

 தமிழக அரசு வேகவேகமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. அது கொண்டு வரும் புதிய திட்டங்களின் பெயாகளை முதலில் ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்துகிறது.

 தமிழக அரசுப் பேருந்துகளில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே செய்யப்படுகின்றன. இப்பொழுது விரைவுப் பேருந்துகளில், "அல்ட்ரா டீலக்ஸ்" என்ற 'மிகை சொகுசு வண்டிகளை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தமிழ்ப் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். தமிழாக்கம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே "அல்ட்ரா டீலக்ஸ்" என்று எழுதப்படுகிறது. அதே போல், "பாயின்ட் டு பாயின்ட்" என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டி அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தமிழ் மொழியில் தான் உரியவாறு பெயர் சூட்டி அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு தனது திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர் சூட்டுகிறது என்பதையாவது தமிழக அரசு கவனித்து தமிழ்நாட்டில் தமிழில் பெயர் சூட்ட முனைந்திருக்கலாம்.

 தமிழக அரசின் தமிழ்;ப் புறக்கணிப்பைக் கண்டித்து வரும் 25-1-2008 மொழிப்போர் நாளில் சென்னை கோயம்பேடு நடுவண் பேருந்து நிலையத்திலும், தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடத்துவது என்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.

2. மண்ணின் மக்களுக்கு வேலை தராமல் மற்ற மாநிலத்தவர்க்கு வேலை தரும் இன ஒதுக்கல்
 கொள்கையைக் கண்டித்து திருச்சி மிகுமின தொழிலகம் முன் மறியல் போராட்டம்

திருச்சி திருவரம்பூர் மிகுமின் தொழிலகம் (பி.எச்.இ.எல்) புதிய விரிவாக்கத்திற்காகப் பல்லாயிரக் கணக்காணோரை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதுவரை வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் ஆவர். அந்நிறுவனத்தில் உள்ள ஆறு பொது மேலாளர்களில் நால்வர் மலையாளிகள்.
 
தமிழ் நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான மிகுமின் தொழிலகத்தில் 80 விழுக்காட்டுப் பணியிடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குத் தான் வழங்கப் படவேண்டும். மிகுமின் தொழிலகத்தில் வேலைக்குச் சேர்க்கும் போது தமிழர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அவர்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் 1970-களில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த ஆணை இப்போது புறக்கணிக்கப்படுகிறது.

 இதே போல் திருச்சி கோட்டத் தொடர் வண்டித் (ரயில்வே); துறையில், மிகை எண்ணிக்கையில் பீகாரிகளையும் இதர பகுதி இந்திக்காரர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார்கள். கடந்த ஓராண்டிற்குள் வணிகப் பிரிவில் 200 வடநாட்டாரும், இளநிலைப் பொறியாளர் நிலையில் 100 வடநாட்டாரும், மூன்றாம் நிலைப் பிரிவில் 300 வடநாட்டாரும் ஆக மொத்தம் 600 வடநாட்டாரும் பணியமர்த்தம் பெற்றுள்ளனர்.
 
இந்திக்காரரான லல்லு பிரசாத் யாதவ் தொடர் வண்டித் துறை அமைச்சாரனதிலிருந்து அத்துறையில் இந்தித் திணிப்பும் இந்திக்காரர் திணிப்பும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. தமிழும் தமிழர்களும் புறக்கணிக்ப்படுகிறார்கள். மேலே சொன்ன இந்திக்காரர் திணிப்பு திருச்சிக் கோட்டத்தில் மட்டும் நடந்தது. சென்னைக் கோட்டத்தில் இன்னும் அதிகமாக வடவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் திருச்சி அருகிலுள்ள ஆயுதத் தொழிற்சாலையிலும் (எச்.ஏ.பி.பி) வேற்று மாநிலத்தவர் மிகையாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழர்கள் புறக்கணிக்ப்படுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் தொழிலகப் பணியிடங்களில் 80 விழுக்காடு இடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாமல் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் என்று ஏதேதோ காரணம் காட்டி, முறையான கல்வித் தகுதி பெற்றுள்ள தமிழக ஆண்களையும் பெண்களையும் இன ஒதுக்கல் செய்வது, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கத்தையே சீர்குலைப்பது ஆகும்.

வேற்று இனத்தாரை மிகையாக வேலைக்குச் சேர்த்து மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணிக்கும் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தமிழ்த் தேசியத் தன்னுரிமை நாளான 25-2-2008 அன்று காலை பத்து மணிக்கு திருவரம்பூர் மிகுமின் தொழிலக ஆலை வாயிலில் த.தே.பொ.க சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.

3. இரயில்வே நிர்வாகமே, பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்யாதே!

தென்னகத் தொடர் வண்டித் துறை "ரயில் நீர்" என்ற பெயரில் ஒரு பாட்டில் பத்து ரூபாய்க்கு தொடர் வண்டிகளிலும் நிலையங்களிலும் தண்ணீர் விற்கத் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதற்காக காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள பாலூர் என்ற இடத்தில் பாலாற்றில் ஊற்று நீர் எடுப்பது தான் தமிழக நலன்களுக்கு எதிரானது.

இத்திட்டத்தின் கீழ் பாலூரில் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் பாலாற்று ஊற்று நீரை எடுக்க உள்ளார்கள். இந்த நீர், ஆந்திர, கர்நாடக, தமிழக, கேரளப் பகுதிகளில் ஓடும் தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் விற்கப்பட உள்ளது.

பாலாற்றில் தமிழகப் பகுதிக்குத் தண்ணீரே வருவதில்லை. பாலாற்றின் கரையிலுள்ள வேலூருக்கு ஒன்பது நாளுக்கு ஒரு தடைவை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்வரவு நீரும் ஊற்று நீரும் மிகமிகக் குறைவாக உள்ளதுதான் இந்த அவலத்திற்குக் காரணம். ஏற்கெனவே தமிழக அரசு இதே பகுதியில் பாலாற்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஆலந்தூர் வரை வழங்குகிறது.

ஆம்பூர் பகுதியிலிருந்து வெளியேறும் தோல்பதனிடும் கழிவு நீர் காஞ்சிபுரம்; வரை ஓடி வந்து ஊற்று நீரை பாழ்படுத்தி விட்டது. மிச்சம் உள்ள தண்ணீரையும் ரயில் நீர் திட்டத்திற்கு எடுத்து விட்டால் தோல் கழிவு நீர் மெலும் கிழக்கு நோக்கி ஆற்றில் பரவும் .பாலாற்றில் எஞ்சியுள்ள ஊற்று நீரும் பயன் படாமல் போய்விடும்.

தமிழகத்தை விட பல பத்து மடங்கு ஆற்று நீர் வளம் நிறைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த இரயில் நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.

 பாலாற்றை மலடாக்கும் இந்த ரயில் நீர்த் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இழந்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை நீர் போன்றவற்றை மீட்க முடியாத தமிழக அரசு, இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பாதுகாக்கும் முயற்சியில் இல்லை.

எனவே, பாலாற்று ஊற்று நீரை எடுக்கும் திட்டத்தை தென்னகத் தொடர் வண்டித் துறை கை விடுமாறும், இத் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Wednesday, November 14, 2007

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்
4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர்
கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்தப் பேரணிக்கு சென்னை நகர ஆணையர் அனுமதி மறுத்தார். என்றபோதும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் தடையை மீறி நடத்தப்படும் பேரணியில் ம.தி.மு.க பங்கு கொள்ளும் என அறிவித்தார்.
நவம்பர் 12 அன்று மாலை 3 மணியளவில் இருந்தே மன்றோ சிலை அருகே தமிழ் உணர்வாளர்களும் ம.தி.மு.க தொண்டர்களும் குவியத் தொடங்கினர். ஏறத்தாழ 3 லாரி நிறைய காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஏதோ கலவரச் சூழல் போன்று காவல்துறையினர் அணிவகுத்து நின்று அச்சத்தைத் தோற்றுவிக்க முயற்சித்தனர். சுற்றி நின்ற பொதுமக்களை நிற்க விடாமல் விரட்டியடித்தனர்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படம் போட்டு வீரவணக்க வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாகை ஒன்றை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒரு ஊர்தியில் வைத்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த வாடகை ஊர்தி ஓட்டுநரை மிரட்டி வாகனத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பியவர்களை உடனே கைது செய்யப் போவதாக மிரட்டினர். கூடியிருந்தவர்கள் காவல்துறையின் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்தனர். தலைவர்கள் வராமல் யாரையும் கைது செய்யக் கூடாது என காவல்துறையினரிடம் வாதிட்டனர்.

இதற்கிடையே, மன்றோ சிலைக்கு எதிர் திசையான பெரியார் சிலைப் பக்கமிருந்து திடீரென பெரும் ஆரவாரம் கேட்டது. திறந்த ஊர்தி ஒன்றில் பழ. நெடுமாறன், வைகோ, இருவரும் கையில் தமிழ்ச்செல்வன் படம் போட்ட வீரவணக்கப் பதாகைகளை ஏந்தியபடி,
ஆதரிப்போம்! ஆதரிப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! ஆதரிப்போம்!!
வீரவணக்கம்! வீரவணக்கம்! தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
-என்று வீரவணக்க முழக்க மிட்டவாறு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஏறத்தாழ 200 தமிழ் உணர்வாளர்களும் ம.தி.மு.க தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர்.

சாலையின் மறுபுறம் கூடியிருந்த ஏறத்தாழ 4000 பேரும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து ஆகியோரும் தலைவர்கள் வந்த ஊர்தியில் ஏறிக் கொண்டனர்.
இதைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் ஓடி வந்து அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தனர். அதோடு தலைவர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்த ஒலிவாங்கியையும் பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, "ஒலிபெருக்கியைப் பிடுங்கிய உங்களால் என் தொண்டையைப் பிடுங்க முடியுமா?' என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.

இது கூடியிருந்த உணர்வாளர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில் காவல் துறையினர் கூடியிருந்த கூட்டத் திடையே புகுந்து தொண்டர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முனைந்தனர்.
"நாங்கள் சிறைக்கு அஞ்சுபவர்கள் அல்லர். நாங்களாகவே தளைப் படுவோம். நாங்களாகவே காவல் துறை வாகனத்தில் ஏறுவோம். அத்துமீறி கைது செய்யாதீர்கள் என்று தலைவர்கள் கூறிய பிறகும் காவல்துறை தனது செயலை நிறுத்தவில்லை. தலைவர்கள் இருந்த ஊர்தியைச் சுற்றி பாதுகாப்பாக நின்றவர்களை சட்டையைப் பிடித்து ஏறத்தாழ அடித்து இழுத்துச் சென்றனர்.

அதோடு நில்லாமல், 83 வயதான ஆனைமுத்து அவர்களை, அவரின் வயதைக் கூடப் பொருட்படுத்தாமல், ஊர்தியிலிருந்து கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். உணர்வாளர்கள் ஓடி வந்து அதைத் தடுத்து காவல்துறையினருடன் சண்டையிட்ட பிறகே அவரை மெதுவாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் தலைவர்கள் ஒவ்வொருவராக காவல் துறை வாகனத்தில் ஏறினர். கூடியிருந்த அனைவரையும் கைது செய்யாமல், ஏறத்தாழ 1000 பேர் அளவில் மட்டுமே கைது செய்து அவர்களை இராசரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த திருமாறன், இராசேந்திர சோழன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் வீர சந்தானம், சந்திரேசன், மரு. சுந்தர், புதுவை அழகிரி, நா. வை. சொக்கலிங்கம், பொன்னிறைவன், கி. த. பச்சையப்பன், கா. பரந்தாமன், இரா. பத்மநாபன், கே. எஸ். இராதாகிருஷ்ணன், ம.தி.மு.க-வின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ம.தி.மு.க வழக்கறிஞர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 
நன்றி: தென் ஆசிய செய்திகள்
 

Tuesday, November 13, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன்
உள்ளிட்ட 346 பேர் கைது
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
 
ஆதரிப்போம் ஆதரிப்போம்
தமிழீழ விடுதலைப் புலிகளை
ஆதரிப்போம் ஆதரிப்போம்
 
வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
 
என்பது உள்ளிட்ட முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.





அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து வைகோவிடமிருந்த ஒலிபெருக்கியை காவல்துறை பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.





அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.
 
அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.





மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Friday, November 2, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

வீரச்சாவடைந்துள்ள
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
 
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
 
அவர்களுக்கு வீரவணக்கம் !

Tuesday, September 18, 2007

ஜீவா நூற்றாண்டு விழா

தமிழ்க் கலை இலக்கிய பேரவை

நடத்தும்

ஜீவா நூற்றாண்டு விழா



நாள்: 22-09-07, காரிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிக்கு

தலைமை
தோழர் உதயன்,
தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இ.பே

வரவேற்புரை
கவிஞர் கவிபாஸ்கர்

விழாப்பேரூரை
பாவலர் இரா.இளங்குமரனார்
நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அள்ளுர்

வாழ்த்துரை
மருத்துவர் செ.தெ.தெய்வநாயகம்,
தாளாளர், செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி

கருத்துரை

கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஜீவாவும் இலக்கியமும்

தோழர் பெ.மணியரசன்
ஜீவாவும் மண்ணுக்கேற்ற மார்க்சியமும்

தோழர் அ.பத்மனாபன்
நாஞ்சில் நாடும் ஜீவாவும்

நன்றியுரை
தோழர் க.அருணபாரதி,
த.க.இ.பே

தொடர்புக்கு
தமிழ்க் கலை இலக்கிய பேரவை,
20, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர், சென்னை.
பேச: 9841604017

அனைவரும் வருக ! இலக்கியம் பருக !

Friday, September 14, 2007

நாகை பொதுக்கூட்ட உரை

ஈழத்தமிழர்க்கு உணவுப் பொருட்கள் அளிக்க படகுப்பயணம் புறப்பட்ட பழ.நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு உள்ளிட்டோர் கைது

(தலைவர்களின் பேச்சைக் கீழே கிளிக் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளவும்)
தமிழ்நாடு நாகபட்டினத்தில் இன்று புதன்கிழமை (12.09 உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை(12.09.07)

தமிழ்நாடு நாகபட்டினத்தில் பழ. நெடுமாறனின் படகுப்பயணத்தினை தடை செய்தது தொடர்பாக இன்று புதன்கிழமை (12.09.07) தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொது செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரை(12.09.07)

நன்றி: தமிழ் நாதம்

உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம்

Posted: 13 Sep 2007 07:04 AM GMT-06:00

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர்.

சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர்.

பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Friday, July 13, 2007

தமிழக ஆற்று நீர் உரிமை மாநாடு

தமிழக உழவர் முன்னணி
(கட்சி சார்பற்றது)
நடத்தும்
 
தமிழக ஆற்று நீர் உரிமை மாநாடு
 
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழரின் தலையாய ஆற்று நீர் உரிமை
பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது. பல்வேறு அறிஞர்கள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தொகுத்துள்ள அறிய கட்டுரைகளை கொண்ட மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
 
நாள்:
14-07-2007, சனி
 
இடம்:
லலிதா திருமண மண்டபம், காட்டுமன்னார் குடி
 
சிறப்பு அழைப்பாளர்கள்
 
தோழர் கி.வெங்கட்ராமன்
ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி
 
தோழர் பாமயன்
இயற்கை வேளாண் அறிஞர்
 
தோழர் பெ.மணியரசன்
ஆசிரியர், தமிழர் கண்ணோட்டம்
 
மேலும், பல்வேறு உழவர் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். காலையில் உழவர் பேரணியை தொடர்ந்து நிகழ்வுகள் நாள் முழுவதும் மாலை வரை நடைபெறும். மாலை மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்படும்.
 
உழவர்களே ... அறிஞர் பெருமக்களே வாரீர்...
 
 
 

Tuesday, June 19, 2007

மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தினகரன் தீவைப்பு-மூவர் படுகொலை
மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகப் பணியாளர்கள் மூன்று பேரைப் படுகொலை செய்தும் அலுவலகத்திற்கு தீவைத்தும் மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும் வெறியாட்டம் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கண்டனத் தொடர் முழக்கப் போராட்டம் மே 31ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மதுரை வடக்கு மாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்றது.
மனித உரிமைப் பாதுகாவலர்களின் கண்காணிப்பு மற்றும் போராட்டக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலவேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொண்டன. இப்போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணியைச் சேர்ந்த தா. பாண்டியன் முன்னிலை வகித்தார்.
டெல்லி மூத்த பத்திரிகையாளரான பிரபுல் பித்வாய், கர்நாடக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
பேரா. கல்விமணி, பெ. மணியரசன், கா. ஜான்மோசஸ், பு. சந்திரபோசு, ச. பாலமுருகன், காமேஸ்வரி, மெல்கியோர், மகபூப் பாட்சா, கா. பரந்தாமன், சு. முருகவேல் ராசன்,
ஹென்றி டிபேன், கேபிரியேல், குருவிஜயன், கு. பகத்சிங், சி.சே. ராசன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைக் காண திரளான மக்களும் கூடியிருந்தனர்.



Thursday, June 14, 2007

இன்று சே குவாரா பிறந்தநாள்..

இன்று சே குவாரா பிறந்தநாள்..
சே குவேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
சே குவேரா
சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்

  • 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
    • ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
  • 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
    • ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
  • 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
    • டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
  • 1959
    • ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
    • ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
    • ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
    • ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
    • மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
    • ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
    • ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
    • அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
    • நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  • 1961
    • ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
    • பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
    • ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
  • 1962
    • மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
    • ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
  • 1964
    • பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
    • மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
    • அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
    • டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
  • 1966
    • நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
  • 1967
    • மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
    • ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
    • ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
    • செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
    • அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
    • அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்
  • 1968
  • 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
  • 1997
    • ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
    • ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
    • அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
    • அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

 

Tuesday, May 8, 2007

த.தே.பொ.க பற்றிய செய்திகள்

பல்வேறு இணையதள ஊடகங்களில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும்
தோழமை அமைப்புகளின் நிகழ்வுகள் பற்றிய
செய்திக் குறிப்புகள்
 
இந்தியாவின் பொதுவுடைமை அமைப்புகளின் பட்டியலில் த.தே.பொ.க
 
"த.தே.பொ.கவின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது"
 
ஐ.பி.சி தமிழ் இணையத்தில் மணியரசன்
 
விடுதலைப்புலிகள் ஆதரவு :மணியரசன், சுப.வீ கைது 5-12-1996
 
கண்ணகி சிலை போராட்டம் 01.01.2002
 
 கோவை : பொடா எதிர்ப்பு கருத்தரங்கம் 11-10-2003
 
காவிரிக்காக பாத யாத்திரை 13-12-2003
இந்து செய்தி :
இந்தியா இன்போ:
 
காவிரிக்காக பாதயாத்திரை மேற்கொண்ட
த.தே.மு தோழர்கள் 200 பேர் நெய்வேலியில் கைது 22-12-2003
 
காவிரி:: கர்நாடக முதல்வர் கொடும்பாவி எரிப்பு : த.உ.மு 4-9-2004
இந்து புகைப்படச்செய்தி
 
வீராணம் பாதுகாப்பு இயக்கத்தில் த.உ.மு :17-10-2004
இந்து செய்தி 
 
சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 
500-க்கும் மேற்பட்டோர் கைது  :  3-5-2005
நெருடல் இணையம்
 
தேசிய அவமானத்திற்கு எதிரான உரிமை மீட்பு மாநாடு 16.7.2005
கீற்று இணையம்
 
சுதந்திர தினத்தன்று தீண்டாமைக்கெதிரான பேரணி:
த.தே.மு தோழர்கள் உட்பட 400 பேர் கைது 15-8-2005
கேரள மனிதஉரிமைகள் அமைப்பு
 
சிங்கள இனவாத அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 3-1-2006
தமிழ்ஓசை-இலங்கை
 
இலங்கைக்கு அமெரிக்கா உதவ கூடாது: மணியரசன் 28-1-2006
உலகச் செய்திகள் தளம்
லங்கா அகடமிக் செய்தி
லங்காவெப் செய்தி
 
ஈழத் தமிழர்களை மிரட்டும்
அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் 28-1-2006
புதினம்
 
கேரள முதல்வர் கொடும்பாவி எரிப்பு 13-3-2006
இந்து புகைப்படச் செய்தி
 
திருச்சியில் ம.பொ.சி நூல் வெளியீடு 25-7-2006
இந்து செய்தி 
 
மதுரை: அயோத்திதாசர் ஆய்வு மய்யம் நடத்திய 
நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 10.8.06
கீற்று இணையம்
 
செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து
கறுப்பு சவப்பெட்டியுடன் அமைதி ஊர்வலம் 21-8-2006
ஜியோ தமிழ் செய்தி
 
மதுரை : முல்லை பெரியாறு த.தே.மு ஆர்ப்பட்டம்  19-9-2006
இந்து செய்தி
 
ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு சிதம்பரத்தில் 23-09-06
தென் ஆசிய செய்தி
நெருடல் இணையம்
 
முல்லை பெரியாறு: தமிழக உரிமைகள் பறிபோகிறது: த.தே.மு 25-10-2006
இந்து செய்தி
 
மதுரை : அச்சுதானந்தன் கொடும்பாவி எரிப்பு:
த.தே.மு தோழர்கள் கைது  26-11-2006
இந்து செய்தி
 
அன்ரன் பாலசிங்கத்துக்கு நினைவஞ்சலி கூட்டம் 20-12-2006
தலைவர்களின் உரைகள்(தென் ஆசிய செய்திகள்):
தமிழ் ஓசை-இலங்கை
இந்து செய்தி
 
 
 

Friday, March 30, 2007

சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்

சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்::
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி


 

Tamilwin.com சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கடந்த புதனன்று மக்கள் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொது செயலாளர் தோழர் பெ.மணியரசன் கூறியது போல் டில்லியும் சிங்களவனும் கூட்டு சேர்ந்து தமிழினத்தை அழிக்க செய்யும் சதிகளில் ஒன்றாக இச்சம்பவம். நடந்துள்ளது..
 
சிங்கள கடற்படையினலின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்...
 


 

Tuesday, March 13, 2007

ஈழத்துப் பிரகடனம்

ஈழத்துப் பிரகடனம்

ஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம்.

உடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி "ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கிறார்.

சிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்யும் சில தமிழ்ப் புல்லுருவிக் குழுக்கள் உண்டு. அந்த குழுக்கள் கொழும்பு நகரில் இனவாத அரசின் அரவணைப்பில் அச்சத்தோடு இருக்கின்றன. அவர்கள்தான் ஈழத்துப் பிரதிநிதிகள் என்று ராஜபட்சேக்கள் நாடகமாடுகிறார்கள். ஈழத்தமிழர்களெல்லாம் புலிகள் அல்ல என்று ராஜபட்சே புதிய தத்துவம் சொல்லியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள்தான் ஈழமக்கள் ஏற்றுக்கொண்ட தளபதிகள். அதனால் தான் ஜெனிவாவில் சிங்கள அரசின் பிரதிநிதிகள் ஈழப்போரளிகளின் பிரதிநிதிகளுடன் பேசினார்கள். ஆனால் கொழும்பிற்கு வந்தால் குரலை மாற்றிக் கொள்கிறார்கள். "அரசு பயங்கரவாதம்" என்றால் என்ன என்பதற்கு இன்றைக்கு ஈழத்தில் சிங்கள இனவாத அரசு இலக்கணம் எழுதிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஊரையும் இரண்டாகப் பிரித்து சிங்கள ராணுவம் முகாம் போட்டிருக்கிறது. ஆங்காங்கே ஈழத்தமிழர்களை சிறை வைத்திருக்கிறது. நடமாடுவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை இல்லை. பாடிப் பறந்த தமிழ் குயில்கள் ராணுவச்சிறைக்குள் அடைக்கப்படுகின்றன. யாழ்ப்பாண நெடுஞ்சாலை அடைக்கப்பட்டதால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு எல்லா உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ இஞ்ஜி விலை 2 ஆயிரம் ரூபாய். ஒரு முட்டை விலை 50 ரூபாய். இப்படி செயற்கை பஞ்சத்தை உருவாக்கி ஈழ மக்களை உயிரோடு சித்திரவதை செய்கிறது.

ஈழத்து இளைஞர்களுக்கோ, பெண்களுக்கோ எந்தப் பாதுகாப்பும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்தான் விடுதலைப் புலிகள் தயாராகிறார்கள் என்று ஒரு அபாண்டத்தை இப்போது அவிழ்த்து விட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில் அந்தப் பல்கலைக் கழகத்தை சிங்கள இனவாத அரசு மூடுவதற்கு முயற்சிக்கிறது என்று பொருள்.

சிங்கள இனவாத கட்சிகளுக்கு ராஜபட்சே கொத்தடிமையாகிவிட்டார் என்று அண்மையில் சந்திரிகாவே குற்றம் சாட்டியிருப்பது நினைவிருக்கலாம். எனவே ராஜபட்சேக்களின் பரிபாலனத்தில் ஈழத்து மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை. எனவே ஈழமக்களுக்கு தனி நாடுதான் வழி என்ற நிலைக்கு அவர்களை சிங்கள இனவாதிகளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதனைத்தான் மாவீரர் நினைவு தினத்தில் பிரபாகரன் பிரகடனம் செயிதிருக்கிறார்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வினை ஒருபோதும் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. ஆகவே நடக்க முடியாத காரியத்தில் நம்பிக்கை வைத்து அதே பழைய பாதையில் (பேச்சுவார்த்தை) நடப்பதற்கு இனியும் நாங்கள் தயாராக இல்லை. அதில் பயனும் இருக்கப் போவதில்லை என்று அவர் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

இது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போது சிங்கள அதிபர் ராஜபட்சே இன்னொரு நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களுக்கு எந்த அளவு உரிமை அளிப்பது என்பதனை ஆராய அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழுவில் ஈழப் போராளிகளுக்கு இடமில்லை. நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களுக்கு இடமில்லை. சிங்கள அரசுக் கட்சி, எதிர்க்கட்சி, இரண்டு சிங்கள இனவாதக் கட்சிகள், ஈழ மக்கள் குப்பைத் தொட்டியில் வீசிவிட்ட சில கண்காணிக் குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குழுவின் பணி என்ன தெரியுமா? இலங்கையில் பஞ்சாயத்துக்களுக்கு எப்படி உரிமை அளிப்பது? எவ்வளவு உரிமை அளிப்பது? என்று தீர்மானிப்பதுதான் இந்தக் குழுவின் வேலையாகும். இந்தக் குழுவினர் அண்மையில் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்தனர். அப்படியே பஞ்சாயத்துராஜ் மத்திய மந்திரி மணிசங்கர அய்யரையும் சந்தித்தனர்.

ஈழ மக்கள் தங்கள் ஊராட்சிகளுக்கு அதிகாரம் கேட்டா போராடுகிறார்கள்? சிங்கள மக்களுக்கு ஈடாக தங்களுக்கு சம உரிமை கோரிப் போராடுகிறார்கள். ஆனால் இல்லாத ஊருக்குப் போகாத வழியை ராஜபட்சேக்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களை தங்கள் நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிப்பதற்குக்கூட மறுக்கிறார்கள். ஆகவே அரசியல் உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களை ஊருக்கு ஊர் பிளவுபடுத்த ஆலயங்களையும், மாதா கோவில்களையும் ராணுவப் பாசறைகளாக்கி இருக்கிறார்கள்.

ராஜபட்சே அதிபராக பொறுப்பேற்ற பின்னர்தான் ஈழம் முழு ராணுவமாகியது. ஈழப்பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதற்கே விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. எனவே மண்ணின் மானம் காக்க ஈழப்போராளிகளை ராஜபட்சே உருவாக்கி இருக்கிறார். அவர்கள் இப்படித் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் தீர்வுக்கு வழி தெரியவில்லை. ராணுவத்தை நம்புகிறார்கள். இதுவரை எவரிடமும் உதவி கோரி ஈழப்போரளிகள் கையேந்தி நின்றதில்லை. அமரர் எம்.ஜி.ஆர் தந்த நிதியை மட்டும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இஸ்ரேலின் இனவாத வெறியை எதிர்த்து பாலஸ்தீன வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னே அரபு நாடுகள் அணிவகுக்கின்றன. அதே போல் லெபனானில் போராடி வரும் இஸ்புல்லா போராளிகளுக்குப் பின்னே அண்டை நாடுகள் துணை நிற்கின்றன. ஆனால் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக எந்த நாடும் நிற்கவில்லை. எந்த நாடும் உதவி செய்ததில்லை. ஆனால் உலகம் முழுமையும் பரவியிருக்கும் உணர்வுள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். உலகத் தமிழர்களின் உதவி தேவை என்று முதன்முதலாக பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தங்களது ஆதரவுக் குரலைத் தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இரத்த உறவுக்காரர்களின் உதவியைத்தான் அவர் நாடுகிறார். ஈழப்பிரச்சினையில் இன்றைய மைய அரசு சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசிற்குத் தெரியாமலே கோவையில் சிங்கள காவல்துறையினருக்குப் பயிற்சி அளித்தன; அதனைச் சட்டமன்றத்திலேயே கலைஞர் கண்டித்தார்.

அடுத்து அந்த போலிஸ்காரர்களை பெங்களூருக்கு அனுப்பி பயிற்சி கொடுத்தார்களே தவிர தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இன்றைக்கு போர் விமானங்களை ஓட்ட சிங்கள விமானப் படையினருக்கு சண்டிகாரில் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த விமானங்கள் நாளை ஈழத்தின்மீதுதான் குண்டுமாரி பொழியும். இதனைத் தெரிந்தே செய்கின்ற மைய அரசின் பெரிய அதிகாரிகள் நாளை என்ன சொல்வார்கள்? தனி ஈழக்கோரிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்பார்கள்.

அவர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்திற்கு சுயாட்சி என்ற நிலையை இதுவரை சிங்கள அரசிடம் இந்திய அரசு தெரிவித்து வந்தது. அந்த யோசனையை இன்றுவரை அந்த அரசு ஏற்றுக்கொண்டதில்லை. அதன் விளைவுதான் தனித்தமிழ் ஈழம்தான் ஒரே வழி என்ற ஈழப்போராளிகளின் பிரகடனமாகும்.

நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்
க. முகிலன்*


இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்
தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்
தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.
சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு
சனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்
என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து
ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி ''மன்னர் மானிய ஒழிப்பு'' பெரிய தனியார் வங்கிகளை
நாட்டுடைமையாக்கல்'' என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். ''வறுமையே வெளியேறு''
என்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா
மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம்
உண்டாகவில்லை.

நேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய
அம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட
தொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப
யுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக
இருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார்.
தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை
இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே!

குப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி
கொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு
நிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள்
இருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற
கட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின்
பெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.

1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
அறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும்
விளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக
நாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க
அறிவாளிகளாலும் செய்யப்பட்டது.

அதோபார்! மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர்
கீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது
ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும்
கீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய
''சனநாயக'' அரசியல்வாதிகள்.

இற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை
எட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு
என்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின்
குறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப்
பொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது.
வெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக்
கையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5
விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத
வல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற
செய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய
மக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே
நம் கேள்வி!

வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி

புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும்
வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை
உருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு
இல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை
உலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது
இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில்
கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை
இழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை
மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின்
உற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப்
பெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை
இழந்து வருகின்றன.

மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு

1978 2000
பிரிட்டன் 39.1 25.5
அமெரிக்கா 31.1 22.9
சப்பான் 35.1 31.4
கொரியா 29.1 28.4
žனா 17.5 22.0
இந்தியா 13.0 16.0

1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது.
அதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப்
பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல்
தட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச்
செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர
வாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை
உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி
செய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு
நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு
நிறுவனங்கள்.

முதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின்
தொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை,
வேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு,
போனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக்
கொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை
மறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு
நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும்
தொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா
காவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க
வேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று
மட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும்
காவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு
வருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்
கிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே
என்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில்
நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று
கூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா!

100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை
வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன்
அனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b))
நீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000
தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு
திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி
அமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு
தொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300
தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு
அளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள்
கூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின்
சனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து
கிடக்கிறது.

மய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை
ஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக
இருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து
தூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக
உரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு
ஊழியர்களைச் சாடியது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள்
உழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக்
குழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி.
எனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன்
பேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு
வேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா?
இளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும்
உறுதி செய்யப்படவுள்ளதா?

உழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை
நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள்
3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால்
அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும்
அவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.

சுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக
14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95
விழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே
ஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும்,
குத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும்
உள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர்
பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு
செய்துள்ளனர்.

வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5
கோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே
ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில்
92.6இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252
இலக்கம்
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு
வெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.

புதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு
நிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும்,
தானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான
வேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹ"ரோ
ஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில்
தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில்
பெரிதாகக்காட்டப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு
முதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு
வேலை என்பது எவ்வளவு கொடிய நிலை! சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு
செய்யப்போகிறது? தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய
வணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க
அரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள
வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்?
கொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக்
கொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக
இது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை
எளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா?

வேளாண்மை

அமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து
25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20
இலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.
அமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய
நாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச்
சேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு
நிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன.
உலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்
உள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம்
உள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2
விழுக்காடு மட்டுமே! ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.

இதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2%
செருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர்
எண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால்
அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ.
15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற
இந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள்
சார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான
விதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத்
தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச்
சேருகிறது.

இந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக
வேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி
மூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய்
வேளாண்மை žர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற,
விதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும்,
நீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண்
தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம்
ஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை
செய்து க�
 

Wednesday, March 7, 2007

காவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்

காவிரித் தீர்ப்பும்
களவு போன உரிமையும்

பெ.மணியரசன்

 நாற்புறமும் பகைவர் சூழ நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம். மேற்புறத்தில் கன்னடர்கள், கீழ்ப்புறக் கடலில் சிங்களர், தென்மேற்கில் மலையாளிகள், வடக்கே தெலுங்கர்@ உச்சந்தலையிலோ தில்லியர்.

 இந்த எதிரிகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் தமிழினத்திற்கு இருக்கிறதா ? முகம் கொடுப்பதென்ன, எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலே தமிழினத்திற்கு உண்டு. ஆனால்...

 மயக்கத்தில் ஒரு பகுதி, உறக்கத்தில் ஒரு பகுதி, குழப்பத்தில் சிறு பகுதி, கொந்தளிப்பில் மறுபகுதி@ இதுவே இன்றையத் தமிழ் இனத்தின் நிலை.

 தமிழர்களுக்குக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் இல்லை. உண்மையைச் சொல்வதெனில், அரசியல் அனாதையாகத் தமிழினம் இன்றுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பொழுது தான் முகிழ்த்து வருகிறது. போதிய வலிவினை இனிமேல் தான் அது பெற வேண்டும்.

 தண்ணீரின் அருமையைக் கூட அறிய முடியாத வகையில் தமிழ் மக்களைத் தேர்தல் அரசியல், உறக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
 
  நீர்இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும்
  வான்இன்று அமையாது ஒழுக்கு.
        -திருவள்ளுவர்

  நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
  உண்டி முதற்றே உணவின் பிண்டம்
  உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
  நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
  உடம்பும் உயிரும் படைத்திசி னோரே  
     - குடபுலவியனார், புறநானூறு -18

 இப்பொழுது பெட்ரோலுக்காக ஈராக்கில் படையெடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள். அமெரிக்காவின் அக்கம் பக்கம் உள்ள நாடல்ல ஈராக். பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல், தொலைவுள்ள ஈராக்கின் மீது படையெடுத்து, தனது நாட்டிற்கு பெட்ரோலியத்தைக் கொள்ளையிட்டுச் செல்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. அதை எடுக்காமல் சேமிப்பில் வைத்துள்ளது அந்நாடு. எதிர்காலத் தேவைக்கு அந்த இருப்பு இன்றியமையாததாம்.

 வருங்காலத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் வளத்தைக் கைப்பற்றுவதற்காக நாடுகளுக்கிடையே போர் நடக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். அப்போர் அணுஆயுதப் போராக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இக்கருத்தைத் தமிழ்நாட்டு வெலிங்கடன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 24.02.2007 அன்று பேசியுள்ளார்.(தினமலர் 25.02.2007).

 'முதல் உலகப் போர் நாடுகளைப் பிடிப்பதற்கு நடந்தது. இரண்டாவது உலகப்  போர் அரசியல் கொள்கைகளுக்காக நடந்தது. அண்மையில் நடந்த ஈராக் போர்  எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நடந்தது. எதிர்காலத்தில், தண்ணீர், எண்ணெய்,  இயற்கை வாயு, தங்கம், யுரேனியம், தோரியம் போன்ற வளங்களைக் கைப்பற்றவும்  போர் நடக்கும்."

 'இந்தப் போரில் அணு ஆயுதங்களின் பயன்பாடே மிக அதிக அளவில் இருக்கும்.  மேலும், கொள்ளை நோயை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றுவது, மனித  உயிரைப் பறிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை"
 
 குடியரசுத் தலைவரின் எச்சரிக்கையைப் படிக்கும் போதே, நம் எதிர்காலத் தலை முறையினர் என்ன பாடுபடப் போகின்றார்களோ, என்ன ஆகப் போகிறார்களோ என்ற கவலை மனதைக் கவ்விக் கொள்கிறது.

 காலங்காலமாகக் காவிரியில் தமிழர்க்கிருந்து வந்த உரிமையைக் கருவறுக்கும் வகையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்னும், எதுவுமே நடக்காதது போல் நம் தமிழ் மக்கள் இருப்பது நமது கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.

 மக்களைக் குற்றம் சொல்வது சரியல்ல. ஊடகங்களும் கட்சித் தலைமைகளும் கட்சி ஏடுகளும் தவறான தகவல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தன@ தந்து கொண்டுள்ளன.
 
 காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய 5.02.2007 அன்று காலையிலிருந்தே தில்லி ஆங்கிலத் தொலைக் காட்சிகளான என்.டி.டிவி, சி.என்.என்- ஐ.பி.என் போன்றவை, 'இன்று காவிரித் தீர்ப்பு: எதிர்பாருங்கள்-சிறப்புச் செய்திகள்" என்று அறிவித்துக் கொண்டிருந்தன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சியைத் தவிர மற்றவை இதை கண்டு கொள்ளவே இல்லை.
 
 அன்ற பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே மேற்கண்ட ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு, அது தொடர்பான நேர்காணல்களை ஒளிபரப்பின. கர்நாடகாவில் பெங்களுர்-மைசூர் ஆகிய இடங்களிலிருந்து நேர்காணல்களை- மக்கள் பிரதிபலிப்புகளை நேரடியாக ஒளிபரப்பின. தமிழ் நாட்டிலிருந்தும் சில நேர்காணல்களை நேரடி ஒளிபரப்புச் செய்தன.

 தமிழகத்திற்கு 419 ஆ.மி.க(ஆயிரம் மில்லியன் கனஅடி - வு.ஆ.ஊ), கர்நாடகத்திற்கு 270 ஆ.மிக, புதுவைக்கு 7 ஆ.மி.க என்று அவை செய்தி வெளியிட்டன. அப்போது தமிழ்த் தொலைக்காட்சிகளான சன், ஜெயா, ராஜ் போன்றவற்றில் திரைப்படம், தொடர்கதைகள், கூத்து கும்மாளம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
 
 இது பற்றி செய்தி அலசல் நடத்திய மக்கள் தொலைக்காட்சி தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டியது 419 ஆ.மி.க. என்ற கருத்திலேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தலைவர்களும் அதே கருத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

 2.30 மணிக்கெல்லாம், தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டியது 192 ஆ.மி.க. என்றும் அதில் 7 ஆ.மி.க. வை தமிழகம் புதுவைக்குத் தர வேண்டும் என்றும் மேற்படி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
 
 சற்றேறக் குறைய 4 மணிவாக்கில் தான் மக்கள் தொலைக்காட்சி அலசலில் 192 ஆ.மி.க. என்ற விவரம் பேசப்பட்டது. இக்கட்டுரையாளரிடம் தொலைபேசி வழி கருத்துக் கேட்ட போது, 'இது மோசடித் தீர்ப்பு" என்று கூறினார். 'இத்தீர்ப்பை எதிர்த்து நாளையும் நாளை மறுநாளும், சென்னை, சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மதுரை, கோவை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் த.தே.பொ.க மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என்றார்.
  
 சிறிது நேரம் கழித்து மருத்துவர் இராமதாசின் தொலைபேசி நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் அவர் தெளிவாக 192 ஆ.மி.க என்றும், இது குறைவானது என்றும் கூறினார்.

 சன் தொலைக்காட்சியில் 419 ஆ.மி.க தமிழகத்திற்கு என்ற செய்தியைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த போது, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தில்லியில் இருந்தார். அவருடைய கருத்து தொலைக்காட்சிகளில் வந்தது. 'ஞாயத்தீர்ப்பு@ ஆறுதல் அளிக்கிறது" என்றார். அப்போது முதல்வருடன் தில்லியில் இருந்த தமிழகப் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகன், 'மகிழ்ச்சி, மகி;ழ்ச்சி" என்று ஆனந்தக் கூத்தாடினார்.
 
 மறுநாள் காலை வந்த தினத்தந்தியில் தலைப்பில் கொட்டை எழுத்தில் 'காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்றும் அதன் கீழே அதை விட சிறிய எழுத்தில் கர்நாடகம் தர வேண்டியது 192 டி.எம்.சி என்றும் செய்தி வெளியி;டப்பட்டது. சி.பி.எம் நாளிதழான தீக்கதிர் 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர்" என்று எட்டுக் கலக் கொட்டைச் செய்தி வெளியிட்டது. அதே போல் சி.பி.ஐ ஏடான ஐனசக்தி 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டது.

 தினமணி 'தமிழகத்துக்கு 192 டி.எம்.சி" என்றும், தினமலர் 'தமிழகத்துக்கு 185 டி.எம்.சி" என்றும் செய்தி வெளியிட்டன.

 இன்றுவரை தமிழக முதல்வரும் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகனும் காவிரித் தீர்ப்பு ஞாயமானது என்றும், கர்நாடகத்திற்குத் தான் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளனர்.
 
 'இத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குப் பாதகமானது@ உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்@ இப்பொழுது கொடுத்ததை நடைமுறைப்படுத்தச் சொல்ல வேண்டும்" என்று, காலதாமதமாக 7.02.2007 அன்று ஒருநாள் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டதோடு அமைதியாகிவிட்டார் ஜெயலலிதா.

 'நடுநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்"பென்று சி.பி.ஐ செயலாளர் தா.பாண்டியன் நாக்குத் தெறிக்க ஒலித்தார். சி.பி.எம், இத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. திருமாவளவன் கலைஞர் நிலைபாட்டுடன் முரண்பாடு வந்துவிடாமல், 'இத் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று கூறினார். தமிழகக் காங்கிரசும் இதே பாணியில் தான் பேசியது.

 ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்வாறு, மயக்கத்தையும் குழப்பத்தையும் ஊட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்? உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? எனவே தான் மக்களைக் குறை சொல்வதில் பயனில்லை என்கிறோம்.

தீர்ப்பின் சாரம் என்ன ?
 காவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது. அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது.
 
 சார்புத் தன்மை என்பது என்ன? 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.

 75 விழுக்காடு சார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.

 இந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது.
 
 நடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.

 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது.
 
 1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.

 சார்புத் தன்மை : 50 மூ
 மொத்த நீர் : 740 ஆ.மி.க

 1934-1972 வரை
 மேட்டூர் வந்த சராசரி     : 376.8 ஆ.மி.க.
 கர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 155.6 ஆ.மி.க.
 கேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி     :     3.0 ஆ.மி.க.
                                                                          ----------------------------
                                                                               540.4 ஆ.மி.க.

தமிழ்நாட்டில் மேட்டூருக்குக் கீழ் கிடைத்த நீர்  : 196.6 ஆ.மி.க.
                                                                                  ----------------------------
                                                                                       737.0 ஆ.மி.க.


தமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர்  : 573.4 ஆ.மி.க.

தமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்

 கர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது@ வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.

 உண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.

 மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.

 அப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)

 மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)

 ஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று கூறியுள்ளது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா? திருத்திக் கொள்ளக் கூடிய தவறா? இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா? அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.

 இதை நியாயத் தீர்ப்பு என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி! ஆறுதல் அளிக்கிறது என்று கூறுகிறார்@ மறு ஆய்;வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.

 நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு? 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.

 ஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.

 நடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.

 நடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.

 நடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.

 இதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.

  தமிழ்நாடு   419 ஆ.மி.க.
  கர்நாடகம்  270 ஆ.மி.க.
  கேரளம்   30 ஆ.மிக.
        புதுவை        7  ஆ.மி.க.
       -----------------------
  மொத்தம்  726 ஆ.மி.க.
       -----------------------

 கழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது? தமிழகத்திற்காக! தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14 ஸ்ரீ 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு (சுநளநசஎந) செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது? அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.

 தமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.

 கூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர்நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.

 தமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார்.
 
 தமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.

 தமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது?

 இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம்  தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்:
1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும்.
2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.
3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.
4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.

வ. ஆண்டு பில்லிகுண்டுலு   மேட்டூரில 
எண்    அளவு(ஆ.மி.க)   அளவு (ஆ.மி.க)
1. 1991-92  340.00  334.96
2. 1992-93  358.61  351.69
3. 1993-94  230.39  223.37
4. 1994-95  394.00  373.16
5. 1995-96  195.51   183.09
6. 1996-97  245.75  244.05
7. 1997-98  277.06  268.05
8. 1998-99  260.40  237.27
9. 1999-2000  273.68  268.60
10. 2000-2001  319.26  306.20
11. 2001-2002  189.94  162.74
12. 2002-2003  109.45   94.87
13. 2003-2004  75.87   65.16
14. 2004-2005  185.55  163.96
15. 2005-2006  383.91  399.22

 பில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது.
 
 இது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம்? ஏனிந்த முரண்பாடு? காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா? இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்?
 
 உண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்!

 காவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்கும் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே! அது எப்படி கூடுதலான நீர் ஆகும்! அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே? கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.

 'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதா?அதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.

 இனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது.
 
 ஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.

 ஒதுக்கீடு      -    192 ஆ.மி.க
 சுற்றுச்சூழலுக்காக பிடித்தம்   - 10 ஆ.மி.க
 கடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க
 புதுவைக்கு      - 7 ஆ.மி.க
 கேரளத்திற்கு     - 9 ஆ.மி.க
        ----------------------------------- ---------------------------
         30 ஆ.மி.க  162ஆ.மி.க
        ----------------------------------- ---------------------------
 மிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான். இதில் தான் 'ஞாயம்" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.

 சாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், தமிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார்.
 
 'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம்  அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.

 நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

 இறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது"
       - முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.

 1968லிருந்து  காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா?

 1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.

 1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.

 இதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.

 நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது.  புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.

 1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு.  5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா?
 
 கீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½
 மடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.

 மாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது" என்றும் சமாதானம் சொல்கிறார்.

 உண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ  இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.

 உயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார்.
 
 பதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.

 காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா? கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.

 கர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.

 தமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது.
 
 தமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.

 தமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்தூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.

 மிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மறுஆய்வு மனுவெல்லாம் பயன் தராது நடுவர் மன்றம் திட்டமிட்டு, ஏமாற்றிவிட்டதை அதன் தன் முரண்பாட்டை, ஒரு சார்புத் தன்மையை எடுத்து விளக்கி, இவற்றால் 6½ கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர வெண்டும்.

 புதிய நடுவர் மன்றம் நியமித்திட ஆணையிட்டு, அது ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கிட கால வரம்பிடக் கோர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயலில் உள்ள( ளுவயவரள பரயசயவெநந) நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி 205 ஆ.மி.க தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தரவும் ஆணையிட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 131 மற்றும் வௌ;வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் துணை கொண்டு வழக்கை தமிழக அரசு  தொடுக்க வேண்டும்.

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT