உடனடிச்செய்திகள்

Sunday, April 30, 2017

செங்கிப்பட்டியில் நாளை (01.05.2017) மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்!

செங்கிப்பட்டியில் நாளை (01.05.2017) மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்!
அனைத்துலகத் தொழிலாளர் நாளான மே 1 - அன்று, (01.05.2017), தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு, மே 1 – தொழிலாளர் நாளை - தமிழ்த்தேசியத் தொழிலாளர்களின் – காவிரி நீர் மறுப்பால் வாழ்விழந்து நிற்கும் உழவுத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கான நாளாக கடைபிடிக்கின்றோம்.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி கடை வீதியில் மாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் மற்றும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிகழ்வில் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார். பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு நிகழ்வைத் தலைமை தாங்கி நடத்துகிறார்.

பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச. அருள்தாசு, ரெ. கருணாநிதி, க. காமராசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பி. தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT