மே – 1 உழைப்பாளர் நாள் (01.05.2013) அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
சென்னை
சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையிலுள்ள த.தே.பொ.க. தலைமை அலுவலகம் எதிரில் காலை 10.30 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி முழக்கங்கள் எழுப்ப, கூடியிருந்த தோழர்கள் அதை எதிரரொலித்தனர். இந்நிகழ்வில், த.தே.பொ.க. – த.இ.மு. நிர்வாகிகளும், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட உணர்வாளர்களும் பங்கேற்றனர். பின்னர், த.தே.பொ.க. அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில், தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிதம்பரம்
சிதம்பரம் காசுக்கடைத்தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு த.தே.பொ.க. தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ம.கோ.தேவராசன், சிதம்பரம் கிளைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், காட்டுமன்னார்குடி கிளைச் செயலாளர் தோழர் சிவ.அருளமுதன், தோழர் பா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் மே நாள் முழக்கங்கள் எழுப்ப, த.தே.பொ.க தோழர் ச.மணிவண்ணன் கொடியேற்றினார்.
ஓசூர்
ஓசூர் இராமநகரில் காலை 10 மணியளவில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள் தலைமையில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து கொடி ஏற்றி வைத்துப் பேசினார். தோழர் வ.கனகராஜ் நன்றி கூறினார்.
தஞ்சை நகரம்
தஞ்சை நகரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு 10 இடங்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.
கலைஞர் நகர் கிளை சார்பாக காலை 10.30 மணியளவிலும், கோரிக்குளம் கிளை சார்பாக காலை 11.00 மணியளவிலும் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுகளில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க.கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.
பூக்காரலாயம் கிளை சார்பாக காலை 11.30 மணியளவில், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியையும், நகரத் துனைச் செயலாளர் தோழர் தமிழ்ச் செல்வன் த.இ.மு. கொடியையும் ஏற்றி வைத்துப் பேசினர். அண்ணா நகர் முதல் தெரு கிளை சார்பாக பிற்பகல் 12.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார். தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் லெ.ராமசாமி த.இ.மு.கொடி ஏற்றி வைத்தார்.
இந்திரா நகர் கிளை சார்பாக பிற்பகல் 1.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சிவராசு த.இ.மு.கொடி ஏற்றி வைத்தார். இரங்கநாதபுரம் கிளை சார்பாக மதியம் 01.30 மணியளவில் தஞ்சை நகரச் துணைச் செயலாளர் தோழர் தமிழ்செல்வன் த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்தார். அண்ணா நகர் ஏழாவதுத் தெரு கிளை சார்பாக மதியம் 2.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார். பழைய பேருந்து நிலையம் பழக்கடை கிளை சார்பாக மாலை 06.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.
வடக்கு வாசல் – பொதுக்கூட்டம்
வடக்கு வாசல் கிளை சார்பாக மாலை 06.30 மணியளவில் வடக்குவாசல் நான்கு வழிச் சாலையில் தமிழீழம், தமிழகம் செய்ய வேண்டியது என்ன கொள்கை விளக்க மே நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை நகர துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்செல்வன் தலைமையேற்றார். தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.சிவராசு, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், லெ.இராமசாமி, தமிழக இளைஞர் முன்னணி நடுவன் குழு உறுப்பினர் தோழர் க.செந்திறல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். வடக்கு வாசல் கிளைச் செயலாளர் தோழர் ந.புண்ணியமூர்த்தி நன்றி நவின்றார்.
பூதலூர் ஒன்றியம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு 25 இடங்களில் நடைபெற்றது. காலை 9 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் செந்தில்குமரன், த.தே.பொ.க. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.தேவதாசு, தோழர் கு.சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிறைவில், செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில், மே நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினர்.
குடந்தை
குடந்தையில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு, குடந்தை, சாமிமலை, தேவராயன்பேட்டை ஆகிய 3 இடங்களில் சிறப்புற நடைபெற்றது.
குடந்தை ஆழ்வான் கோயில் தெரு சந்திப்பில் காலை 10 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, குடந்தை நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். சாமிமலை தெற்கு வீதி – திருமஞ்சன வீதி சந்திப்பில் காலை 10.45 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. சாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். தேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில், காலை 11 மணியளவில், நடைபெற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். மூன்று இடங்களிலும், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடி ஏற்றி வைத்தார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன், தோழர் கோ.வளவன் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
மதுரை
மதுரை செல்லூர் தாகூர் நகர் நுழைவு வாயிலில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தோழர் செரபினா கொடியேற்றி கருத்துரை வழங்கினார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் மேரி நன்றி கூறினார்.
முருகன் குடி
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் முருகன்குடியில் மே நாள் விழா காலை 10.00 மணியளவில் நடைபெற்றது,அதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளை செயலாளர் அரா.கனகசபை கொடியேற்றினார். பின்னர் மே நாள் முழக்கங்கள் எழுப்பட்டது. துறையூரில் காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி கிளை செயலாளர் இளநிலா கொடியேற்றினார்.
பரமக்குடி
பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் முருகன் தலைமையேற்றார். ஆசிரியர் சவுந்திரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கொடியேற்றி வைத்து கருத்துரை நல்கினார். தோழர் இளங்கோ(த.தே.பொ.க.) நன்றி கூறினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்று விழா 02.05.2013 அன்று காலை தொடங்கி நடைபெற்றுது. காலை 10 மணியளவில் தொடங்கிய கொடியேற்று விழா, சோழகம்படடி, தெம்மாவூர், காரடிவயல், திருமலைராயபுரம், திருமலைப்பட்டி, செங்களுர், காட்டுக்கோட்டைப்பட்டி, உலங்காத்தான்பட்டி, கொத்தம்பட்டி, கிள்ளுக்கோட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்றது.
மாலை கிள்ளுக்கோட்டையில், ‘ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில், தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆரோக்கியசாமி தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். தோழர் இலட்சுமணன் நன்றி கூறினார்.
(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)
Post a Comment