காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கக் கோரி
காவிரி உரிமை மீட்புக் குழு
சார்பில்
டெல்டா மாவட்டங்களில்
ஆர்ப்பாட்டம்
“இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ்
கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை
திறந்துவிட கட்டளை இடு!
உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை
தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிடு!
தமிழக அரசே, கர்நாடகத்திடமிருந்து
தமிழகத்திற்குரிய பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு! “
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 3.12.2013 அன்று தமிழக டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை
11.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப் பாளாரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர்
பெ.மணியரசன் தலைமையேற்றார்.
”இந்திய அரசே! இந்திய அரசே! காவிரி
தீர்ப்பாயத் தீர்ப்பை ஏட்டு சுறைக்கா
யாக்காதே! மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! உடனே அமைத்திடு! இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே!
எஞ்சியுள்ள 26 டி.எம்.சி தண்ணீரை
கர்நாடகத்திட மிருந்து உடனே பெற்று கொடு! தமிழக அரசே! கடிதம் போட்டது
போதும், காவிரி நீர் வந்திடுமா? வழக்குப் போட்டால் போதுமா? வாய்க்காலில் தண்ணீர்
வந்திடுமா? தமிழக முதல்வரே! அனைத்துக் கட்சி குழுவை அழைத்துக் கொண்டு
பிரதமரை சந்தித்து வலியுறுத்து” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு
துரை. பாலகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் திரு உதயகுமார், தமிழ்நாடு விவசாய சங்கம்
மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர்
திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் பொறுப்பாளர்
புலவர் தங்கராசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் அ.நல்லதுரை, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் தலைவர்
திரு. ஜலந்தர், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர்
தோழர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இவ் ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட திரளான
உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு
சார்பில், காலை 10.30 மணியளவில், வடக்கு வீதி தலைமை அஞ்சலக
வாயிலில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், ”இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியத்தை
உடனே அமை! அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ் கர்நாடகத்திட மிருந்து தமிழகத்திற்
குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு! தமிழக அரசே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய
பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு!’’ என்பன உள்ளிட்ட முழக்கங்கள்
விண்ணதிர எழுப்பப் பட்டன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச்
செயலாளர் திரு முடிவண்ணன், ம.தி.மு.க. குமராட்சி ஒன்றியச்
செயலாளர் திரு பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர்
திரு. தங்க.கென்னடி, மனித நேய மக்கள் கட்சி நகரப் பொறுப்பாளர்
திரு ஜமால் உசேன், நாம் தமிழர் கட்சி நகர பொறுப்பாளர் திரு
இராமதாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க
செயற்குழு உறுப்பினர் திரு விடுதலைச்செல்வன்,
மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு
மாவட்டத் தலைவர் திரு கீ.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்க நகரத்
தலைவர் திரு.இரா.ராகவேந்திரன்,தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப்
பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சிப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி
ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத்தின்
அடாவடிக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும், காவிரி உரிமையில் தமிழக அரசின்
மெத்தனப் போக்கைக் கண்டித்தும் , இந்திய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள
உழவர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தொடரக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள், மாணவர்கள், இன உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்தார்.
திருச்சி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய
அரசை வலியுறித்தியும் ,கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை
பெற்றுத்தர தமிழக அரசை
வலியுறுத்தியும் காவிரி உரிமை
மீட்பு குழு சார்பில் திருச்சியில் இன்று
காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மலர் மன்னன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
மாவட்டச் செயலாளர் தோழர் இந்தரஜித், ம.தி.மு.க. சார்பில் திரு.
சேரன், புலவர் க.முருகேசன், தந்தைப் பெரியார் திராவிடர்
கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு, த.ஒ.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர்
நிலவழகன், பெரியார் பாசறை - தோழர் அன்பழகன், விவசாயிகள் சங்கம் திரு.
அய்யா. ம.ப.சின்னத்துரை, தோழர் ரெ.சு.மணி (தமிழ்க் கலை இலக்கியப்
பேரவை), தோழர் இராசா ரகுநாதன் (த.க.இ.பே.)
உள்ளிட்ட திரளான உணர்வாளர்களும், உழவர்களும், இதில் கலந்துக் கொண்டனர்.
நாகப்பட்டினம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய
அரசை வலியுறுத்தியும், கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை
பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும்
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்
நாகப்பட்டினத்தில் காலை 11.00 மணியளவில் நாகப்பட்டினம் கோட்டை வாசலிருந்து
பேரணியாக புறப்பட்டு தொடர்வண்டி நிலையம் வழியாக சென்று தலைமை அஞ்சலக
முன்பு பேரணியை முடிந்தனர்
பேரணிக்கு திரு காவிரி தனபால் தலைமையேற்றார். பின்பு
தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு
வலிவளம் சேரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்
திரு இறை.திருவரசமூர்த்தி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர்
குடந்தை அரசன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் திரு
பேர.முரளிதரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் கு.பெரியசாமி, தமிழ்நாடு உழைப்போர் இயக்கம்
திரு இடங்குடி பாண்டுரங்கம், திரு ஆறுபாதி. கல்யாணம், குறள் அரசு கழகம் திரு
சுகுமாரன், திரு பேர.த.செய ராமன், நல்லாசிரியர் திரு ஜெகன்நாதன்
உள்ளிட்ட பொறுப்பாளர் கள் கண்டன உரையாற்றி னர்.
சுமார் 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளும்
தமிழின உணர்வாளர்களும் பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக்
கோரியும், கர்நாடகத் திடமிருந்து தமிழ்நாடிற்கு
வரவேண்டிய 26 டி.எம்.சி.பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புக் குழு
சார்பில் திருவாரூரில் காலை 11.00 மணியளவில் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மு.சேரன் தலைமையேற்றார்.
திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் திரு
வரதராஜன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர்
திரு செயராமன், விடுதலை தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர்
குடந்தை அரசன், நீடாமங்கலம் விவசாயிகள் மன்றத் தலைவர்
துரைராஜன், பாரதிதாசன் சங்க திருவாரூர் மாவட்டத்
தலைவர் திரு பழனிவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்ட உள்ளிட்ட திரளான
உணர்வாளர்களும், உழவர்களும், கலந்துக் கொண்டனர்.
Post a Comment