உடனடிச்செய்திகள்

Saturday, July 11, 2009

நாளை(12.07.09) திருச்சியில் ”தமிழ்த் தேசியம்” சிறப்பு மாநாடு

தமிழ்த் தேசப் பொதவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நாளை ”தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு” நடைபெறவுள்ளது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரிஸ்டோ ஓட்டலில் இம்மாநாடு நடைபெறுகின்றது.

காலை 9 மணிக்குத் தொடங்கும் இம்மாநாடு இசை நிகழ்ச்சி, புகைப்படக் காட்சி, ஓவியக் காட்சி, கருத்தரங்கம், பாவீச்சு என மாலை வரை தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மாலை 6 மணிக்கு தொடங்கும் நிறைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT