தி.மு.க. குண்டர்களை கைது செய்!
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
சென்னை, 11.08.2010.
செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
மாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர்களை குண்டர்கள் தாக்கியது கடும் கண்டனுத்துக்கு உரியது. காவல் துறை உடனே குண்டர்களை கைது செய்ய வேண்டும்
குறள் இனியன் .சிவ
Post a Comment