போராடும்
பார்வையற்ற மாணவர்களுடன்
தமிழக அரசு
பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்
மனித மாண்புள்ள சமுதாயத்துக்கான அடையாளங்களில் ஒன்று
மாற்றுத் திறனாளிகளை அச்சமூகம் எவ்வாறு மதிக்கிறது என்பதாகும். மனித நேய ஆட்சிக்கு
அடையாளமாகவும் அது அமைகிறது.
ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைத் தமிழக அரசு
அணுகும் முறை இங்கு மனித நேய ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாணவர்களும்,
பட்டதாரி இளையோரும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பார்வையற்ற
இளையோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், உதவித் தொகையை உயர்த்த வேண்டும்
என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்து இப்போராட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள்.
அவர்களை அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிவுடன்
கவனிக்க வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது. இந்நிலையில் 19.09.2013 அன்று சாலை
மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத்
தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம்
குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல்
கொடுமையானது. இதனைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
போராடும் பார்வையற்ற திறனாளிகளிடம் தமிழக அரசு பேச்சு
வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறேன்.
தோழமையுடன்
இடம் : சென்னை கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைக்
கட்சி
Post a Comment