உடனடிச்செய்திகள்

Saturday, May 3, 2014

“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை!

 


தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை!

மே 1 – உழைப்பாளர் நாளன்றுதமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்.தே.பொ.. – த.இ.மு. கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

சென்னை


சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் காலை 10 மணியளவில்.தே.பொ.கொடியேற்ற விழா சிறப்புற நடைபெற்றது. மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், த.தே.பொ.க. தலைவர் தோழர்பெ.மணியரசன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.தே.பொ.சென்னை செயலாளர் தோழர்தமிழ்ச்சமரன்தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்அதன்பின்,அங்கிருந்து .தே.பொ.கொடியுடன் வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற தோழர்கள்..நகர்தலைமை அலுவலகத்தை அடைந்தனர்அங்குமே நாள் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.அங்கு நடைபெற்றக் கூட்டத்தில்.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .அருணபாரதிதொடக்கவுரையாற்றினார்., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயன்.ஆனந்தன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கு கூடியிருந்த தோழர்களிடையேதலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய மே நாள்உரையின் எழுத்து வடிவம்:

அன்பார்ந்த தோழர்களுக்கு புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுத்த பாட்டாளிகளின்போராட்டத்தைமே நாளன்று நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறோம்இவ்வாண்டும் அதேபோல் நினைவுகூ கூடியிருக்கிறோம். மே நாள் ஈகியக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மட்டுமின்றிதமிழகமெங்கும் உள்ள பல்வேறு இடதுசாரிஅமைப்புகள்தொழிற்சங்கங்கள் மே நாளைக் கொண்டாடி வருகின்றன.

1880களில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தினர், 12 லிருந்து16 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டார்கள்இந்தக் கொடுமையை எதிர்த்துஒரு நாளைக்கு 8மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற செயல்பாடுகள், 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையைமுன்வைத்து சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றதுஅப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொழிலாளிகள் பலியானார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். 8மணி நேர வேலை உரிமையைத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றதன் நினைவாகவேமே நாள்ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.

ஆனால்மே நாள் வெறும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வலியறுத்தும் நாள் மட்டுமல்ல.அது தேசிய விடுதலையையும் வலியுறுத்துகின்ற நாளாகும்எவ்வளவோ நெருக்கடிகள் இருந்த போதும்,தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் மே நாள் பேரணிகளை நடத்தினர்.

ஆனால்தமிழ்நாட்டில் தொழிற்சங்கமும் அரசியலும் பிரிக்கப்பட்டுள்ளதுஇந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடம் சென்னைதான்திரு.வி..அதை 1918-இல் தொடங்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கடைபிடிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்ட மண் தமிழ் மண். 1923-ஆம் ஆண்டு சிங்கார வேலர் முதல் முதலாக சென்னை கடற்கரையில் மே நாள் பொதுக்கூட்டம் நடத்தினார். எந்த முற்போக்குக் கருத்துகள்வந்தாலும்அதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுகின்ற இனமாக தமிழினம் விளங்குகிறது என்பதன்அடையாளம் அதுஆனால்தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.

சி.பி.எம். – சி.பி.போன்ற இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்ற தொழிற்சங்கங்கள்வெறும் பொருளாதாரக்கோரிக்கைகளுக்காக மட்டும் போராடும் தன்னலக்குழுக்களாக இருக்கின்றன.

தமிழீழப் படுகொலையை எதிர்த்துபோர் நிறுத்தம் கோரி சில தொழிலாளர்கள் தன்னார்வத்துடன்போராடினார்கள்ஆனால்எந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அமைப்பு வழியாக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன? பட்டினிப்போர் நடத்தின? பி.எச்..எல்., சிம்சன்நெய்வேலி அனல் மின்நிலையம் என எல்லா இடங்களிலும்போர் நிறுத்தம் கோரி தொழிற்சங்கங்கள் என்னப் போராட்டம்நடத்தின? காவிரி நீர் வராததால், 25 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதுஇதைஎதிர்த்துஎத்தனை தொழிற்சங்கங்கள் அமைப்புவழியாகத் தொழிலாளர்களைத் திரட்டிப்போராடியிருக்கின்றனதொழிற்சங்கங்களை அரசியல்படுத்தாதன் கோர விளைவு இது!

வர்ண சாதி ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை ஆகிய இரண்டும் இந்தியாவின் தனித்த கூறுகள். இவற்றைப் புறந்தள்ளிய இடதுசாரிக் கட்சிகள்பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும்முன்வைக்கும் இந்தியத் தேசியக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டன.  ஒரு சீட்டுக்கும் இரண்டுசீட்டுக்கும் வேண்டி நிற்கும் ஒரு அரசியல் தலைமை இருந்தால்தொழிற்சங்கத் தலைமை மட்டும்எப்படி சரியாக இருக்கும்முதலாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு வரும்தொழிற்சங்கத் தலைமைதான் இருக்கும்இவ்வாறுதான்தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணம் இங்குசீரழிக்கப்பட்டு விட்டது.

சமூக மாற்றத்திற்கான புரட்சி நடக்கும்போதுதான்புரட்சிகரத் தொழிற்சங்க இயங்கங்களும் வளரும்.நமக்கான சமூக மாற்றம்தமிழ்த்தேசியமேதமிழ்நாடு விடுதலையே!

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தனது காலனி நாடுகளில் கொள்ளையடித்தவற்றைக்கொண்டுதொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்ததுஎனவேஇலண்டன் தொழிலாளர்கள் யாரும்ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கத்தைக் கண்டிக்கவில்லைஇத்தகைய தொழிலாளர்களை,காரல் மார்க்ஸ் ‘தொழிலாளர் பிரபுக்கள்’ (Labour aristocrats) என்றார்அதுபோலஇன்றைக்கும் இங்குதொழிலாளர் பிரபுக்கள் இருக்கிறார்கள்இந்திய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டும்காணாத தொழிலாளர் பிரபுக்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்குள்ளான ஓர் ஒருங்கிணைவுஅதை குறுகிய இனவாதம்என்கிறார்கள் சிலர்இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும் பெருந் தேசிய இனவாதம் பேசுபவர்களாக,இன்னொரு இனத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 77 இலட்சம் பேர் வாழும்இசுரேல் சிறுபான்மையல்ல. 44 இலட்சம் பேர் உள்ள நார்வே சிறுபான்மையல்ல.நாசபையில்இந்தியாவுக்கு சமமாக வாக்களிக்கின்றன இந்நாடுகள்ஆனால்உலகெங்கும் 12 கோடி பேரையும், தமிழ்நாட்டில் 7 கோடி பேரையும் கொண்ட தமிழர்களை சிறுபான்மை என்கிறார்கள்எங்களைஅடக்காதே ஒடுக்காதே என்று நாம் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து ஒருங்கிணைகிறோம்அதைஇனவாதம் என்கின்றனர்இதை நாம் முறியடிக்க வேண்டும்நமக்கான சமூக மாற்றம்தமிழ்த் தேசியப்புரட்சியேஅதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிறைவில்.தே.பொ.பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றி கூறினார்.இந்நிகழ்வில்திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரம்
தஞ்சை புதுஆற்றுச் சாலையிலுள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. கொடியை தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு அவர்களும், த.இ.மு. கொடியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை அவர்களும் ஏற்றி வைத்தனர். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை உள்ளிட்ட தோழர்கள், கோபிகுளம், பூக்கார லாயம், முனியாண்டவர் காலனி, அண்ணா நகர், இரெங்கநாதபுரம், கலைஞர் நகர், பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கொடியேற்றி வைத்து உரையாற்றினர். நிறைவில், வடக்குவாசல் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு த.தே.பொ.க. தஞ்சை செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். நிகழ்வில், த.தே.பொ.க. தஞ்சை துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் லெ.இராமசாமி, கலைஞர் நகர் த.தே.பொ.க. செயலாளர் தோழர் மா.சீனிவாசன் வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் மு.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.


வேதாரண்யம் வட்டம், கடிநல்வயலில் உள்ள ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலையில் உப்புத்தொழிலாளர்கள் சார்பில் மே நாள் விழா எழுச்சியாக நடைபெற்றது.

பல நூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த உப்புத் தொழிற்சாலை முதலில் விம் கோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன் பிறகு தாரங்க தாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. அதற்கும் பிறகு டால்மியாவின் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் (ஜி.எச்.சி.எல்) நிறுவனத்தால் வாங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

நிர்வாகம் கைமாறினாலும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஒரே தலைமையின் கீழ் “ விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் ” என்ற பெயரிலேயே இயங்குகின்றது. கடந்த 34 ஆண்டுகளாக தோழர் கி.வெங்கட்ராமன் அச்சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். நமது தமிழக தொழிற்சங்க முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கமாக அது செயல்பட்டுவருகிறது. 

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே நாள் பேரணி 01.05.2014 மாலை 5.30 மணியளவில் பன்னாள் , அரசுப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது. 

பேரணிக்கு தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

சங்கச் செயலாளர் தோழர் இரா.தியாகராசன் வரவேற்புரையாற்றினார். பன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு வி.கே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு,ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற ஜி.எச்.சி.எல் அதிகாரி திரு,வி.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணிக்கு சங்கத் துணைத் தலைவர் தோழர் காமராஜ், துணைச் செயலாலர் தோழர் வாசு, சங்கப் பொருளாளர் தோழர் இளங்கோவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஜி.எச்.சி.எல் தொழிலாலர் சங்கத்தின் செயலாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியின் முன்னால் தஞ்சை செல்வராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் செல்ல, உப்புத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏறத்தாழ முன்னூறு பேர் மே நாள் முழக்கங்கள் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர். 

பேரணி செல்லும் பாதையெங்கும் ஆங்காங்கே தொழிலாளர் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மற்றும் சங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்பினரும் , ஆசிரியர்களும் குளிர்பானம் அளித்தும் தோழர் கி.வெ அவர்களுக்கு சால்வை , மாலை அணிவித்தும் சிறப்பித்தனர். 

மாலை புறப்பட்ட பேரணி 5 கிலோமீட்டர் கடந்து இரவு 10.30 மணி அளவில் கடிநல்வயலில், ஆலை வாயிலை அடைந்தது. 
அங்கு அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே நாள் முழக்கங்கங்களுக்கிடையே தோழர் கி.வெங்கட்ராமன் தமிழக தொழிற்சங்க முன்னணியின் கொடியை ஏற்றிவைத்து மே நாள் உரையாற்றினார். 

சி.பி.எம் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியத்தலைவர் தோழர், வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் தோழர்.இரா. தியாகராசன் நன்றி உரையாற்ற இரவு 11.30 மணி அளவில் மே நாள் விழா நிறைவுற்றது.

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி, நந்தவனப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராஜசேகர் உள்ளிட்ட திரளான தோழர்கள் இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகத் திரண்டுச் சென்று, செங்கிப்பட்டி, சாணூரப்பட்டி, காதாட்டிப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டேன்பட்டி, பூதலூர், விருதராயன்பட்டி, புதுப்பட்டி, வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.  

புதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, மேலத்திருவிழாப்பட்டி, காமாட்சிபுரம், பெரியார் சமத்தவபுரம், வெண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.இ.மு. துணைத்தலைவர் தோழர் க.காமராசு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, த.தே.பொ.க. தோழர் மலைத்தேவன் ஆகியோர், ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, பாளையப்பட்டி, கண்டப்பட்டி ஆகிய இடங்களில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.

தஞ்சை ஒன்றியம்
தஞ்சை ஒன்றியத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.முருகையன், த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, வல்லம்புதூர் கிளைச் செயலாளர் தோழர் சி.தனசேகர் ஆகியோர் வல்லம், வல்லம்புதூர், முன்னியம்பட்டி, உருங்குளம், வாகரக்கோட்டை ஆகியப் பகுதிகளில் கொடியேற்றி வைத்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில்காலை 8.15 மணிக்கு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு த.தே.பொ.மூத்தத் தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். மே நாள் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக“ என தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா முழக்கங்கள் எழுப்பத.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக த.தே.பொ.க. சிதம்பரம் நகரச்செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம்மே நாள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க.தோழர்கள் ச.மணிவண்ணன்சி.ஆறுமுகம்பா.பிரபாகரன்செந்தில்தமிழக உழவர் முன்னணி தோழர்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர் மு.சம்பந்தம், தமிழக மாணவர் முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள்  ஆ.யவனராணிசெ.ரோகேஷ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூரில் இராம் நகரில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் செந்தில் மாறன் எழுச்சி முழக்கங்கள் எழுப்ப,தோழர்  முருகப்பெருமாள் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். தோழர்  சுப்பிரமணியன் மே நாள் குறித்து உரையாற்றதோழர் முத்துவேலு நன்றியுரையாற்றினார்.  

குடந்தை

குடந்தை தியாக இராமசாமி தெருவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சாமிமலை த.தே.பொ.க. செயலாளர் தோழர் திருவரசன், த.இ.மு. செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாமிமலை

சாமிமலை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் திருவரசன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தோழர் தமிழ்த்தேசியன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.   

தேவராயன்பேட்டை

தேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணிக் கொடியை தோழர் மனோகரன் ஏற்றி வைத்தார்.

மதுரை

மதுரை செல்லூர் தாகூர் நகரில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் இரெ.இராசு தலைமையேற்றார். மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி முன்னிலை வகித்தனர். தோழர் முருகேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் அருளர் மே நாள் குறித்து உரையாற்றினார்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் பார்த்திபராசன் தலைமையேற்றார். ஈரோடு த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், கட்சிக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தோழர் இராசய்யா மேநாள் குறித்து விளக்கவுரையாற்றினார். தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.  த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி திருமலைஇராயபுரத்தில் கொடியேற்றி வைத்தார். காரடிவயல், தெம்மாவூர் ஆகிய பகுதிகளில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.மணிகண்டன், தெம்மாவூர் த.தே.பொ.க. தலைவர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கிள்ளுக்கோட்டை பகுதியில், த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் திருப்பதி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் தோழர் தங்கமணி முன்னிலை வகித்தார். காட்டுக்கோட்டைப்பட்டி, செங்களுர் ஆகிய பகுதிகளில் குன்றாண்டார் கோயில் த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.

த.தே.பொ.க. ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் பாலதண்டாயுதபாணி திருமலைப்பட்டியில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தனர். கிளைச் செயலாளர் தோழர் கருப்பையா முன்னிலை வகித்தார்.


பெண்ணாடம்

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் திரு. பழனிவேல், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் தோழர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மே நாள் குறித்து உரையாற்றினர். நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு நன்றி கூறினார். துறையூரில் த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், தோழர் இராமகிருஷ்ணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.  சாத்துக்குடல் பகுதியில், த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் இளநிலா த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.   


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவி)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT