உடனடிச்செய்திகள்

Monday, May 5, 2014

சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு கருத்தரங்கம்.சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு கருத்தரங்கம். தோழர். கி.வெங்கட்ராமன் எழுச்சி உரை !
 
சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம். 04.05.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் ஓமகுளத்தில் உள்ள நந்தனார் கல்வி கழக அறக்கட்டளை மட வளாகத்தில் நடைபபெற்றது. 

அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜாநந்தர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி/எஸ்.ட்டி ஆசிரியர், அலுவலர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்திற்கு திரு.ஏ.ஜி. மனோகர் தலைமை தாங்கினார்.

திரு.செ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினார். மூத்த வழக்கறிஞர் திரு.பி.கோபாலக்கிருஷ்ணன், நந்தனார் கல்விக் கழக செயலாளர் திரு.டிஇராமமூர்த்தி, லயன்ஸ் கிளப் தலைவர் . பேரா கே.வி.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திரு.வி.பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கத்தில் ”தமிழக வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் சாதனைகள்” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் தோழர். கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

இரண்டு மணி நேர கருத்துரையில் தோழர்.கி.வெ அவர்கள் அயோத்திதாசர் – சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் அரும்பெரும் சமூகப் பணிகள், மாந்த நேய விழுமியங்கள், சாதி ஒழிப்பு, போராட்டக் களங்கள், வாழ்வியல், அரசியல் பண்பாடு, கல்விப் பணி, எழுத்தாற்றல் பேச்சாற்றலின் ஆளுமைகள் , மறைக்கப்பட்ட சமூக மதிப்பீடுகள் குறித்தும், அச்.சான்றோர்களின் இன்றையத் தேவை குறித்தும் ஆழ்ந்த சிறப்பான உரையாற்றினார்.

நிறைவாக திரு.எஸ்.சித்தானந்தம் நன்றி கூறினார். நிகழ்வினை பேரா.அ.அன்பானதன், திரு.அ.இராஜலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கருத்தரங்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக உழவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி,சகஜாநந்தா நற்பணி மன்றம், நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழக மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும், திரளான உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT