உடனடிச்செய்திகள்

Saturday, October 11, 2014

இந்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று! திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில், தொடர்வண்டி மறியல் போராட்டம் - தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!


தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று!
தமிழர்களுக்கு 80 விழுக்காடு வேலை வழங்கு!

2014 திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில்,
தொடர்வண்டி மறியல் போராட்டம்!


தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் முதல் கூட்டம், சென்னை க.க. நகரிலுள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில், இன்று (11.10.2014) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, இயக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த அமைப்பின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்த அரசியல் அறிக்கையை, பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்வைத்தார். அமைப்புப் பணிகள் குறித்த வேலை அறிக்கையை தலைவர் தோழர் பெ.மணியரசன் முன்வைத்துப் பேசினார். விவாதங்களுக்குப் பின், அவை நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், “தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் திசம்பர் 12ஆம் நாள், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல்) தொடர்வண்டிகள் மறியல் போராட்டம் நடத்துவதென ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், பெருந்திரளான தமிழின உணர்வாளர்களையும், பொது மக்களையும் பங்கேற்கச் செய்வதற்கானப் பணிகளில் உடனடியாக ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT