உடனடிச்செய்திகள்

Saturday, April 9, 2016

கலைஞர் கருணாநிதி குறித்த வைகோவின் விமர்சனத்திற்கு தோழர் பெ.மணியரசன் கண்டனம்!


கலைஞர் கருணாநிதி குறித்த
வைகோவின் விமர்சனத்திற்கு கண்டனம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள் சென்னையில் கலைஞர் கருணாநிதி குறித்துஅரசியல் விமர்சனம் செய்த நேர்காணல் பேச்சில் (06.04.2016), கலைஞரை சாதிக் குறிப்பிட்டு கிண்டல்செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு காலமும் அவர் சாதி வெறியராகவோ,சாதியவாதியாகவோ அடையாளம் காணப்படவில்லை. இப்பொழுதும், மேற்கண்ட தமது தவறானவிமர்சனத்திற்கு கலைஞரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவரவேற்கத்தக்கது.

கலைஞர் கருணாநிதி குறித்த விமர்சனத்தில் அவர் பிறந்த சாதியையும் – வேறொரு தொழிலையும் குறித்துவைகோ பேசியதற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாய் தொடர்ந்து வந்த சாதி உணர்வு முற்போக்காளர்கள் உட்படஅனைவரது ஆழ் மனத்திலும் அறிந்தோ அறியாமலோ உரைந்து கிடக்கிறது. ஓர் உளவியல் வெப்பம்உருவாகும் போது, உரைந்து கிடந்தது உருகி, தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறது.

அடிப்படையாக, சாதி என்பது ஒரு மன அழுக்கு! தமிழர் அறம் கொண்டும் சமத்துவக் கருத்தியல்கொண்டும் அவ்வப்போது, மனத்தைத் தூய்மைப்படுத்தினால்தான் சாதி மறையும்.

தமிழ்நாட்டு அரசியலில் சாதியை தனக்குச் சாதகமாகவும், தனது அரசியல் எதிரியை சாடவும் பயன்படுத்திவரும் சீரழிவுப் பண்பாடு நீண்டகாலமாகத் தொடர்கிறது. அனைவரும் இந்த சாதி குறித்து இழிவு செய்யும்சீரழிவு விமர்சன முறையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

“ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்”
என்ற பெரும்பாவலர் பாரதியார் வரிகளை அண்ணன் வைகோ அவர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது நலம்.

“தமிழ் இந்து” தமிழ்த்தேசியத்தைச் சாடுவதேன்?
தமிழ் இந்து நாளேடு தனது சிறப்புக் கட்டுரை ஒன்றில் (08.04.2016), வைகோ அவர்கள் கலைஞரைச் சாதிகுறித்து விமர்சித்தது தவறு என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளது.
 அது சரி!
ஆனால், “அன்றைய அ.தி.மு.க. உருவாக்கத்தில் தொடங்கி, இன்றைய தமிழ்த் தேசிய அரசியல்வரையிலான கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் சாதிக்கும் முக்கியப் பங்கிருக்கிறது” என்று கூறுகிறது.
இதில் மட்டுமின்றி, அவ்வப்போது பல்வேறு கட்டுரைகளில், சந்தடி சாக்கில் தமிழ்த்தேசியத்தைவிமர்சிப்பதில் தமிழ் இந்து மிகை உற்சாகம் காட்டுகிறது.

“தமிழ்த்தேசியம்” என்பது தமிழ்நாட்டு அரசியல் – சமூகவியல் அரங்கில், புதிதாக எழுந்து வரும் ஒருகருத்தியல். இதை ஏற்றுக் கொண்ட அமைப்புகள் பல. தனி நபர்களும் ஏராளமானோர். தமிழ்த் தேசியஅமைப்புகளில் அல்லது தனி நபரில் யார் சாதி அடிப்படையில் கலைஞரை விமர்சித்தார்கள் என்றுசுட்டிக்காட்டி எழுதினால், அது ஒரு விமர்சனமாக இருக்கும்.

அ.தி.மு.க. உருவான போது, கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் சாதிக்கு முக்கியப் பங்கிருந்தது என்றுகூறியதில், ஒரு கட்சி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதுபோல், தமிழ்த் தேசிய அமைப்பில், எது சாதிஅடிப்படையில் கருணாநிதியை எதிர்க்கிறது என்று கூறாமல், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலையேகுற்றம் சாட்டுவது ஞாயமா? தமிழ்த்தேசியத்தின் மீது அத்தனை எரிச்சல் ஏன்?

தமிழ்த்தேசியம் என்பது, தமிழினத்தின் அரசியல் முகம், பண்பாட்டு முகம்! இதில், குறைபாடுள்ள தமிழ்த்தேசிய அமைப்புகளை விமர்சிக்கவும், குற்றம்சாட்டவும் அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், பொத்தாம்பொதுவில் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப்படுத்துவது போல் சந்தடி சாக்கில் குறைகூறுவது நேர்மையன்று.

தமிழ்த்தேசியம், “தமிழர் அறம்“ என்ற அடித்தளத்தின் மேல் நிற்கிறது. தமிழர் அறம் என்பது, மனிதர்கள்அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்பதாகும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT