புதிய தலைமுறை ஊடகத் தடையை
தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு அரசு, தனது அரசுக் கேபிள் பட்டியலில் இருந்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சியை நீக்கியிருப்பது, சனநாயக விரோத – சர்வாதிகாரப் போக்காகும். ஒருவேளை, புதிய தலைமுறை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி செயல்பாடுகளை வெளியிட்டால், அது அந்தத் தொலைக்காட்சியின் சனநாயக உரிமையாகும்.
ஆளும்கட்சியான தி.மு.க.வின் செய்திகளை மிக அதிகமாக மட்டுமின்றி – ஒருதலைச் சார்பாகவும் வெளியிடும் தொலைக்காட்சிகளை அனுமதித்துள்ளீர்கள். ஆட்சியாளர்கள் விரும்பும் அளவிற்கு செய்திகள் வெளியிடவில்லை என்பது ஒரு குற்றமல்ல!
தமிழ்நாடு அரசு உடனடியாக மறு ஆய்வு செய்து, தனது கேபிள் பட்டியலில் மீண்டும் புதிய தலைமுறையைச் சேர்க்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Post a Comment