உடனடிச்செய்திகள்

தலைமை

அமைப்பு

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தனிநபர் இயக்கமல்ல. தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான வளர்ச்சியில் பங்காற்றும் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு மற்றும், அரசியல் முடிவுகளை எடுக்கும் வகையிலான தலைமைச் செயற்குழு ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் கூட்டுத் தலைமை அமைப்பாக த.தே.பே. செயல்படுகின்றது. அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு, சனநாயக முறைப்படி பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்படுகின்றது.



 
தோழர் பெ.மணியரசன் 

 தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
ஆசிரியர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மாதமிருமுறை இதழ்

தோழர் பெ.மணியரசன் 1970களில் தஞ்சை வட்ட சி.பி.எம். செயலாளராக வீரியத்துடன் பணியாற்றியவர் ஆவார். இந்திரா காங்கிரசின் எமர்ஜென்சியின் போது தலைமறைவாக இருந்து, தஞ்சை பகுதியில் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிய தோழர் பெ.மணியரசன், சங்க்காலத் தமிழ்க் கலை இலக்கியப் போக்குகள் குறித்தும், சமகால இலக்கியப் போக்குகள் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். தமிழ்த்தேசியம் என்ற தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோட்பாட்டை கூர்மைப்படுத்தியதில் பெரும் பங்கு தோழர் பெ.ம.வுக்கு உண்டு.

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மையை எதிர்த்தும் பேசியதாக தோழர் பெ.மணியரசன் மீது தமிழக அரசு பலமுறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவராகவும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியராகவும் பணயாற்றி வருகின்றார். 


தோழர் கி.வெங்கட்ராமன் 

 பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
இணை ஆசிரியர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி


தோழர் கி.வெங்கட்ராமன் இந்திய மாணவர் சங்கத்திலும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்லும் முக்கியப் பொறுப்புகள் வகித்து ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சி.பி.எம். கட்சி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். உழைக்கும் மக்களை தொழிலாளர் இயக்கமாக அணிதிரட்டுவதில் கூடுதல் பங்காற்றியவர் ஆவார். இந்திய – தமிழகச் சூழல்களில்  உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விவாதங்கள் வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ்ச் சமூகத்தின் ஆவணங்களாகப் போற்றத்தக்கவை ஆகும்.

தற்போது, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராகவும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியராகவும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகராகவும் பணயாற்றி வருகின்றார். 

VOICE OF INDIAN said...

எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?
எங்களுக்கு புரியவில்லை
நான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால்
நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே!
என்ன புரியவில்லையா?
மீன் பிடித்து தரவேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்கிறேன்
இன்னும் புரியவில்லையா?
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு வழி செல்லித்தரலாமே!
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஒரு இந்திய குடிமகன் தனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை இலஞ்சம் கொடுக்காமல் அடைய வழிகாட்டுவது.
நம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.
நம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
சீசன் தேவைகள் குறிப்பாக கல்விக்கடன் போன்று அந்த அந்த நேரங்களின் தேவைக்கு பலன் பெறுவது எப்படி என்று சொல்லித்தருவது.
இன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம்
நாம் செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்
உடனடியாக செயல்படுவோம்.
இத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu ,blogspot .com எனும் வலைப் பூவில் தொடருங்கள் --
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT