உடனடிச்செய்திகள்

ஊடகம்


தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கொள்கை இதழாக தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் மாதமிருமுறையாக வெளிவந்து கொண்டுள்ளது. கட்சியின் தொடக்ககாலத்தில், 1986இல் கண்ணோட்டம் என்ற பெயரில் வெளிவந்த இதழ் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து தற்போது மாதமிருமுறை இதழாக வெளிவந்து கொண்டுள்ளது. ததமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிலைப்பாடுகள், போராட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்ச் சமூகம் குறித்த பல்வேறு குற்பிடத்தக்க ஆய்வுகளையும் தமிழர் கண்ணோட்டம் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து தனக்கென ஓர் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

இணையம்: http://tamizharkannotam.blogspot.com
கீற்று இணையத்தில் படிக்க:
www.keetru.com/index.php?option=com_content&view=section&id=22&layout=blog&Itemid=148

எதேச்சதிகாரக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து 2010 செப்டம்பரில் தொடங்கிய அராபிய எழுச்சிக்கு மாற்று ஊடகங்களே முக்கியக் காரணமாக விளங்கின.

தமிழக மக்கள், தமிழீழ மக்கள், புலம் பெயர்ந்த தமிழீழ தமிழக மக்கள் என உலகெங்கும் தமிழ் மக்களும், பிற தேசிய இன மக்களும் நடத்தி வருகின்ற போராட்டங்களையும், மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும் பதிவு செய்யவும், பரப்புரை செய்யவும், மீள் கட்டமைக்கவும் இவ்வகை மாற்று ஊடகங்கள் அவசியம் என்பதை உணர்ந்து, அராபிய எழுச்சி சிரியாவை பற்றிக் கொண்ட மார்ச் 15 அன்று முதல் கண்ணோட்டம்இணைய இதழ் செயல்தளத்திற்கு வந்தது. இவ் இணைய இதழ் தமிழ் இனம், மொழி நலன் காக்கும் செய்திகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடவும், இது சார்ந்த விவாதங்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இணையம்: http://www.kannotam.com

கட்சியின் நிலைப்பாடுகளையும், தமிழ்ச் சமூகம் குறித்த ஆய்வுகளையும் வெளிக் கொணரும் வெளியீடுகளைக் கொண்டு வரும், நிறுவனமாக பன்மைவெளி வெளியீட்டகம் செயல்படுகின்றது. 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT