மொழிவழித் தாயகம் பிறந்த 50ஆம் வருட பொன்னாள் !
தமிழக பெருவிழாக் கொண்டாட்டம்
7-12-2006
தமிழகம் பிறந்த ஐம்பதாம் ஆண்டு பெருவிழா சென்னை தியாகராய நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 7-12-2006 அன்று தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேனிசை செல்லாப்பாவின் தமிழிசைக் கச்சேரியும் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களின் உரைவீச்சும் நடந்தது. தமிழ் தேசியக் கவிஞர்களின் பாவீச்சு நடைபெற்றது. தமிழர் கண்ணேட்டத்தின் வெளியீட்டாளரும் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினருமான தோழர் அ.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். வடக்கெல்லை போராட்டம் பற்றி தோழர் நெய்வேலி பாலு அவர்கள் உரைவீச்சு நடத்தினார். விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியின் முனைவர் யோகீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு பேசி சிறப்பித்தார். தமிழகம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரைநிகழ்த்தினார். தமிழக எல்லை போராட்டங்களில் கலந்து கொண்டு போராடிய தலைவர்களை நினைவுகூர்ந்து விழா சிறப்பிக்கப்பட்டது
Post a Comment