உடனடிச்செய்திகள்

Sunday, April 29, 2018

மெரினாவில் திரள்வோம்!

மெரினாவில் திரள்வோம்!
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஏறுதழுவல் உரிமையை மீட்ட புரட்சிக் களமான மெரினா கடற்கரையில், காவிரி உரிமைக்காக இன்று (ஏப்ரல் 29) மீண்டும் ஒன்று கூடல் நடைபெறுகின்றது.

சென்னை மெரினா கடற்கரை - உழைப்பாளர் சிலை அருகில் மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது!

வாருங்கள் தமிழர்களே! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com




போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT