இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக பெண்ணாடத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில், நேற்று(11.08.2014) மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ‘சமற்கிருத எதிர்ப்பு’த் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முருகன்குடி த.தே.பொ.க. செயலாளர் தோழர் அர.கனகசபை தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், பெண்ணாடம் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவில், தோழர் இரா.அறிவுச்செல்வன் நன்றி கூறினார்.
Post a Comment