உடனடிச்செய்திகள்

Saturday, August 9, 2014

சாமிமலையில்‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!


இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் – குடந்தை வட்டம் – சாமிமலை, தேரடி அருகில், 08.08.2014 அன்று மாலை நடைபெற்ற ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் ம.திருவரசன் தலைமையேற்றார். 

தோழர் த.சிவக்குமார் (த.தே.பொ.க) வரவேற்புரையாற்றினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

தமிழக மாணவர் முன்னணித் தோழர் கு.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT