ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றக் கோரி
நாளை(08.04.09) சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பு
நாளை(08.04.09) சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பு
சென்னை - 17, 07.04.09.
இலங்கை அரசு இரசாயனக் குண்டுகள் வீசி ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறது. அடுத்து நச்சுப் புகைக் குண்டுகளை வெடித்து பல்லாயிரம் மக்களைக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
ஐ.நா.மன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள இரசாயன மற்றும் நச்சுப்புகைக்குண்டுகளை ஈழத் தமிழ்ப் பொதுமக்கள் மீது இலங்கை அரசு வீசுவது மனித குலத்திற்கு எதிரான கொடிய குற்றச்செயலாகும்.
இக்கொடிய குற்றச்செயலைச் செய்திட இலங்கை அரசுக்கு எல்லா வகை உதவிகளையும் இந்திய அரசு செய்து வருகிறது. தமிழினத்திற்கும் மனிதகுலத்திற்கும் எதிரான இந்திய அரசின் இந்தத் துரோகச் செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
08.04.2009 புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈழத்தமிழர்களைக் காக்கவும் போர் வெறியர்களை கண்டிக்கவும் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. கலந்து கொள்கிறது. மனிதநேயர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment