“தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே கல்வி, வேலை,தொழில்,வணிகம்
வெளியாரை வெளியேற்று” பரப்புரை இயக்கம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் அலுவலகத்தில் 02.10.2009 அன்று தோழர் பழ. இராசேந்திரன் தலைமையில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் கி. வெங்கட்ராமன் , நா.வைகறை, குழ. பால்ராசு, கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், மா.கோ.தேவராசன், ச.அர. மணிபாரதி, க. காமராசு, பி.முருகையன், வழக்கறிஞர் தனஞ்செயன், க. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் புகுந்து, இந்திய அரசு அலுவலகங்கள், இந்திய அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.
இரயில்வே, வருமானவரி அலுவலகங்கள், உற்பத்திவரி (எக்சைஸ்) அலுவலகங்கள், பி.எச்.இ.எல்., போன்ற பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளி மாநிலத்தவர்களையே அதிக எண்ணிக்கையில் இந்திய அரசு வேலைக்குச் சேர்க்கிறது.
தனியார் தொழில் நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும், வெளி மாநிலத்தவர்களையே அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கிறார்கள். சென்னையில் உணவு விடுதிகளில் கூட பிறமாநிலத்தவரே அதிகமாக வேலை பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள தன்நிதிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்நிதிக் கல்லூரிகள் ஆகியவற்றில் வெளிமாநில மாணவர்களை அதிகமாகச் சேர்க்கிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆண்பெண் இருபாலார்க்கும் கிடைக்கவேண்டிய தமிழக வேலை வாய்ப்புகள் பறிபோய், அவர்கள் வேலையின்றித் திண்டாடுகிறார்கள். தமிழக மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் கல்வி வாய்ப்பை இழக்கிறார்கள்.
மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை வேலை மற்றும் மாணவர் சேர்க்கையில் சேர்ப்பதால், மொழி , இன அடிப்படையில் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன.
அண்மையில் திருப்பூரில் வடநாட்டு முதலாளிக்குச் சொந்தமான மெரீடியன் உள்ளாடை உற்பத்தி ஆலையில் ஒரிசாவைச் சேர்ந்த தொழிலாளிகள் தமிழகத் தொழிலாளிகளைத் தாக்கிப் படுகாயப்படுத்திய நிகழ்வு செய்தி ஏடுகளில் வந்தது. அத்தொழிற்சாலையில் சிங்களர் ஒருவர் பொது மேலாளராக உள்ளார் என்பது மேலும் வேதனை தருவதாகும். அந்தச்சிங்களர், குற்றம் புரிந்த ஒரிசாத் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளார்.
மயிலாப்பூர் இரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் இலட்சுமி என்ற தமிழ்ப்பெண் தமிழில் முன்பதிவுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தபோது, பணியிலிருந்த பீகாரைச் சேர்ந்த ஊழியர் “இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதிக்கொடு” என்று சொல்லி அப்படிவத்தைக் கசக்கி அப்பெண்ணை நோக்கி வீசியுள்ளார்.
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள இந்துஸ்த்தான் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளார்கள்.
எந்த இடத்திலும் மிகை எண்ணிக்கையில் வேற்று இனத்தார் வந்து தொழில் மற்றும் கல்விக் கூடங்களில் குவியும்போது இதுபோன்ற இன மோதல்கள் வரவே செய்யும். வேடிக்கை என்னவென்றால் இதில் பாதிக்கப்படுபவர்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் இனியும் இந்த அநீதிகளைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தமிழகத் தொழில் வணிகம் ஆகியவற்றில் மார்வாரி - குசராத்தி சேட்டுகளின் ஆதிக்கம் மேலும் மேலும் மேலோங்கி வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழகத் தொழில் வணிகத்தில் மலையாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
மொழிவாரி மாநிலப் பிரிவினைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக 1956 நவம்பர் 1 -ஆம் நாள் தமிழ்நாடு வடிவமைக்கப்பட்டது. அப்போது பல்வேறு தமிழ்ப்பகுதிகளை இழந்துள்ளோம் என்பது ஒருபுறம் இருக்க, இந்தச் சட்டத்தின் நோக்கங்களைக் குப்பைக் கூடையில் தூக்கி வீசுவதுபோல் பிறமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது.
தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு உருவான நாளான 2009 நவம்பர் 1-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 15-ஆம் நாள் வரை “தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே கல்வி, வேலை தொழில் வணிகத்தில் முன்னுரிமை” என்ற பரப்புரை இயக்கம் நடத்த தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானிக்கிறது.
“மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை” இயக்கத்தின்
கோரிக்கைகள் வருமாறு:
1.தமிழகத்தில் தமிழக அரசு, இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்துக்கல்வி நிலையங்களிலும் 85 விழுக்காடு மாணவர் இட ஒதுக்கீடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும்.
2. இந்திய அரசு, தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் அலுவலகங்கள், தொழிலகங்கள் முதலியவற்றில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கவேண்டும்.
3. தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களும் வெளிநாட்டினரும் நடத்தும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் முதலியவற்றில் தமிழர்களுக்கு 51 விழுக்காடு மூலதனப் பங்கு அளித்தால் தான் உரிமம் வழங்க வேண்டும். அவ்வாறு மூலதனப் பங்களிக்காத நிறுவனங்களின் உரிமங்களை நீக்க வேண்டும்.
4. 1956 நவம்பர் 1-ஆம் நாளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளிறே;ற வேண்டும்.
5. தமிழ்நாட்டில் பிறமாநிலத்தவர்கள் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடைவிதிக்க வேண்டும்.
மேற்கண்ட உரிமைகளை நிலைநிறுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள் உரியவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்து பரப்புரை இயக்கம் வரும் நவம்பர் 1- முதல் 15 வரை தமிழகமெங்கும் நடத்துவதெனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானிக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்கள் பெருக்கவும் /துடைக்கவும் பணி புரிய வைக்கப்பட்டு, பிற மாநில பெண்கள் மற்ற எல்லா வீலைகளுக்கும் பணி அமர்த்த்தப்படுவதை போன்ற கேவலம் வேறு மாநிலத்த்தில் உண்டா..?
ஏர் இன்டியா தவிர்த்து., எல்லா விமான சேவைகளிலும் பிற மாநிலத்த்தவறே உள்ளனர்., கேவலம்
தமிழ் நாட்டின் தலமை செயலகத்தில் உள்ள பிற மாநிலத்த்தவரின் எண்ணிக்கை என்ன தெரியுமா..?
தமிழனை வாழ வீடு தமிழ்நாட்டிலாவது ...................
Post a Comment