பூண்டி மாதா திருக்கோயிலுக்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு!
இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார்.
முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தஞ்சை ஒன்றிய செயலாளர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்ன்னி தலைவர் தேவதாசு, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ச.காமராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க. செய்தி பிரிவு, படங்கள் : ஸ்டாலின்)
Post a Comment