கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வலியுறுத்தி, சென்னையில் இன்று (25.09.2012) காலை 10.30 மணியளவில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன்முற்றுகையிடப்பட்டது.
சேவ் தமிழ்ஸ் இயக்கப் பொறுப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழக தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல் ஆறுமுகம், எஸ்.பி.பி.ஐ. தென்சென்னை மாவட்டச் செயலாளர் திரு. உசைன், தோழர் தியாகு, உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க் கனல், த.தே.பொ.க. தலைமை அலுவலகச் செயலர் தோழர் கோபிநாத், தோழர் தமிழ்ச் சமரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தோழர்கள் அனைவரும் தற்போது, நுங்கம்பாக்கம், வடக்குமாடவீதியிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
( செய்தி: த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா )
தொடரட்டும் மக்கள் போராட்டம்! கூடங்குளம் மக்களின் போராட்டம் வெல்ல நமது வாழ்த்துக்கள்!
Post a Comment