உடனடிச்செய்திகள்

Friday, June 24, 2016

“ஏழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் அறிமுக விழா !



ழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் அறிமுக விழா !


சூன் 26 - ஞாயிறன்று கோவையில் நடக்கிறது..!



தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்,நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும்,தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழா வருகின்ற வரும் ஞாயிறு (சூன் 26) அன்று கோவையில் நடைபெறுகின்றது.

சூன் 26 - ஞாயிறு மாலை 5 மணியளவில், கோவை தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெறும் இவ்விழாவிற்கு, பாண்டியர் பேரியக்கத் தலைவர் தோழர் கோப்மா. கருப்பசாமி தலைமையேற்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்க கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் பொன். சந்திரன், எழுத்தாளர் மு. சந்திரகுமார், தமிழர் நடுவம் தலைவர் திரு. செல்வ பாண்டியர் ஆகியோர் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் திலகர். செங்குட்டுவன் நூலை வெளியிடுகிறார்.

வழக்கறிஞர்கள் கலையரசன், சந்திரன், தமிழர் தொழில் முனைவோர் இணையம் தலைவர் திரு. க. தங்கராசு, கோவை திருப்பூர் தொழில் முனைவோர் சங்கச் செயலளர் திரு. வே. தரைசாமி, தமிழர் தாயகம் கட்சி திரு. செட்டி. அசோக் பண்ணாடி, இளந்தமிழர் இலக்கிய மன்றச் செயலர் திரு. க. சங்கவி, கொங்கு இளைஞர் பேரவை திரு. பி.கி. வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தோழர் ஸ்டீபன் (த.தே.பே.) நன்றி நவில்கிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT