“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..!
தமிழின உணர்வாளரும் ஓவியருமான கேசவனின் “தென்நதி தென்றல்” என்ற தலைப்பிலான காவிரி குறித்த தன்னோவியங்கள், சென்னையில் நாளை (01.08.2017) முதல் ஆகத்து 15 (15.08.2017) வரை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரிலுள்ள அம்பாசிடர் பல்லவா விடுதியின் (30, மாண்டீத் சாலை), லா கேலரி - கலை அரங்கில் நாளை மாலை நடைபெறும் இதன் தொடக்க நிகழ்வில், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. பெ. மணியரசன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். ஓவிய ஆசிரியர் திரு. ஜனாதிபதி வரவேற்புரையாற்றுகிறார்.
கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர் திரு. க.சி. நாகராசன், சென்னை ஆசான் நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் திரு. சுனிதா விபின்சந்திரன், துணை முதல்வர் திரு. ஜோதிமேனன், பெல் நிறுவன முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. க. துரைக்கண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். நிறைவில், ஓவியர் திரு. வீ. கேசவன் ஏற்புரையாற்றுகிறார்.
நாளை (01.08.2017) தொடங்கி ஆகத்து 15ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை 11.30 மணி முதல், மாலை 7 மணி வரை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்படுகின்றன.
இந்நிகழ்வுக்கு, தமிழின உணர்வாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வருகை தர வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தொடர்புக்கு : வீ. கேசவன் - 9677093844
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment