சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள் - சிறப்புக்கூட்டம்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.
இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், 2018 பிப்ரவரி 25 - தமிழ்த்தேசிய நாளையொட்டி “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில், தமிழ்நாடெங்கும் சிறப்புக் கூட்டங்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியேற்ற நிகழ்வுகளும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 28 அன்று, மாலை சிதம்பரத்தில் தமிழ்த்தேசிய நாள் கொடியேற்றம் மற்றும் தமிழர் தற்காப்பு அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
சிதம்பரம் போல் நாராயனன் தெருவில் நடைபெற்ற “தமிழர் தற்காப்பு அரசியல்” – சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் பா. பிரபாகரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் வரவேற்றார். பேரியக்க மூத்த தோழர் ச. மணிவண்ணன், தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி தோழர் க. வேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணி மாணவரணி அமைப்பாளர் தொழர் செ. செயப்பிரகாசு, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா ஆகியோர் உரையாற்றினர். தோழர் அ. கலைச்செல்வன் நன்றி கூறினார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment