இந்திய அரசே! இராணுவத்தை அனுப்பாதே! காவிரியை அனுப்பு!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைக்கும் தஞ்சை விமானப் படைத்தள முற்றுகைப் போர்!
காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை!
அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்து இனப்பாகுப்பாடு காட்டாதே!
காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே!
உச்ச நீதிமன்றமே!
இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே!
காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே!
தமிழ்நாடு அரசே!
இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்குத் துணை போகாதே! சொந்த மக்கள் பக்கம் நில்!
தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் (Constitution Bench) அமைக்க ஏற்பாடு செய்!
காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே!
காவிரிசட சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திடு!
காவரி இல்லாமல் வாழ்வில்லை
களம் காணாமல் காவிரி இல்லை!
தஞ்சை விமானப்படைத் தளத்தை
முற்றுகையிடும் அறப்போராட்டத்திற்கு
வாருங்கள் தமிழர்களே!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002
Post a Comment