ஈரோட்டில் இந்து நாளேடு தீவைத்து எரிப்பு
த.தே.பொ.க., பெ.தி.க. தோழர்கள் கைது
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அகட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நேற்று கோவையில் பெரியார் தி.க., ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 80 பேர் 'இந்து' அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நாளேட்டை தீவைத்துக் கொளுத்தி கைதாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியா "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில், 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராடவிடர் கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் தீவைத்து கொளுத்தினர். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெ.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.
Post a Comment