சேலத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், 14-௧0-2008
சேலம், 14-௧0-2008
சிங்கள அரசிற்கு உதவி வரும் நயவஞ்சக இந்திய அரசைக் கண்டித்து சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிங்கள பங்காளி தமிழன் பகையாளியா? என்ற கேள்வியோடு நேற்று 13-10-2008 அன்று இந்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பங்கேற்க மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் சேலத்தில் நடைபெற்றது.
இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்வதை உடனே நிறுத்தக் கோரியும், கொடுத்த படைக் கருவிகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழம் மலரட்டும், ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பெண்கள் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், மனித உரிமை பாதுகாப்பு மய்யம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சார்ந்தத் தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
Post a Comment