தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
தஞ்சை, 23, அக்டோபர், 2008
தஞ்சையில் இன்று மாலை அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களுக்காக போராடுபவர்களை தேச் துரோகக் குற்றத்தில் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவித்ததற்காக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடும்பாவி தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள் இன்று மாலை எரித்தனர்.
தஞ்சை ரயிலடி அருகே நடைபெற்ற இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது ஜெயலலிதாவின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்ட்டன.
Post a Comment