தூத்துக்குடி ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:21.09 AM GMT +05:30 ]
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:21.09 AM GMT +05:30 ]
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தோழர் மு.தமிழ்மணி தலைமையேற்க தோழர் கி.வெங்கட்ராமன்(த.தே.பொ.க) , தோழர் துரை.அரிமா(தமிழர் தேசிய இயக்கம்) , தோழர் மனோகர் ஆகியோர் மற்றும் தோழர் சத்தியா(த.ஒ.வி.இ) ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையினை பதிவு செய்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்திற்கான விளக்கவுரையினை சிறப்பாக மக்களுக்கு எடுத்துக்கூறினார். தோழர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றும் பொழுது பெய்த கடும்மழையினைப் பொருட்படுத்தாது தோழர்களும் தமிழின ஆதரவாளர்களும் ஆர்வத்தோடு கேட்டனர். இரவு 7.30 மணியளவில் மழை பெய்துகொண்டிருக்கும் பொழுதே தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடும் முழக்கமிட்டுக்கொண்டு கலைந்து சென்றனர்.
நிகழ்வில் இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார், மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர்கள் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் அருந்ததியரசு, சண்முகவேல் , அ.அன்புசெல்வன் மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
Post a Comment