ஈரோட்டில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு, 14-10-௨00௮
ஈரோடு, 14-10-௨00௮
ஈரோட்டில் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி தலைமை தபால் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் மோகன்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் தோழர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க), தோழர் இராம.இளங்கோவன்((பெரியார் திராவிடர் கழகம்) தலைமைக்கழக உறுப்பினர்), தோழர் சா.அர.மணிபாரதி( தமிழ்த் தேச பொதுவுடைமைக்கட்சி), தோழர் சேதுபதி (விடுதலைச்சிறுத்தைகள் ஈரோடு மாவட்ட செயலாளர்), தோழர் புலிப்பாண்டியன் (சாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி), தோழர் கலைவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), தோழர் விஜயகுமார் (தமிழக தொழிலாளர் முன்னணி), தோழர் பொன்னுச்சாமி (ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் பொழுது கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் தோழர்கள் அனைவரும் கட்டுப்பாடோடு கொட்டும் மழையின் வேகத்தை விட அதிகமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமழையிட்டனர். இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகம் , தமிழர் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போன்ற அமைப்புகள் ஈரோட்டில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 100க்கும் மேற்ப்பட்ட தமிழ் உணர்வாளர்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment