காவிரி உரிமை தொடர்வண்டி மறியல், ஐந்து
மாவட்டங்களில் தொடர்வண்டிகள் நிலைக் குலைந்தது
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் ஏற்கமறுத்து அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்தை கண்டித்து, ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம், 2012 அக்டோபர் 30ஆம் நாள் வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு அதைச் செயல்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தியும், காவிரிப் பாசன மாவட்டங்களில் 4.10.2012 இன்று முழுவதும், தொடர்வண்டி இயங்காமல் பெருந்திரள் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
தஞ்சை:
தஞ்சை
தொடர்வண்டி நிலையத்தில் காலை 9.45 மணியளவில் நாகூர்-திருச்சி தொடர்வண்டியை
மறித்தனர். காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன்
தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழக விவசாய சங்கம் தலைவர்
எம்.ஆர்.சிவசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்
பழ.இராசேந்திரன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ம.தி.மு.க
துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், தமிழக விவசாய சங்க (சின்ன சாமி பிரிவு)
ஜெகதீசன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதஞ்சை நகரச் செயலாளர் கலைச்செழியன், தமிழர்
தேசிய இயக்கம் பொன் வைத்திய நாதன், தமிழக விவசாய சங்கம் சேரன், இயற்கை வேளாண்மை
இயக்கம் கே.கே.ஆர். லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ.) மாவட்டச் செயலாளர் 400க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து
கொண்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம்
தொடர் வண்டியத்தில் பிற்பகல், சோழன் விரைத் தொடர்வண்டியை மறியல் செய்து போராட்டம்
நடத்தினர். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர்
கி.வெங்கட்ராமன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இம்மறியலில் தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக்கட்சி, ம.தி.மு.க., த.ஓ.வி, தமிழர் தேசிய இயக்கம், தமிழக உழவர்
முன்னணி, கொள்ளிடம் கீழ அணை பாசன விவசயிகள் சங்கம், காட்டுமன்னார்குடி விவசாயிகள்
கூட்டமைப்பு, தமிழக மாணவர் முன்னணி,ஆகிய அமைப்புகள் மற்றும் தமிழன உணர்வாளர்கள்
உள்பட 200க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்திற்கு வந்து மறியல் செய்து கைதாயினர்.
ம.தி.மு.க.
நகரச் செயலாளர் எல். சீனிவாசன், புவனகிரி ஒன்றியச்செயலாளர் எ.கி.எஸ்.இரவி, தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் கு. சிவப்பிரகாசம், தமிழக மானவர் முன்னணி
யமுனாராணி, தமிழக உழவர் முன்னணி மாவட்ட தலைவர், அ.கோ. சிவராமன், ஒருங்கிணைப்பாளர்
ம.கோ.தேவராசன், மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம் செயற்குழு உறுப்பினர் சரவணன்
கென்னடி, மதிவாணன் , த.ஓ.வி. மாவட்ட தலைவர் தமிழரசன், தமிழர் தேசிய இயக்கம்
மாவட்டச் செயலாளர் வை.ரா. பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் கீழ அணை பாசன சங்கத் தலைவர்
கண்ணன், காட்டுமன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இரவீந்திரன் உள்ளிட்ட
200க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்திற்கு வந்து மறியல் செய்து கைதாயினர்.
இதற்கும்
முன்னதாக சிதம்பரம் தொடர் வண்டி நிலையத்தில், தமிழக இளைஞர் முன்னணி சார்பாக காலை 7.40 பெங்களூர் செல்லும் தொடர்வண்டியை சிதம்பரத்தில்
மறிக்கப்பட்டது. .
தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற மறியலில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணியசிவா, கலைவாணன், மணிமாறன், சுகன்ராஜ், விஜயராஜ், யாழவன் உள்ளிட்ட தோழர்களை கைது செய்து காவல்துறையினர் சிதம்பரம் காவிரி அரங்கில் வைத்துள்ளனர்.
தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற மறியலில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணியசிவா, கலைவாணன், மணிமாறன், சுகன்ராஜ், விஜயராஜ், யாழவன் உள்ளிட்ட தோழர்களை கைது செய்து காவல்துறையினர் சிதம்பரம் காவிரி அரங்கில் வைத்துள்ளனர்.
பூதலூர்:
காவிரி உரிமை மீட்புக் குழு
சார்பாக தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் காலை 8.00
மணியளவில் மன்னார்குடி
சென்ற தொடர்வண்டியை பூதலூரில் மறிக்கப் பட்டது 1000த்திற்கு மேற்பட்ட விவசாயிகளும்,
பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் நடைபெற்ற மறியலில், நந்தகுமார் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஒன்றிய ஒருகிணைப்பாளர் அற்புதராசு, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் அருள்.மாசிலாமணி, மக்கள் உரிமை இயக்கம் பழ.இராஜ்குமார் உள்ளிட்ட தோழர்களை கைது செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் நடைபெற்ற மறியலில், நந்தகுமார் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஒன்றிய ஒருகிணைப்பாளர் அற்புதராசு, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் அருள்.மாசிலாமணி, மக்கள் உரிமை இயக்கம் பழ.இராஜ்குமார் உள்ளிட்ட தோழர்களை கைது செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பூதலூர் தொடர்வண்டிநிலையத்தில் காலை 9.30 மணியளவில்
எர்ணாகுளம் மற்றும் மானமதுரை விரைவுதொடர்வண்டியை தமிழக இளைஞர் முன்னணி,மகளிர் ஆயம்
தோழர்கள் மறிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர்
கைது.
தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்ற
இம்மறியலில், ஒன்றிய பொருளாளர் தோழர் தட்சணாமூர்த்தி, மகளி ஆயம் தோழர்கள்
ம.லெட்சுமி உள்ளிட்ட திரளானத் தோழர்களை கைது
செய்து ரம்யா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர்
மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் காலை 9.00 மணியளவில் காரைக்குடி – சென்னை மற்றும்
மயிலாடுதுறை – துருத்துறைப்பூண்டி செல்லும் தொடர்வண்டி மறிக்கப்பட்டு 250க்கும்
மேற்பட்டோர் கைதாயினர்.
தமிழ்நாடு விவசாய சங்கம் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இம் மறியலில் தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.தனபாலன், ஒன்றியச் செயற்குழு
உறுப்பினர் க.அரசு , ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தனஞ்செயன், நகர
செயலாளர் இரமேசு, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துகுமார், ம.தி.மு.க.
நகர செயலாளர் கோ.வி.சேகர், நம்மாழ்வார் இயக்கம் வி.ராமராசு, பாரம்பரிய எல்லை
காப்போம் இயக்கம் செயராமன், கருணையூசூல், கலைஞாயிறு பொருப்பாளர் ஆர்.இராசேந்திரன்,
மறுமலர்ச்சி உழவர் இயக்கம் சோமு.இளங்கோ உள்ளிட்ட தோழர்களை கைது செய்த
காவல்துறையினர் மங்களநாயகி திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
திருவாரூர்: நீடாமங்கலம்
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில்
திரு கிருஷ்ணசாமி (விவசாய சங்கத் தலைவர்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர்
இயக்கம்) ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற தொடர் வண்டி மறியலில் 35க்கும் மேற்பட்டோர்
கைது. பல்வேறு உழவர் இயக்கங்கள், அரசியல்
கட்சிகள் என திரளானோர் இரயில் மறியலில் கலந்து கொண்டனர்.
தஞ்சை அய்யானபுரம்:
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக தஞ்சை மாவட்டம், அய்யனாபுரத்தில் காலை 9.00
மணியளவில் தஞ்சையிலிருந்து
வந்த தொடர்வண்டி மறிக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட கைது.
தமிழர் தேசிய இயக்கம் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்களும், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும் காவல்துறையினரால் கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக,காலை 10.30 மணியளவில் திருச்சியிலிருந்து வந்த தொடர்வண்டி மறிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட கைதாயினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு
உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி தலைமையில், தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியச்
செயலாளர் க.காமராசு, வின்னணூர்பட்டி குணசேகரன் உள்ளிட்ட திரளானத் தோழர்களை காவல் துறையினரால் கைது செய்து
திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை: சாலியமங்கலம்,
அம்மாப்பேட்டை,
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பாக தஞ்சை மாவட்டம்,
சாலியமங்கலம், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களில் தொடர் வண்டி மறிக்கப்பட்டு 45க்கும்
மேற்பட்டோர் கைதாயினர். சாலியமங்கலத்தில், தோழர் பழனிவேல் (தமிழக உழவர் முன்னணி),
தலைமையில் உழவர்கள், பல்வேறு கட்சித் தோழர்கள் என 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாப்பேட்டையில் திரு செங்கொடிச் செல்லவன் தலைமையில்
நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணிப் பொதுச்செயலாளர் தோழர்
காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி தஞ்சை ந்கரச் செயலாளர் தோழர் இராமு, உள்ளிட்ட 23
தோழர்கள் கைது செய்யப்பட்டனர்
குடந்தை:
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக தஞ்சை மாவட்டம்,
குடந்தையில் காலை 08.20 மணியளவில் மைசூர் விரைவுவு தொடர்வண்டி மறிக்கப்பட்டு
50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர். விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர்,
தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்ற மறியலில், தமிழ்நாடு குடியுரிமை
பாதுகாப்பு நடுவம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், தமிழக
வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் ம.செல்வம் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினரால்
கைது செய்து இராணிமஹால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் திருச்சி –
மயிலாடுதுறை தொடர்வண்டி மறிக்கப்பட்டு 77க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர். தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் விடுதலைசுடர் தலைமையில், ம.தி.மு.க.
இரா.முருகன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை
சுந்தரவிமலநாதன், தமிழ்நாடு மக்கள் கட்சி இணைச் செயலாளர் எழிலன் உள்ளிட்ட தோழர்களை
காவல்துறையினரால் கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்பு பிற்பகல் 12.15 மணியளவில் மயிலாடுதுறை-
திருநெல்வேலி தொடர்வண்டி மறிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர்.
நாம் தமிழர் கட்சி, இளைஞர் பாசறை பொருப்பாளர் மணிசெந்தில் தலைமையில்,
த.தே.பொ.க.தோழர்கள், தமிழர் வாழ்வுரிமை கட்சி தோழர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி
தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்வண்டியை மறித்து கைதயினர்.
திருச்சி:
திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் பிற்பகல் 12.45
மணியளவில், குருவாயூர் அதிவிரைவுத் தொடர்வண்டியை, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்
மலர் மன்னன் தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
தோழர் தமிழரசன், தோழர் கோ/மாரிமுத்து, தோழர் ஆ.ஆனந்தன், மாநகரச்செயலாளர்
கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர்கள் கண்ணன், இராசேசு குமார், ம. தளவாய்
சாமி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் நாம்
தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பிரபு, திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள், தந்தை
பெரியார் திராவிடக் கழகத் தோழர், பெரியார் பாசறை தோழர்கள் உள்பட 400 க்கும்
மேற்பட்டோர் தொடர் வண்டியை மறித்து 250 பேர் கைதாயினர். இளைஞர் முன்னணி
தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Post a Comment