உடனடிச்செய்திகள்

Friday, December 21, 2012

காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்! காவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது!


காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்!
காவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது!

தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், இன்று தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

தஞ்சை
தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார்.

.தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட்த் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்ட்த் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

முன்னதாக காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் வாயிலில் நின்று,   காவல்துறையினரே கதவை பூட்டினர். அந்த நிலையில் ஒரு குழுவினர் காவல்துறையினரை தாண்டி அலுவலகத்திற்குல் சென்று அலுவலகப் பணியாளர்களை வெளியேற்றினர். அதன்போது மோதல் ஏற்பட்டு, தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் செங்கிப்பட்டி விசயகாந்த், குடந்தை செயலாளர் சரவணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அருகிலுள்ள மருத்துவமனையில் உடணடியாக அழைத்து செல்லப்பட்டு தோழர்களுக்க சிகிச்சையளிக்கப்பட்டது. தோழர் விசயகாந்துக்கு தையல் போடப்பட்டது.

காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகமும் அதல் சாலையும் முழுமையாக முற்றுகையிடப்பட்ட நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் பேசுகையில், நாம் அலுவலகத்திற்குள் செல்லாமல் மறித்து முற்றுகையிட வந்தோம். ஆனால் காவல்துறையோ அலுவலக வாயிலை பூட்டியுள்ளனர். இந்த வகையில் நமது போராட்டம் வெற்றிப் பெற்றது என அறிவித்த போது, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அடுத்த கட்டப் போராட்டத்தின் திட்டமிடல் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 28.12.2012 அன்று தஞ்சையில் நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், காலை 10 மணியளவில் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தமிழக உழவர் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று, சற்றொப்ப 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. அ.கோ.சிவராமன்ஒருங்கிணைப்பாளர் திரு. ம.கோ.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன்செயற்குழு உறுப்பினர் தங்க. கென்னடி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திரு. இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 120க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர்
திருவாரூரில் காலை 10.30 மணியளவில் உதவி செயற்பொறியாளர் அலுவளகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  போராட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையேற்றார், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு.  .கோவிந்தசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைபூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் இரா.தனபால், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் ப.சிவவடிவேல், . பாலசுப்பிரமணியன், து.ரமேசு உள்ளிட்ட திரளான்னோர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருச்சி
திருச்சியில் இன்று காலை 11.00 மணியளவில், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் அலுவலகம்  முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு .தி.மு.. அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் புலவர் முருகேசன் தலைமையேற்றபார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன், த.தேபொ.க. தோழர்கள் பாவலர் மு..பரணர், ஆத்மநாதன், இனியன், முத்துக்குமார், ஓசூர் மு.வேலாயுதம், செந்தில், செல்வக்குமார், துவாக்குடிக் கிளை செயலாளர் இலட்சுமணன், ராசாங்கம், குன்றாண்டார்க் கோயில் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் திருப்பதி, ஒன்றியச் செயலாளர் அரோக்கியசாமி, கிள்ளுக்கோட்டை தமிழக இளைஞர் முன்னணி கிளைத் தலைவர் பெருமாள், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், செயலாளர் மணிகண்டன், தமிழக கலை இலக்கியப் பேரவை மாவட்டச் செயலாளர் இராசரகுநாதன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சம்பந்தம்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT